சனி, 9 ஜூன், 2012

Arms dealer அபிஷேக் வர்மா மனைவியுடன் கைது

புதுடில்லி:சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக, ஆயுத டீலர் அபிஷேக் வர்மாவும், அவரது மனைவியும், சி.பி.ஐ., அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்திய கடற்படை தலைமையகத்தில் உள்ள ஆவணக் காப்பக அறையில் இருந்த, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய தகவல்களை வெளியில் கசியவிட்டது தொடர்பான வழக்கில், பிரபல ஆயுத டீலர் அபிஷேக் வர்மா மீது ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதற்காக, சுவிட்சர்லாந்தை சேர்ந்த, "ரெய்ன்மெட்டல் ஏர் டிபன்ஸ்'என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனத்தை, மத்திய அரசு, கறுப்பு பட்டியலில் வைத்திருந்தது. தன் செல்வாக்கை பயன்படுத்தி, கறுப்பு பட்டியலில் இருந்து, அந்த நிறுவனத்தின் பெயரை நீக்குவதாகக் கூறி, அந்த நிறுவனத்திடம் இருந்து, பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அபிஷேக் வர்மா மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அபிஷேக் வர்மாவுக்கு சொந்தமான, டில்லி மற்றும் குர்கானில் உள்ள, 10 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


கைது:இந்நிலையில், அபிஷேக் வர்மா மீதான லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், அவருக்கும், ருமேனியாவைச் சேர்ந்த அவரது மனைவி அன்சியா நியாஸ்குவுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்காக, டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமையகத்துக்கு அவர்கள் வந்திருந்தனர். இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, சரியான பதில்களை தெரிவிக்க வில்லை எனக் கூறி, இருவரையும் கைது செய்தனர்

கருத்துகள் இல்லை: