திங்கள், 19 ஜூன், 2017

கன்னித்தன்மையை மீட்டு எடுக்கும் ஆபரேஷன் ... அதிகரித்து வருகிறதா?

கன்னித்தன்மையை மீட்பதற்காக ஆபரேஷன் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக துனிஷிய சமூகவியலாளர் சாமியா எல்லவ்மி கூறுகிறார்.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான துனியாஷியா பெண்கள் விஷயத்தில் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு நாடு. ஒரு காலத்தில் பெண்கள் தவறு செய்வதை பெரும் குற்றமாக, பெரும் அவமானமாக கருதினார்கள். சமூக ஒழுக்கங்களை பின்பற்றி வந்தனர். பாரம்பர்ய பழக்கங்களை முறையாக பின்பற்றி வந்தனர். அதனால் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் பெண்களிடம் கன்னித்தன்மை உள்ளதா என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்காக அந்த கால பெரியவர்கள் சில சடங்குகளை செய்வார்கள். அதை விடாமல் தற்கால ஆண்களும் பின்பற்றி வருகின்றனர். ஆண்கள் கற்பிழந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வரும் மனைவி மட்டும் கற்புடன் கன்னித்தன்மை இழக்காமல் இருக்க வேண்டும். இது ஒரு ஆணாதிக்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது.


யாஸ்மின் (28)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பேசுகிறார், ‘நான் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன். அங்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு பல ஆண்டுகள் கணவன்,மனைவி போலவே வாழ்ந்து விட்டேன். தற்போது எனது வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்கள். இப்போது தான் எனக்கு கன்னித்தன்மை குறித்து பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் நான் கன்னித்தன்மையை மீட்பதற்கு ஆபரேஷன் செய்து கொள்ளப்போகிறேன். இதற்காகவே நான் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருந்தேன். குறைந்தது 400டாலர்கள் செலவு செய்ய வேண்டும்.(இந்திய மதிப்பில் சுமார் ரூ.30ஆயிரம்)

கன்னித்தன்மை இல்லாவிட்டால் எனது திருமணமே நின்று போகும். எனது சமூகத்தினர் என்னை கேவலமாக பார்ப்பார்கள். அதனால் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளேன்’ என்றார். ஆஸ்பத்திரியின் டாக்டர் ராச்சிட் கூறும்போது, கன்னித்தன்மை இழந்தவர்களுக்கான ஆபரேஷனை செய்ய பல டாக்டர்கள் மறுத்து வருகின்றனர். ஆனால் நான் அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அளிப்பதற்காக செய்கிறேன். இளமையில் தவறு செய்துவிட்டு இனிமேலாவது கணவனோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சேவையாக நினைக்கிறேன்.

அவர்களுக்கு ஹீமெனோபிளாஸ்டீஸ் என்ற அறுவை சிகிச்சை செய்து அவர்களின் கன்னித்தன்மையை மீட்கிறேன். வாரத்திற்கு இரண்டு ஆபரேஷனாவது செய்கிறேன் என்றார். ஹிச்சம் என்ற ஒரு பல்கலைக்கழக மாணவி உடன் படித்த மாணவரை காதலித்தார். அந்த மாணவனும் பெண்களிடம் கன்னித்தன்மை இருப்பதையே நான் விரும்புகிறேன் என்றானாம்.
அந்த மாணவி மேலும் கூறும்போது துனிஷிய பழங்கால பழக்க வழக்கங்கள் பெண்களின் செக்சுவல் வாழ்க்கைக்கு சுதந்திரம் இல்லாமல் செய்கிறது என்றார். பாருய்யா..கன்னித்தன்மையை மீட்பதற்கு ஆபரேஷன் வந்தாச்சு..! அப்ப நம்மூருக்கு எப்போன்னு கேட்கிற மைண்ட் வாய்ஸ் கேட்கற மாதிரி இருக்கு..??  லைவ்டே

கருத்துகள் இல்லை: