ஞாயிறு, 24 ஜூலை, 2011

சமசீர் நூல்களை விநியோகிக்க காலநீடிபு ஏன்? சோ, வாசந்தி, வைத்தியநாதன், எச்.ராஜா, தா.பாண்டியன்

சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வழங்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். எனினும், “சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 க்குள் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு பெற்றிருக்கிறது தமிழக அரசு. இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
அச்சிட்டுத் தயார் நிலையில் உள்ள நூல்களை விநியோகிப்பதற்கு எதற்கு கால நீட்டிப்பு? நடைமுறையில் இந்தக் “காலநீட்டிப்பு” பெறுவதன் நோக்கம் இறுதித் தீர்ப்பு வரும்வரை புத்தகங்களை விநியோகிக்காமல் தடுப்பதுதான்.  மாணவர்களையும் ஆசிரியர்களையும் “இதோ.. ..அதோ” என்று இரண்டு மாதங்களாக அலைக்கழித்து வருகிறது ஜெ அரசு.

இதே காரியத்தை கருணாநிதி செய்திருந்தால் சோ, வாசந்தி, வைத்தியநாதன், எச்.ராஜா, தா.பாண்டியன் முதலான “தமிழர்கள்” தம் நாக்காலேயே நெம்பி ஆட்சியைக் கவிழ்த்திருப்பார்கள். மேற்படி அயோக்கியத்தனத்தை செய்துவருபவர் புரட்ச்சித்தலைவி என்பதால், இவர்களுடைய நாக்கு அம்மாவின் பொற்பாதங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறது.
நம் கண் முன்னால் 1.25 கோடி மாணவர்களை உருட்டிப் பந்தாடுகிறார் புரட்சித்தலைவி. பள்ளிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஒருவேளை ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைக்காக பத்து நாட்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தால், மாணவர்கள் அவர்களை ஆதரித்துப் போராடியிருந்தால் – என்ன நடந்திருக்கும்? 2 இலட்சம் அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கிறதா? அதுதான் நடந்திருக்கும்.

தமிழக மக்களைத் தனது *@# க்குச் சமமாகத்தான் ஜெ மதிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் சான்றுகள் தேவையில்லை. நீதித்துறையின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பு, மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டிலும் ஒரு *@# கூடுதலாக இருக்கலாம். அவ்வளவே.
சமச்சீர் பாடப்புத்தகங்கள் தரமானவைதானா என்று கமிட்டி போட்டு ஆராய்ந்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அம்மா போட்ட கமிட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே, 2002 பாடத்திட்டத்தின் அடிப்படையிலா பாடநூல்களை அச்சடிக்கச் சொல்லிவிட்டார் புரட்சித்தலைவி. இது குறித்த செய்தி நாளேடுகளிலும் வந்துவிட்டது. “இப்படி செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?” என்று குமுறினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. “எந்தப் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று ஐயா உத்தரவு பிறப்பித்தாலும், அடுத்த கணமே கொடுத்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் அதையும் அடிக்கிறோம் மை லார்ட்” என்று நீதபதிக்கு பதில் சொன்னார் அரசு வழக்குரைஞர். இது எப்படி இருக்கு?
“அனாவசியமாக இன்னொரு 200 கோடி செலவு வேண்டாம். சமச்சீர் பாடத்தை இந்த ஆண்டுக்கு கொடுத்து விடுங்கள். அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்” என்று நீதிமன்றம் சொல்லிவிடக்கூடுமோ என்று அம்மாவுக்கு ஒரு ஐயம். அதனால்தான் இந்த குறுக்கு வழி, தீர்ப்பு வருவதற்கு முன்னரே இன்னொரு 200 கோடியையும் செலவு செய்யச் சொல்லிவிட்டார். நீதிமன்றத்தை உப்பு மூட்டை மேல் படுக்கப் போட்டு வீக்கம் வெளியில் தெரியாதபடி அடிப்பது என்பது இதுதான். இதை மற்றவர்கள் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு. அம்மா செய்தால் அதற்குப் பெயர் துணிச்சல்.
உயர்நீதி மன்றத் தீர்ப்பு வந்தவுடனே கல்வித்துறை செயலர், அட்வகேட் ஜெனரல், அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் டெல்லிக்கு பறந்து விட்டனர். “மனு தாக்கல் செய்யும் நேரம் ராகு காலம் எமகண்டமாக இருக்க்கூடாது. வழக்கிற்கு வழங்கப்படும் வரிசை எண்ணின் கூட்டல் தொகை 9 ஆக இருக்க வேண்டும்”. என்ற இரண்டு முக்கியமான லா பாயிண்டுகளை பின்பற்றுவதில் புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் கவனமாக இருந்தனர்.
வெயிட் காட்டுவதன் மூலமாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற முடியும் என்பதனால், இந்தியாவின் சட்டத்துறை சூப்பர் ஸ்டார்களாக அறியப்படும் வழக்குரைஞர்கள்  பலரையும் விலைக்கு வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சுபரீம் கோர்ட்டில் இறக்கி விட்டிருந்தார் அம்மா. அரசியல் சட்ட வழக்குரைஞர் பி.பி.ராவ், முகுல் ரோகத்கி, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார் என்று ஒரு வழக்குரைஞர் படை அரசின் சார்பாக இறக்கப்பட்டிருந்த்து. ரோஹிந்தன் நாரிமன், ஆர்யமா சுந்தரம், ராஜீவ் தவான் உள்ளிட்ட இன்னொரு வழக்குரைஞர் படையைக் களத்தில் இறக்கியிருந்தனர் மெட்ரிகுலேசன் பள்ளி முதலாளிகள். இவர்களுடைய கூட்டமே நீதிமன்ற அறையில் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது,
ஒரு முறை நாறைகாலியை விட்டு எழும்புவதற்கே சில இலட்சங்களை கட்டணமாக வசூலிக்கும் மேற்குறிப்பிட்ட வழக்குரைஞர்கள், நேற்று நெடுநேரம் கால் நோக நின்றபடியே தடையாணை கேட்டு மன்றாடினர். எனினும் நீதிமன்றம் தடையாணை கொடுக்க மறுத்தது. “தடையாணை தராவிட்டாலும் அவகாசமாவது கொடுங்கள். சமச்சீர் பாடத்திட்ட நூல்களை 22 ஆம் தேதிக்குள் விநியோகிக்க இயலாது” என்று கூறி, ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் கோரினர்.
தயார் நிலையில் கிடங்குகளில் தூங்கும் நூல்களை எடுத்து விநியோகிப்பதற்கு எதற்கு கூடுதல் அவகாசம்? இருப்பினும், “அவ்ளோ பெரிய்ய வக்கீலுங்க, இவ்ளோ தூரம் ப்ரஸ் பண்ணி கேட்பதன் காரணமாக”, மேற்கொண்டு ஒரு பத்து நாட்களைப் போட்டுக் கொடுத்தது உச்ச நீதிமன்றம். நூல்களை விநியோகிப்பதற்கு என்று கூறி ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் பெற்ற ஜெ அரசு, இந்த அவகாசத்தை “நூல்களை விநியோகிக்காமல் மாணவர்களை இழுத்தடிப்பதற்கான அவகாசமாக” பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதையும், இரண்டு மாதங்களாக மாணவர்களைத் தெருவில் நிறுத்தியிருப்பதையும் ஜெ வின் தனிப்பட்ட குணாதிசயத்தின் விளைவாக மட்டுமே பலர் காண்கின்றனர். இப்பிரச்சினையைப் பொருத்தமட்டில் அது ஒரு அம்சம் மட்டுமே.
மேட்டுக்குடி வர்க்க மாணவர்களுக்கும், உழைக்கும் வர்க்க மாணவர்களுக்கும் பொதுவானதாக ஒரு பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கேட்டவுடனேயே, காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியது போலப் பலர் துடிக்கின்றனர். மேட்டுக்குடி வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரிக் பள்ளி கொள்ளையர்கள், பார்ப்பனிய-புதிய தாராளவாத சித்தாந்தக் குஞ்சுகள் போன்ற பலரும் இதில் அடக்கம். ஜெயலலிதா அவர்களுடைய பிரதிநிதி. எனவே, ஜெயலலிதா இதில் காட்டும் மூர்க்கத்தனம் என்பது, சர்ச் பார்க், டான் பாஸ்கோ, பத்மா சேஷாத்ரி, டி.ஏ.வி உள்ளிட்ட மேட்டுக்குடி வர்க்கத்தின் கண்ணோட்டத்திலும் குணாதிசயத்திலும் விளைந்ததாகும். அம்மையார் பிடிவாத குணம் கொண்ட ஒரு பாசிஸ்டாக இருப்பது மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கு கிட்டிய ஒரு கூடுதல் வரப்பிரசாதம்.

நாளை இதன் மீதி பகுதி தொடரும் 

கருத்துகள் இல்லை: