புதன், 29 பிப்ரவரி, 2012

போதை பொருள் பயன்பாடு இந்தியா முதலிடம்

புதுடில்லி: போதை பொருள் பயன்படுத்துவது மற்றும் போதை பொருட்கள‌ை மற்ற நாடுகளுக்கு கடத்துவதில் இந்தியா மையமாக செயல்படுவதாக ஐக்கிய நாடுகளின் போதை தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இண்டர்நேஷனல் ‌நார்கோடிக்ஸ் கண்ட்ரோல் போர்டின் ஆண்டு ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் ஹெராயின் போன்ற போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் மட்டும் சுமார் 40 டன் அளவிற்கு ஹெராயின் உற்பத்தியாகியுள்ளது. இதில் 17டன் அளவிற்கு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் , மீதமுள்ளவை இந்தியா வழியாக வங்களாதேசம், நேபாளம், இலங்கை , மற்றும் பாகிஸ்தான்வழியாக கடத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதன்சர்வசேத மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலர் எனவும் அதில்தெரிவித்துள்ளது. மேலும் நார்‌கோடிக்ஸ் கண்ட்ரோல் பீரோவின் ஜெனரல் இயக்குனர் மாலிக் கூறியதாவதுஊ இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள சில நகரங்களில் வசிப்போர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் .கடந்த ஆண்டு மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 24 கிலோ கோகைன் என்ற போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது உலக நுகர்வில் ஒரு சிறு பகுதி மட்டுமே. ஹெரா‌யின் போன்ற பொருட்களை இந்தியாவில்பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. 40லட்சம் டன் அளவிற்கு தெற்காசியாவில் உற்பத்தியாகியுள்ள ஹெரா‌‌யினில் சுமார் 17லட்சம் டன் அளவிற்கு இந்தியாவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் சட்ட விரோதமாக ஓபியம் பயிரிடும் நிலத்தின பரப்பளவு சுமார் 7 ஆயிரத்து 500 ஹெக்டேர் அளவாகும். 2010-ம் ஆண்டில் சுமார் ஆயிரத்து 22 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த அபின் செடியை அழிக்கப்பட்டதாவும் அந்த அறிக்‌கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: