![]() |
Muralidharan Pb : கலைஞர் பக்கம் பதிவு 9 - சமூக நீதி என்பது யாது?
தலைலர் கலைஞர் எப்படி ஒரு திட்டத்தை வடிவமைத்தார்?
சமூக நீதியை அவர் எங்கிருந்து எடுக்கிறார்?
வள்ளுவரின் குறளின் வாயிலாக.
சங்கீத வித்வான்கள் சிலர் பாடுவதை காது கொடுத்து கேட்கவே முடியாது, சிலருடைய பாடல்கள் கேட்கவே அமிர்தமாக இருக்கும். தொழிலில் இருவருமே ஒரே வகை. ஆனால் தொழிலுக்குள்ளே இருக்கிற சிறப்பால் அவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.
அதைத்தான் திருவள்ளுவர்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
இக்குறளின் படி, யார் ஒருவர் தான் மேற்கொண்ட தொழிலில் சிறந்தவராக உள்ளாரோ அவரே உயர்ந்தவர். அப்படி தனது தொழிலை சிறப்படைய செய்யாமல் இருப்பவர் தாழ்ந்தவர் என்கிறார். அதுதான் கலைஞர் குறிப்பிட்ட உதாரணம்.
தொழிலை வைத்து சாதியை உருவாக்கியது தவறு, இவன் மேலானவன் இவன் கீழ்சாதி என பாகுபாடு முற்றிலும் தவறு. அதைத்தான் காலங்காலமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.
பெரியார் தான் இந்த பாகுபாட்டை பகிரங்கமாக போட்டு உடைத்தார். அது தவறு என்று பேசி சீர்திருத்த முயன்றார். அவர் பெருஞ்சீடரான தலைவர் கலைஞர் உருவாக்கியவை சமத்துவமற்ற சமூகம்.
சென்னை நகரில் குப்பங்களிலும் குடிசைகளிலும் வாழும் விளிம்பு நிலை மனிதர்களுக்கு, எழுபதுகளிலேயே வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரவே குடிசை மாற்று வாரியம் அமைத்தார்.
இந்தியாவில் யாருமே செய்யக் கூட ஏன் சிந்திக்காத ஓர் அற்புதமான திட்டம்.
ஆனாலும் சென்னையில் சில தெருக்கள் இன்றும் பட்டியலனத்தோர் மட்டுமே வாழும் பகுதிகளாக தென்படுகிறதை ஏற்கத் தான் வேண்டும். அதே சமயத்தில் இம்மாநகரம் ஓரளவு தீண்டாமையை தாண்டியுள்ளது. நகரமயமாக்கல் என்பதால்.
அதனால் தான் பெரியார், கிராமங்களை நகரமயமாக்க வேண்டும் என்றார். சிற்றூர்களில் தான் சாதி ஆட்கொண்டு தலைவிரத்தாடுகிறது. இன்றும் நம் மாநிலத்தில் அதன் வீரியம் குறையாது தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறதை உணர்வோம்.
குடிசைமாற்று வாரியத்தின் வளர்ச்சியை வேறொரு திசையில் கொண்டு செல்ல நினைத்தார் முதல்வராக இருந்த கலைஞர்.
மாற்றத்துக்கான திட்டத்தை முன்மொழிந்தார். அதுதான் பெரியார் நினைவு சமத்துவபுரம். 17/08/1998 அன்று மதுரையில் மேலக்கோட்டையில் திறந்து வைத்தார். அதே மதுரையில் மீனாட்சிபுரத்தில், 1989ல் 11 பேரைக் கொன்ற சாதிக் கலவரத்தின் நினைவாக மதுரையை தேர்வு செய்தார். அதுதான் அவரது Masterstroke
அது ஒன்றன் பின் ஒன்றாக இன்று வரை 145 சமத்துவபுரங்கள் தமிழ்நாட்டில் கலைஞரால் துவங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக