வியாழன், 14 ஜூன், 2012

ஒரு லட்சம் ஓட்டுக்கள்? குறைஞ்சா?அமைச்சர்களின் பதவிகள் கோவிந்தா

புதுக்கோட்டையில் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் முதல்வர். 1 லட்சத்தில் 1 ஓட்டு குறைந்தாலும், சில அமைச்சர்களின் பதவிகள் கோவிந்தா என்று அ.தி.மு.க. சர்க்கிள்களிலேயே கூறுகிறார்கள்.

Viruvirupu
தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் மேல் கடிதமாக கோரிக்கைகளுடன், வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து டில்லிக்கு போயுள்ள கோரிக்கைக் கடிதம், மேலதிக மண்ணெண்ணெய் வேண்டும் என்பதே.
அது பற்றி காமென்ட் அடித்திருக்கிறார் கருணாநிதி. “மத்திய அரசு எப்போதும் மண்ணெண்ணெய் அளவைக் குறைத்துக் கொடுக்கத்தான் பார்க்கும். நீங்கள்தான் சாமர்த்தியமாக செயல்பட்டு, மேலதிக சப்ளையை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்பதுதான் அவரது கூற்று.

“அமைச்சரவைக்கு சூடா.. முறுகலா.. ரெண்டு அமைச்சர் ஆர்டர்”
தமது ஆட்சியில் இதே பிரச்னை இருந்ததாக குறிப்பிட்ட அவர், அதை சமாளித்த விதம் பற்றியும் கூறியிருக்கிறார்.
“தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் அப்போது உணவுத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவைத் டில்லிக்கு அனுப்பி வைத்தோம். அவரை, அந்தத் துறையின் அமைச்சரையும், செயலாளரையும் நேரில் சந்திக்க வைத்து, கூடுதலாக மண்ணெண்ணெய் பெற்று அதனை மக்களுக்கு விநியோகம் செய்துவந்தோம்”
இதற்கு தமிழக முதல்வர் என்ன செய்யலாம்? அதையும், அவரே கூறியிருக்கிறார். “நாம் செய்தது போலவே முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தின் நகல் ஒன்றை அந்தத் துறையின் அமைச்சரிடம் கொடுத்து டில்லிக்கு அனுப்பி வைக்கலாம். அவர் அங்கு சென்று முயற்சித்துப் பார்த்தால் நிச்சயம் மண்ணெண்ணெய் கிடைக்கும்”
உணவுத்துறை அமைச்சரென்ன, அனைத்து அமைச்சர்களும் தற்போதுதான் மண்ணெண்ணையை விட முக்கியமான புதுக்கோட்டை அசைன்மென்ட் முடிந்து திரும்பியிருக்கிறார்கள். வந்த களைப்பு மாறுவதற்குமுன், அவரிடம் கையில் கேனை கொடுத்து  மண்ணெண்ணெய் வாங்க டில்லிக்கு அனுப்புவது மனிதாபிமான செயலல்ல.
பிரச்னை அது மட்டுமல்ல. புதுக்கோட்டையில் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் முதல்வர். 1 லட்சத்தில் 1 ஓட்டு குறைந்தாலும், சில அமைச்சர்களின் பதவிகள் கோவிந்தா என்று அ.தி.மு.க. சர்க்கிள்களிலேயே கூறுகிறார்கள். ஒரு லட்சம் ஓட்டுக்கள்
நாளை மறுதினம் ஓட்டு எண்ணிக்கை இருக்கிறது. அதன்பிறகுதான், மண்ணெண்ணெய் துறை அமைச்சர் மாற்றப்படாமல் இருக்கிறாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்!
நம்ம அமைச்சர்கள் ஏதோ பர்மனென்ட் ஜாப் ஒன்றில் பணியாற்றுவதுபோல அல்லவா கருணாநிதி கூறியிருக்கிறார்! அவர்களது நாற்காலிகள் ஆடும் ஆட்டம், இவருக்கு தெரியுமா?

கருத்துகள் இல்லை: