இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம், `கண்டேன்.' இந்த படத்தில் ரேஷ்மி கவுதம் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நிம்மி என்ற புதுமுகம் நடித்து வந்தார். பாக்யராஜிடம் உதவி டைரக்டராக இருந்த முகில் டைரக்டு செய்து வருகிறார்.
படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில், விசேஷ அனுமதி பெற்று 2 நாட்கள் நடந்தது. அந்த 2 நாட்களும் நிம்மி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
மூன்றாவது நாள் படப்பிடிப்பின்போது, நிம்மியை காணவில்லை. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நிம்மி இல்லாததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
விசாரித்ததில், நிம்மி தன் காதலருடன் ஓடிப்போய் இருப்பது தெரியவந்தது. படப்பிடிப்பு குழுவினர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவர் ஓட்டம் பிடித்து இருப்பதை அறிந்ததும், பட அதிபரும், டைரக்டரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதுபற்றி பட அதிபர் டி.சி.எஸ். ஐதராபாத் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.
அப்புகாரில், ‘’நிம்மிக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டது. 2 நாட்கள் நடித்ததற்கு அவர் 20 ஆயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டார். மூன்றாவது நாளில், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போய் விட்டார். இதனால் எனக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிம்மியை போலீசார் கண்டுபிடித்து, என் படத்தில் அவர் நடித்து முடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக