திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த காரணை கிராமத்தில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள்
சிறுத்தை கிட்டு, அம்பேத் வளவன், தென்னவன், மாவட்ட பொருளாளர் இளையவளவன்
முன்னிலை வகித்தனர். திருப்போரூர் ஒன்றிய நிர்வாகி வெங்கடேசன் வரவேற்றார்.
தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களை அரசு கண்டறிந்து
மீட்டு, உரியவர்களுக்கு வழங்க வேண்டும்.
இதை வலியுறுத்தி
முதல்கட்டமாக வரும் 23ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை காஞ்சிபுரம்
மாவட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்து வது, அதைத் தொடர்ந்து
7ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு கலெக்டர்
அலுவலகத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் மேனகா தேவி, சேகர் பிரபு,
தேவஅருள் பிரகாசம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக