வியாழன், 18 அக்டோபர், 2012

சட்ட அமைச்சர் குர்ஷித் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்

மிஸ்டர் கெஜ்ரிவால்....எப்படி திரும்பிப் போவீங்கன்னு பார்க்கிறேன்: சட்ட அமைச்சர் குர்ஷித் மிரட்டல்!

 மடியில் கணம் இருப்பது நல்லாவே தெரியறது
டெல்லி: தமது அறக்கட்டளை மோசடி தொடர்பாக சொந்தத் தொகுதியான பரூக்காபாத்தில் போராட்டம் நடந்த்துவோம் என்று அறிவித்திருக்கும் சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக இந்தி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சல்மான் குர்ஷித் கூறுகையில், பரூக்காபாத்துக்குப் போவதற்கு நான் ஒன்றும் விசா கொடுக்கலையே கெஜ்ரிவாலுக்கு.. அது ரொம்ப நீளமான சாலை.. மொத்தம் 300 கிலோ மீட்டர் நீளம் கொண்டது... அங்க போறது ரொம்ப எளிதானது.. உள்ளே போகிறவர் அப்படியே அதே நிலையோடு மறுபடியும் நல்ல படியா திரும்பி வரனும் என்று மறைமுகமாக மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமில்ல... புகார்களை அள்ளிவீசும்போது பேனாவில் மையைப் போட்டு எழுதுங்க.. ஆனால் தற்போது ரத்தத்தை வைத்து எழுதியிருக்கின்றனர் என்றும் சாடியிருக்கிறார்.

சல்மான் குர்ஷித்தின் இந்தப் பேச்சும்கூட சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி வன்முறையைத் தூண்டும் விவதமாக பேசியிருக்கும் சல்மான் குர்ச்ஷித் இனியும் சட்ட அமைச்சர் பொறுப்பில் நீடிக்கக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.
100 கெஜ்ரிவால்கள் வருவார்கள்..
சல்மான் குர்ஷித் மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவால், என்னைக் கொல்லுவதால் எந்தப் பயனும் இல்லை.. ஒட்டுமொத்த நாடே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் செத்துப் போனா 100 அர்விந்த் கெஜ்ரிவால் உருவாவார்கள் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: