ராதா மனோகர் : ஒருவர் எப்போதும் நான் பாதிக்கப்பட்டேன் என்னை எல்லோரும் துன்புறுத்துகிறார்கள்
என்று பிறரின் கவனத்தை கவர்வதற்காக அல்லது பிறரின் அனுதாபத்தை பெறுவதற்காக ஓயாமல் கூவிக்கொண்டே இருப்பது ஒரு உளவியல் நோய்!
இது வெறும் நோய் மட்டுமல்ல .இது ஒரு வியாபாரம் .. முதல் இல்லாத வியாபாரம்
இதில் ருசி கண்டவர்கள் ஒரு போதும் இதை கைவிட மாட்டார்கள்
இந்த விக்டிம் சின்றோம் திருமாவளவனுக்கு நீண்ட நாளாக உண்டு
ருசி கண்ட பூனை அல்லவா . இலகுவில் விட்டு விடாது .
தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சாபக்கேடு இவர்
ஏன் திருமாவை இப்படி கூறுகிறேன் என்பதை முன்பே கொஞ்சம் விபரமாக எழுதியுள்ளேன்
திருமாவளவன் வைகோ விஜயகாந்த்
மீள்பதிவு 28 செப்டெம்பர் 2020 நாம் சம காலத்தில் கண்டு வியக்கும் நம் தமிழ்நாடு பெற்றெடுத்த மிகப் பெரிய அறிவுச்சொத்து என்று கட்டுக்கடங்காத தொண்டர்களையுடைய விசிக கட்சி தலைவர் திருமாவளவனை சிலர் குறிப்பிட்டுள்ளனர் .
ஆனால் வரலாறு அப்படி இல்லையே?
வரலாறு வேறுவிதமாக அல்லவா சொல்கிறது?
நீண்ட வரலாற்று ஆய்வு செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை .
குறிப்பாக இரண்டு விடயங்கள் அப்படியே கடந்து போக முடியாத அளவு பாரதூரமான அரசியல் குற்றங்களாக திருமாவின் மீது உள்ளது.
தமிழகத்தின் இன்றய அவல நிலைக்கு திருமாவின் மக்கள்நலக்கூட்டணியின் பங்கு என்ன சாதாரணமானதா?
இனி வரப்போகும் எந்த ஆட்சியாளராலும் திருத்தவே முடியாத அளவு தமிழகம் விழுந்து போயிருக்கிறதே?
திருமாவின் மக்கள் நலக்கூட்டணி தமிழகத்திற்கு இழைத்த தவறுகளை இனி வரும் ஆட்சியாளர்களால் எப்படி திருத்தி விட முடியும் என்று சிந்திக்கும் திறனுள்ள எவரும் சந்தேகப்படுவார்கள் .
அவ்வளவுதூரம் எல்லா துறைகளிலும் பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது .
அனிதாக்களின் உயிர்களை மீண்டும் தரமுடியுமா?
இது போல எவ்வளவோ அடுக்கி கொண்டே போகலாம்.
அந்த மக்கள் நலக்கூட்டணியின் நோக்கம்தான் என்ன?
அதிமுகவின் விருப்பங்களை நிறைவேற்ற அவர்களின் பணத்தில் உருவானதாக பொதுவான ஒரு கருத்து இருக்கிறது .
இதை இலகுவில் புறந்தள்ளி விடமுடியாது.
குறைந்த பட்சம் இவர்கள் இதற்காக மக்களிடம் மன்னிப்பாவது கேட்டார்களா?
இல்லையே அப்படியே கடந்தல்லவா போகிறார்கள்?
அடுத்ததாக திருமாவளவன் புலிகளின் தமிழக மாணவர் அமைப்பில் (Student Organisation of Liberation Tigers-SOLT) ல்தான் தனது அரசியல் கணக்கை தொடங்கினார் .
அந்த காலக்கட்டத்தில்தான் புலிகள் தங்களது சகோதர படுகொலைகளை ஆரம்பித்து இருந்தார்கள்
மதுரையில் டெசோ மாநாடு கூட்டி அகில இந்திய அளவில் ஈழத்துக்கு ஆதரவான கருத்தை உருவாக்கும் கடினமான பணியை கலைஞர் மேற்கொண்டிருந்தார்.
அந்த நல்முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் புலிகள் சகோதர படுகொலைகளை அப்போது தொடங்கி இருந்தார்கள் .
அன்றிலிருந்து அதே பாணியை அவர்கள் தொடர்ந்தார்கள் .. முள்ளிவாய்க்கால் வரை .
புலிகளின் இந்த பாசிச வெறியாட்டத்தை அவ்வப்போது உவகையோடு ரசித்து கருத்துக்கள் தெரிவித்தவர்தான் இந்த திருமாவளவன் என்பவர்.
ஈழத்தில் நடந்த அத்தனை அவலங்களுக்கும் இந்த திருமா போன்றவர்களும் கூட்டு பொறுப்பாளிகள்தான் .
சர்வதேச போர் குற்ற விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள்தான் .
இவற்றை எல்லாம் மறந்து விடுவோம் என்றுதான் பலரும் கருதுகிறார்கள்
அது காலத்தின் தேவையும் கூட . ஆனால் அதற்காக திருமா போன்ற்வர்களை பெருந்தகை என்ற ரேஞ்சுக்கு பொய் பிம்பத்தை கட்டமைப்பது மாபெரும் வரலாற்று துரோகமாகும் ..
( துரோகம் என்ற வார்த்தை எனக்கு சற்றும் பிடிப்பதில்லை ஆனால் திருமா போன்ற புலி பாசிஸ்ட்களுக்கு அதுதானே மந்திரம் ?) 28 செப்டெம்பர் 2020
Radha Manohar மீள் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக