ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

பெண் எம்.எல்.ஏ.,வை சிறைக்கு தள்ளிய ரியல் எஸ்டேட் அதிபர்கள்

குடியாத்தம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லதா. சட்டசபையில், வெட்டிப்பேச்சு பேசாமல், சபாநாயகர் கொடுத்த நேரத்தை வீணாக்காமல் எப்போதும் மக்களின் பிரச்னைகளைப் பற்றியே பேசுவார். அப்படிப்பட்டவர், சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதானார் என்ற செய்தி பரவியதும், தொகுதி மக்களும், கட்சித் தலைமையும் அதிர்ச்சியடைந்தது.

உண்மையில் நடந்தது என்ன? : குடியாத்தம் தொகுதியில் மேல் ஆலத்தூரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக 26 ஆதிதிராவிடர் குடும்பங்களும், 10 முஸ்லிம் குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்த வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினால் தான், அதை சுற்றியுள்ள இடத்தில் பிசினஸ் செய்ய முடியும் என்ற நெருக்கடி, ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஏற்பட்டது. உடனே, வீடுகளை காலி செய்யுமாறு 36 குடும்பங்களையும் மிரட்டினர். மிரட்டலுக்கு அஞ்சாத மக்கள், "காலங் காலமாக நாங்கள் வசிக்கும் வீட்டை காலி செய்ய மாட்டோம். என்ன நடந்தாலும் சரி, எங்கள் உயிர் இந்த இடத்தில் தான் போகும்' என்றனர்.  கடைசியில், ரியல் எஸ்டேட் அதிபர்களின் கைவரிசையால் புல்டோசர் மூலம் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டரிடம் மனு தந்தனர். தொகுதி எம்.எல்.ஏ., லதாவிடம் ஓடினர். அவரிடம் நடந்த விவரத்தை சொல்லி கதறி அழுதனர். வீடு இழந்த மக்களின் பரிதாப நிலையைக் கண்டு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பும் உதவி செய்ய முன்வந்ததும், போராட்டக்குழு அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் எம்.எல்.ஏ., லதா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் நாராயணன் மற்றும் சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் மத்தியில் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் கிடைக்கும் வரை தற்காலிகமாக அதே இடத்தில் தங்கிக் கொள்ள பேச்சு நடத்தப்பட்டது.  பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், திடீரென 500 போலீசார் திபுதிபுவென பேச்சுவார்த்தை நடந்த அறைக்குள் நுழைந்ததும், அங்கிருந்த அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் கேட்ட புகாரில், லதா எம்.எல்.ஏ., உட்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு உடனடியாக மாநில தலைமை குரல் கொடுக்கவில்லை. கட்சித் தரப்பில் விசாரணை நடத்தி, எம்.எல்.ஏ., எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்தபிறகே, லதா கைதுக்கு மாநில தலைமை கண்டனம் தெரிவித்தது. கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக சென்னையில் கூட்டப்பட்டது. லதா உட்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வருக்கு தீர்மானமாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் கடந்த 17ம் தேதி கோர்ட்டில் ஜாமீன் பெற்று லதா விடுதலையானார்.  திடீரென சிறைவாசத்திற்கு  தள்ளப்பட்டதை எதிர்பார்க்காத லதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட மற்றும் மாநில தழுவிய போராட்டங்களை நடத்துவது குறித்து மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசித்து வருகிறது.

அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில், லதா மீது கைது நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் ஒரு எம்.எல்.ஏ., கோர்ட்டில், 15 நாள், "ரிமாண்ட்' செய்யப்பட்டது இதுவே முதல் முறை. மதுரை உத்தமபுரத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா எம்.பி., ரங்கராஜன் தாக்கப்பட்டார். ஆதிதிராவிட மக்களுடன் கோவில் நுழைவு போராட்டத்தை நடத்தியதற்காக நாகை எம்.எல்.ஏ., மாரிமுத்து மீதும் போலீசார் தள்ளு முள்ளு சம்பவத்தை அரங்கேற்றினர்.  அரூர் எம்.எல்.ஏ., டில்லிபாபுவின் தொகுதியில் அரசு நலத்திட்ட விழாக்களில் அவரது பெயரை இருட்டடிப்பு செய்து, எந்த விழாக்களுக்கும் அவரை அழைப்பதில்லை.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ரீதியான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், எங்கள் கட்சி எம்.எல்.ஏ., க்களை ஆளுங்கட்சி பழி வாங்குகிறது. இந்த அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இசாக் Benjamin - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-22 10:50:14 IST
Surely the Real Estate people will be suporter's of Ruling DMK paty.Nowadays CM had only time to attend Cinema Function's & making them as Party senior member's, so CM & DCM has no time to look into Public Issues. Public should react on this Issues.Still People eat the Ration Rice & Watch Free TV to put Vote by getting money. Jaihind....
Endhiran - Sydney,ஆஸ்திரேலியா
2010-08-22 10:04:40 IST
I come from the same place where this MLA comes from.She is my friend aunty. She is doing good job,but real estate goons put her in trap.What the government is going to do against the offender?...
G யுவராஜா - Bangalore,இந்தியா
2010-08-22 09:59:58 IST
திமுக விடம் இருந்து அதிகாரம் முடிவுக்கு வர போகிறது. ஆயிர மாயிரம் கோடிகளாக கொள்ளை அடித்துவிட்டும் மக்களுக்காக உழைக்கும் எண்ணம் வர வில்லையே ?...
2010-08-22 09:53:37 IST
தி மு க அழியும் காலம் நெருங்கிகுகொண்டிருக்கிறது..... மக்களே இலவசம் உங்களை சொம்பெரியக்குகிறது......
RAMGANI - SIVAKASI,இந்தியா
2010-08-22 09:46:30 IST
ஒரு எம்எல் கே இ ப் படியா...
பாலா - புதுக்கோட்டை,இந்தியா
2010-08-22 09:23:03 IST
காசிற்கு வேலை பார்க்கும் சிரிப்பு police...
BALAJI - CHENNAI,இந்தியா
2010-08-22 09:21:38 IST
இலவசம் இலவசம் என்று ஏமாந்த தமிழ் நாட்டுமக்கள் "இலை வசம் " போய் விடுவார்கள் ....ஆஹா பிரமாதம்...
பாலா - புதுக்கோட்டை,இந்தியா
2010-08-22 09:19:36 IST
லஞ்சத்தில் ஊரும் ஆளும் திமுக அரசின் மெத்தன போக்கே இச்சம்பவத்தின் ஆணிவேர்...
jeeva - singapore,இந்தியா
2010-08-22 09:01:02 IST
உண்மையை சொன்ன தினமலர்க்கு நன்றி .....
mvbala - ch,இந்தியா
2010-08-22 08:55:36 IST
IF THE POLICE WANTS TO ARREST JALEEL(RAPEKING) POLICE WANTS MANJATHUNDU PERMISION HENCE IT IS PROVED MANJATHUNDU IS INVOLVED IN EACH AND EVERY ACTIVITIES OF THIS CRIMINALS,THIS IS HIGH TIME TO TEACH A LESSON TO ENTIRE DMK GANG....
ஜிலேபி and ஜிலேபி - நிலக்கோட்டை,இந்தியா
2010-08-22 08:40:52 IST
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா............
Kim - korea,இந்தியா
2010-08-22 06:43:59 IST
என்ன கொடுமை I HATE போலீஸ் இதே திமுக MLA ஆக இருந்தால் போலிஸ் வேடிக்கை பார்க்கும் இல்லாவிட்டால் போலிஸ் அடி வாங்கும் ! சிரிப்பு போலிஸ்...
Senthil - chennai,இந்தியா
2010-08-22 06:17:09 IST
First time I am hearing about Good MLA. Great Ladha. I wish you to get well soon. Don't worry about these rowdies, god will be always there with good people. Don't spoil your health because of these rowdies....
V.SUBBARAO - SINGAPORE,இந்தியா
2010-08-22 05:18:36 IST
தமிழக 'பெருங்குடிமக்களே' நமது ஆளும் கட்சியினரின் பிற்படுத்தப்பபட்டோரின் மேலுலள்ள மாயப் பற்றும், செயல்களும். "பணமென்றால் பிணமும் வாயைத்திறக்கும்" ; இவர்கள் உயிர்பிழைத்து பறித்துக்கொண்டு ஓடிவிடுவர்....
குமார் - சிங்கப்பூர்,இந்தியா
2010-08-22 05:03:58 IST
பொய் வழக்கு போட்ட அந்த ரியல் எஸ்டேட் அதிபரை என்ன செய்தார்கள்? மிக மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்....
உணர்வில்தமிழன் - chennai,இந்தியா
2010-08-22 04:01:28 IST
தி.மு.க "கூட்டு குடும்ப" கொள்ளைகளையும்,ஆளுங்கட்சி அடாவடிகளையும்,மக்கள் விரோத போக்கினையும் - தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாக பார்த்து கொண்டுதான் இருகிறார்கள்! இலவசம் இலவசம் என்று ஏமாந்த தமிழ்நாட்டு மக்கள் அடுத்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் "இலை வசம்" போய் விடுவார்கள் என்பது நிச்சயமாகி விட்டது ! எங்கே போனீர்கள் ஜோபெட் போன்ற "ஜால்ராக்களே" வாருங்கள்-வந்து இது போன்ற ஒரு மக்கள் விரோத போக்கிற்கு முடிந்தால் உருப்படியாக ஒரு கருத்து சொல்ல முடியுமா என்று பாருங்கள்?உங்களால் எப்படி முடியும்?...
ஸ்ரீனி - போஸ்டன்,இந்தியா
2010-08-22 02:28:41 IST
அந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் யார், யார் ?......
jaffer - dubai,இந்தியா
2010-08-22 01:29:42 IST
makkaluku unmayaha ullaikum arasyal vathiai DMK ennum roudi arasal poruthukolla mudiyathu.dont worry u can carry on your jobs to protect our pepole.welldone we need such a politician in tamil nadu....

கருத்துகள் இல்லை: