சிந்துசமவெளி என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி ஏற்கனவே டைரக்டர் சாமிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதையடு்தது தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்படி டைரக்டர் சாமி, போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் சென்னையில் பரபரப்பு நிலவுகிறது. உயிர் படத்தில் கணவரின் தம்பி மீது காதல் ப்ளஸ் காமம் கொள்வது போன்ற கதையம்சத்துடன் படம் இயக்கி சர்ச்சையை கிளப்பியவர் டைரக்டர் சாமி. அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் சிந்து சமவெளி. முதல் படத்தைப் போலவே இந்த படமும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிந்துசமவெளியில் மாமனார், மருமகளை விரும்புவதாக கதை அமைத்திருக்கிறார். மாமனார்- மருமகள் இடையே சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் தவறான அனுபவங்களை சித்தரித்து, அதனால் ஏற்படும் முடிவை காட்சிப்படுத்தியிருக்கறார் சாமி. கொச்சையான கதை என்றாலும் இச்சையான காட்சிகளை மட்டுமே நிரப்பி காசு பார்க்க நினைக்காமல், சமூகத்திற்கு சமூகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செக்ஸ் கொடூரங்களை வைத்தே பாடம் கற்பிக்க முயற்சித்திருக்கும் இந்த படத்திற்கு மாதர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு டைரக்டர் சாமியின் காரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுபற்றி சாமி, கே.கே.நகர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கோரியிருக்கிறார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் சர்ச்சைகளை சந்தித்து வரும் சாமி இதுபற்றி கூறுகையில், சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகளை எடுத்ததற்காக என் மீது ஆத்திரப்பட்டு சில மர்ம நபர்கள் என் வீட்டுக்குள் புகுந்து தாக்கினர். என் காரை உடைத்துவிட்டு ஓடிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். உண்மையில் சிந்து சமவெளி படத்தில் காட்சிகளை ஆபாசமாக காட்டவில்லை. மிகவும் யதார்த்தமாக காட்டியிருக்கிறேன். படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். படம் பார்க்காமல் கதையை மட்டும் வைத்துக் கொண்டு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். படத்தை பார்த்தால்தான் காட்சியமைப்புகள் புரியும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக