10 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் நிறுவப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் நோக்கில் முதல் கட்டமாக எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு அதிக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி நிறுவனங்களை தரமுயர்த்துவதற்காக நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் மூலம் அதிகளவு மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 78 தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டக் கற்கை நெறிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக