ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

புலிகளின் பயிற்சிக்கு உதவுமாறு ஒஸ்ரின் என்னிடம் கேட்டார் – முன்னாள் கடற்படைத் தளபதி தயா சந்தகிரி தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை மேற்கொள்ள திருகோணமலைக் கடற்பரப்பில் ஒரு பகுதியை வழங்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் கேட்டதாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் முன்னாள் கடற்படைத் தளபதி தயா சந்தகிரி கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் அளித்த சாட்சியம் உண்மைக்குப் புறம்பானதாகும் எனத் தெரிவித்த கடற்படைத் தளபதி தயா சந்தகிரி மேலும் தெரிவிக்கையில்…,
யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் ஒஸ்ரின் பெர்னாண்டோ உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் அளித்த சாட்சியம் உண்மைக்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த உடன் படிக்கை கைச்சாத்திடப்படும் வரையில் ஐக்கிய தேசிய முன்னணி   அரசாங்கம்   படைத் தளபதிகளிடம்   கருத்துக் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவினைப் பிழையான வழியில் இட்டுச் செல்ல ஒஸ்ரின் பெர்னாண்டோ முயற்சிக்கின்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத் திடப்படுவதற்கு முதல் நாளில் படைத்தளபதிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து உடன்படிக்கை குறித்து அறிவிக்கப்பட்டது.
கடற்படைத் தளபதியின் ஊடாகத் தாம் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்த தகவல்களை அறிந்து கொண்டதாக ஒஸ்ரின் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்து முற்றிலும் பிழையானதாகும்

கருத்துகள் இல்லை: