செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நேற்று நெய்வேலி கோர்ட்டில் ஆஜரானார்


நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்
கடந்த 2007-ம் ஆண்டு நெய்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக  நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு 9-6-2010 அன்று கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 5-7-2010 அன்று கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது. அதன் பின் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால்தான் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை எனக்கூறி மருத்துவ சான்றிதழுடன் கடந்த மாதம் 20-ம் தேதி நெய்வேலி கோர்ட்டில் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜரானார்.
மறு விசாரணைக்காக 6-9-2010 அன்று கோர்ட்டில் ஆஜராக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ராஜா உத்தரவிட்டார்.

அதன்படி நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நேற்று நெய்வேலி கோர்ட்டில் ஆஜரானார். அவரை வருகிற 27-9-2010 அன்று விசாரணைக்காக வாய்தா ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி ராஜா தெரிவித்தார்.
நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுடன் வக்கீல்கள் ரவீந்திரன், ராஜசேகர்,ஜெகநாதன், ஜெயபால், நடராஜன், எஸ்.ஆர்.சுமதி, பாஸ்கரன்,பாலகிருஷ்ணன், வேலாயுதம் ஆகியோர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை: