ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

சொந்தமாக எந்தச்சிந்தனையும் வளரவில்லை. புலிகள் வளர்க்கவும் விடவில்லை

தமிழர்களும் கொத்துரொட்டிச் சிந்தனையும்
எம்மவர்களுக்கு கொத்துரொட்டி போடுவதை தவிர வேறு என்ன தெரியும் என யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை தலையங்கத்தில் எழுதியிருக்கிறது. யோசித்துப்பார்த்தால் நம்மவர்களுக்கு அதைத் தவிர வேறு என்ன தெரியும் என  வெட்கமாகத்தான் இருக்கிறது. எதையாவது ஒழுங்காகச் செய்திருக்கிறார்களா என்று இரண்டு நாட்களாக இருந்து யோசித்துப்பார்த்தால் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் வரவில்லை. யாழ்ப்பாணத்தில் நியுமார்க்கட் கட்டிடம் அல்பிரட் துரையப்பாவினால் கட்டப்பட்டது. அது ஒன்று ஒருப்படியான கட்டிடம் மற்றயது துரையப்பா ஸ்டேடியம். அந்தத்துரையப்பாவை சாமி கும்பிட்டு வரும்போது 1976ம் ஆண்டு பிரபாகரன் ஒளிச்சிருந்து சுட்டான். அதுக்குப்பிறகு யாழ்ப்பாணத்தில் எதுவும் உருப்படியாக கட்டப்படவில்லை. ரயில் தண்டவாளங்களை கழட்டி பங்கர் கட்டி பாழக்கினார்கள். இஞ்சினியர்மார் புலிகளுக்கு பங்கர் கட்டினாங்கள். தேடிப் தேடிப்பார்த்தால் தமிழர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக எதுவும் உருப்படியாக நடைபெறவில்லை. தமிழர்களிடையே இருந்த சிறு சிறு கைத்தொழில் முயற்சிகள் எல்லாம் யுத்தத்தினால் சீரழிந்து போய்விட்டன. மிஞ்சிப்போனால் ஆங்காங்கே ஒன்றிரண்டு விடயங்கள்தான் தேறும்.
புலிக்கு கப்பம் வரி கட்டவேண்டுமென்று தேத்தண்ணிக்கடையையே மூடிவிட்டுப்போனவர்கள் பலர். புலிகள் கட்டுப்பாடுகளை விதித்த அளவு தொழில்துறைகளை வளர்க்க உதவவில்லை. அப்படி யாராவது ஏதாவது முயற்சி செய்தால் புலி பார்த்திருந்து பின்னர் அதை தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும். யாழ்ப்பாணத்தில் பேமஸாக இருந்த லிங்கம் பார் முதலாளியை மிரட்டி சர்பத் போடும் ரகசியத்தை புலி கேட்டது. பின்னர் அதுபோல புலியும் சர்பத் போட்டுப்பார்த்தும் சரிவரவில்லை. அது கைப்பழக்கம். புலிக்கு சரி வருமா?. யாரையாவது போட்டுத்தள்ளுவதென்றால் புலியை மிஞ்ச யாரு இருந்தார்கள்?.
யாழ்ப்பாணத்தில் இருந்த எத்தனையோ திறமைசாலிகள் இந்தக்கொடுமைகள் தாளாமல் வெளிநாட்டுக்கு ஓடித்தப்பி விட்டாங்கள். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் படித்து வந்த தமிழ் டாக்குத்தர்மார் கூட கடைசியில் லண்டனுக்கும் கனடாவிற்கும் ஓடிப்போயிட்டாங்கள். இப்ப தமிழ்ப்பகுதியில் சிங்கள டாக்குத்தர்மார்தான் வந்து வேலை செய்ய வேண்டியிருக்கு. சிங்கள டாக்குத்தர்மார் ஏன் வாறங்கள். தமிழ் டாக்குத்தர்மார் இல்லாதபடியால்தானே.  தமிழ்ப்பகுதியில் தமிழ்சமூகத்தின் எண்ணிக்கையும் குறைஞ்சு போச்சு. இப்போ இலங்கை முப்படைகள் இந்த இல்லாத ஏரியாக்களில் தமது முகாம்களை நிறுவி வருகிறார்கள். இப்போ அதற்கெதிராக கூக்குரல் இடவேண்டிய நிலைக்கு தமிழர்கள் வந்துள்ளார்கள்.
புலி ஒழுங்காக போராட்டத்தை நடாத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் வந்திருக்காது. புலியும் கொத்துரொட்டி வியாபாரம் மாதிரித்தான் போராட்டத்தையும் வச்சிருந்தது. வெளிநாடுகளில் இருந்த புலிகளும் தமது நிகழ்ச்சிகளில் கொத்துரொட்டி வித்து காசு சம்பாதித்தனர். ஜெர்மனியில் கேவலார் சேர்ச் திருவிழாவின் போது தமிழ்ப்பாதிரிமாரும் புலிகளுக்கு கொத்துரொட்டி விற்க அனுமதி கொடுத்திருந்தனர். நேர்த்திக்காக சாப்பாடு விநியோகிக்க பக்தர்களுக்கு புலிகள் அனுமதிக்கவில்லை. தமக்கு வியாபாரம் நடக்காது எனத் தெரிந்து அதையும் மறுதலித்தார்கள். மாவீரர் தினத்திலும் கொத்துரொட்டி வியாபாரம்தான். கரும்புலிகள் நினைவு தினத்திலும் கொத்துரொட்டி வியாபாரம்தான்.
கிளிநொச்சி புலிகளின் தலைநகராக இருக்கையில் பைவ்ஸ்டார் ரேஞ்சில் சாப்பாடுகடையை புலிகள் நிறுவியிருந்தார்கள். புலிகளின் புலம்பெயர் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் ஒன்று நகைக்கடை விளம்பரம் இரண்டாவது பலசரக்குக்கடை விளம்பரம் மூன்றாவது சாப்பாட்டுக்கடை விளம்பரம். இன்று வரை இதுதான் தொடருகிறது. தமிழர்களின் சிந்தனை இந்த மூன்றுக்குள்ளும்தான் முடக்கப்பட்டிருக்கிறது.
சொந்தமாக எந்தச்சிந்தனையும் வளரவில்லை. புலிகள் வளர்க்கவும் விடவில்லை. மற்றவனுடைய சிந்தனைகளையும் முயற்சிகளையும் புலி கைப்பற்றி ஒரு சர்வதிகாரமான போக்கை வைத்து கடைசியில் தானும் அழிந்து தமிழர்களை கொத்துரொட்டிக்கடைக்குமேலாக வளரவிடாமல் செய்து விட்டுப்போயிருக்கிறது.
என்ன செய்வது எல்லாப்பழிகளையும் புலிகளுக்கு மேல்தான் போடவேண்டியிருக்கிறது. தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லவா அவர்கள். 30வருடமாக தமிழர்களின் சிந்தனை கூட புலிகளைக்கேட்டுத்தானே வந்திருக்கிறது. ஏதாவது உருப்படியாக சிந்திக்க வேண்டுமென்றால் இன்னும் 30வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது.

1 கருத்து:

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.