திங்கள், 6 செப்டம்பர், 2010

வீணாக போகும் உணவு பொருளை ஏழை மக்களுக்கு இலவசமா வழங்க முடியாது




இந்தியாவில் 37 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வருகின்றனர். இவ்வளவு மக்களுக்கு அரசு இலவச உணவு வழங்குவது என்பது இயலாத காரியம் என இன்று அளித்துள்ள பேட்டியில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கூறிய உத்தரவுக்கு அதிரடியாக பதில் அளிக்கும் வகையில் இவரது பேட்டி அமைந்துள்ளது. அமைச்சரவை மாற்றம் , மற்றும் ஊழல் தொடர்பான கடும் நடவடிக்கை என முக்கிய விஷயங்களுக்கு பிரதமர் இன்று பதில் அளித்துள்ளார். பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
 
அமைச்சரவை மாற்றம் வருமா ? :  அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறேன். வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடர் முன்பாக இந்த மாற்றம் இருக்கும். இளம் வயதினருக்கு வாய்ப்பு வழங்கிட விரும்புகிறேன். நான் ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. நாட்டில் நக்சலிசம் ஊழல் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. ஏழைமக்களுக்கு இலவசமாக தானியங்களை கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை நடைமுறைப்படுத்த முடியாது. நாட்டில் 37 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்குவது என்பது முடியாத காரியம். அரசின் கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட் தலையிடக்கூடாது.
ஊழல் செய்தால் கடும் நடவடிக்கை : எனது அமைச்சரவையில் ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரவிருக்கும் காமன்வெல்த் போட்டி நல்ல முறையில் நடக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொழிற்கூடங்கள் சுற்றுசூழலுக்கு கெடுதல் இல்லாத அளவில் அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் வறுமைகள் ஒழிக்கப்படுவது மூலம் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்று சொல்ல முடியாது.
இவ்வாறு பிரதமர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு ‌கொடுத்து விட வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகேந்திரன் - dhahran,சவுதி அரேபியா
2010-09-06 15:42:35 IST
நம் நாடு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதே காங்கிரஸ் கட்சியால் தான். நாடு சுதந்திரம் ஆனதுல இருந்து நாட்ட ஆளுரீங்க. நாட்டு மக்களுக்கு சோறு கூட கிடைக்கலேன்னா நீங்க எதுக்கு நாட்ட ஆளுரீங்க. மக்களுக்கு சோறு கிடைக்காம நீங்க ஆயிரம் ராக்கெட் விட்டு என்ன புண்ணியம், உங்க பையுள காசு சேரும். நாட்டுல கருணாநிதி, ஜெயலலிதா, டாட்டா, பிர்லா, அம்பானி, மற்றும் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் மட்டும் பாலும் பழமும் சாப்புடுவாங்க, மக்கள் என்ன வெறும் வயிரோட இருகிறதா? எப்ப நீங்க இத சொன்னிங்களோ அப்பவே நீங்க இந்த நாட்டை ஆட்சி செய்ய தகுதி இல்லாதவங்க...
குணசீலன் - வேலூர்,இந்தியா
2010-09-06 15:34:11 IST
விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது என்ற காரணம் ஏற்புடையது அல்ல. 69 கோடி கடனை தள்ளுபடி செய்ததற்கு உண்மையான காரணம் எது என அவர் வாயாலே சொல்லிவிட்டார்....
சிராஜ் அம்மாபேட்டை - குவைத்,இந்தியா
2010-09-06 15:29:53 IST
ஐயா பிரதமர் அவர்களே, தங்கள் கருத்து வரவேற்க தக்கது. அதே சமயம் வறுமை கோட்டிற்கு கிழே உள்ள மக்களுக்கு தொழில் துறைகளையும் விவசாய துறைகளையும் முன்னேற்றிட பாடுபட்டால் தங்களை உலகம் போற்றும். முதலில் அ‌மெரிக்க துதிபாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். என்ன வளம் இல்லை நம் திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் வாழ்க பாரதம் வளர்க இந்திய மக்கள் ...............
மீனாக்ஷி - மதுரை,இந்தியா
2010-09-06 15:21:24 IST
This is a good Idea. It is not possible to give free food or food grains who are under the poverty line. This will make them lazy and they never come up in this life. Let Tamilnadu be the only State where every thing is given under free of cost whereas the cost of living is increasing day by day....
ramamurthi - dubai,இந்தியா
2010-09-06 15:20:14 IST
Dear Manmohan singh, Your govt can waste the food and cannot feed food for poor people? If you cannot feed please go out from power....
எழிலரசன்.நா - வேதாரண்யம்,இந்தியா
2010-09-06 15:18:15 IST
அய்யா, மன்மோகன் சிங் அவர்களே, சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லுதுன்னா , அதிகமா வீணாக போகும் உணவு பொருளை ஏழை மக்களுக்கு இலவசமா கொடுங்க அப்படினுதான் ,,37% சதவீத மக்கள் எல்லோருக்கும் கொடுக்க சொல்லவில்லை. எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு கொடுங்க போதும் . நீங்க என்ன அதிரடியா பேட்டி எல்லாம் கொடுக்க வேணாம்,...
கோபி - சென்னை,இந்தியா
2010-09-06 15:14:20 IST
இவர் இன்னும் ஏன் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்டு காலத்தை ஒட்டி கொண்டு இருக்கிறார்? இவர் கண்ணுக்கு ஊழல் பெருட்சாளிகள் தெரியவில்லையா? ஒரு கோடி இரண்டு கோடி அல்ல ஆயிரம் கோடி (மது கோடா) லட்சம் கோடி (ச்பெக்ட்ரும் ராஜா), மூடப்பட்ட போபால் , போபர்ஸ் அசிங்கங்கள், காமன் வெல்த் கேம்ஸ் லஞ்ச லாவண்யங்கள், அஸ்ஸாம் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் ஊழல், மாயாவதி முலாயம் லாலு ஆகியோரின் ஊழல், இங்கு மஞ்சத்துண்டு ஊழல் எதுவுமே தெரியாததை போல பேசும் இவரின் மறுபெயர் உத்தம புத்திரன்....
ஷேக் மைதீன் - சென்னை,இந்தியா
2010-09-06 15:11:00 IST
M.p and M.L.A mattum salary increase panuringa. mudium nu ninithal mudium....
சேகர் - சென்னை,இந்தியா
2010-09-06 15:05:34 IST
spectrum ஊழல் புகழ் ராஜா மேல உங்களால என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது....
கோபி - Tiruchirappalli,இந்தியா
2010-09-06 14:28:31 IST
"இலவச உணவு வழங்குவது என்பது முடியாத காரியம்" ஏன் முடியாது முதலில் சுவீஸ் வங்கியில் உள்ள காங்கிரஸ்காரர்கள் கருப்பு பணத்த வெளியே எடுத்தாலே இந்தியாவின் வறுமையை ஒழித்து விடலாம்....
நசிர் - சென்னை,இந்தியா
2010-09-06 14:18:42 IST
பிரதமர் அவர்களே, அமைச்சரவையில் ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறீர்கள். spectrum ஊழல் இல்லை என்கிறீர்களா?...
jeyapandian - theni,இந்தியா
2010-09-06 14:17:46 IST
i don't know he reads the news paper or not. The court asking to give the wheat which is getting rotton under Govt storage. If Govt says, all the family in india has ration card means. its possible to provide for this 35% with low price. All Lazy gove officers dont want to think and work. All interested in bribe....
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-06 14:12:12 IST
யாரும் உங்ககிட்ட வந்து பிச்சை கேட்கல பஞ்சாப் சிங்கு, நாட்ல பாடா படுத்துற விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்த போக்க ஏதாவது தீர்வு இருக்கானுதான் கேட்குறோம். போதுமான உணவு கிடங்கு இல்லாம வீணாகும் தானியங்களைத்தான் ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டுதே தவிர பிச்சை ஒன்னும் உங்கள போடா சொல்லல, ரெண்டு பொருளாதார மேதை இருக்கிங்களே தவிர இன்னும் நாட்ல வறுமை தாண்டவம் ஆடுறது கொடுமையிலும் கொடுமை. சரியான பொருளாதார கொள்கைய வகுத்து விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பண வீக்கத்தை கட்டுப்படுத்த எதாவது யோசனை பண்ணுங்க. சிங்கு இல்லாட்டி, அடுத்த தேர்தல்ல எல்லாரும் சேந்து எடுத்துராவங்க உங்கள...
shiva - erode,இந்தியா
2010-09-06 14:06:46 IST
get your ministers and all party members black money from swiss bank..... you can give free food to all peoples of india for 50 years.....swiss people and italy leads rich life from our money....this is fate of indian peoples..... still people believe congress.... (dont know whether people believes congress or congress believes ELECTRONIC VOTING MACHINE)only god knows........

கருத்துகள் இல்லை: