வியாழன், 14 ஜூன், 2012

நித்தி ஆஸ்ரமத்தில் கஞ்சா, மது பாட்டில், காண்டம்

 ஆஸ்ரமத்திலிருந்து பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளது. நித்யானந்தா போட்டோக்கள், சி.டி.,க்கள், பெண்கள் படத்துடன் சி.டி.,க்கள், தமிழ் வார இதழ்கள் கிடந்தன. சில இடங்களில் கஞ்சா, பீடி, மாத்திரைகள், காலி மதுபான பாட்டில்கள், காண்டம் ஆகியவையும் கிடந்தன.
கர்நாடக மாநிலம் பிடதி பிடதி நித்யானந்தா ஆஸ்ரமத்தில், சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார் வந்ததையடுத்து, கர்நாடகா முதல்வர் சதானந்தகவுடா, பிடதி ஆஸ்ரமத்தில் சோதனையிட்டு, "சீல்' வைக்கவும், நித்யானந்தா ஜாமினை ரத்து செய்து, கைது செய்யவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையில், பெங்களூரு ராம்நகர் மாவட்ட கூடுதல் கலெக்டர் அர்ச்சனா தலைமையில், பிடதி ஆஸ்ரமத்துக்குள் சோதனையிட போலீசார் சென்றனர். நான்கு மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.இரண்டாவது நாளாக, நேற்று காலை, 9 மணியிலிருந்து சோதனை துவங்கியது. அதிக நிலப்பரப்பில் ஆஸ்ரமம் அமைந்துள்ளதால் சோதனை நடத்துவதில் அதிகாரிகள் திணறினர். ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


வீடியோ பதிவு செய்யப்பட்ட பின்னர், அந்த அறை பூட்டப்படுகிறது. நேற்று முன்தினம், ஏழு அறைகளில் சோதனையிடப்பட்டு, பூட்டு போடப்பட்டது.சோதனை நடப்பதாக வந்த தகவலையடுத்து, ஆஸ்ரமத்திலிருந்து சில பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளது. நித்யானந்தா போட்டோக்கள், சி.டி.,க்கள், பெண்கள் படத்துடன் சி.டி.,க்கள், தமிழ் வார இதழ்கள் கிடந்தன. சில இடங்களில் கஞ்சா, பீடி, மாத்திரைகள், காலி மதுபான பாட்டில்கள், காண்டம் ஆகியவையும் கிடந்தன.

கருத்துகள் இல்லை: