ராதா மனோகர் : நாயகன் படத்தை தயாரித்தது முக்தா பிலிம்ஸ்
முக்தா வி ராமசாமி முக்தா வி சீனிவாசன் ஆகியோர்கள் தயாரித்தார்கள்
படத்தின் மொத்த நெகட்டிவ் உரிமையை ஜி வெங்கடேசனுக்கு விற்றுவிட்டார்
அந்த காலத்திலேயே சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில் உருவான படம்
நாயகன் வரை இன்றுவரை மக்களால் பேசப்படும் ஒரு கல்ட் மூவி என்று கூறலாம்
ஜி வெங்கடேசனுக்கு பெரும் வசூலை அள்ளிக்கொடுத்த படம்
படத்தை வெளியிடும் போது பலரும் அது வெங்கடேசனின் ஜி வி பிலிம்ஸ் படம் என்றுதான் கருதினார்கள்
அந்த அளவுக்கு ஜிவி பிலிம்ஸ் விளம்பரம் இருந்தது
வசூலும் கொள்ளை ஜிவி பிலிம்சுக்கு கிடைத்த புகழ் வெளிச்சமும் அதிகம்
ஆனால் நாயகன் படத்தை தயாரித்த முக்தா பிலிம்ஸுக்கு எந்த இலாபத்தையும் இந்த படம் கொடுக்கவில்லை
ஆரம்பத்தில் 50 இலட்சம் பட்ஜெட் போடப்பட்டது பின்பு அது ஒரு கோடியில் வந்து நின்றது ஏற்கனவே ஜீவிக்கு நெகட்டிவ் உரிமையை விற்று விட்டதால் முக்தா பிலிம்ஸுக்கு ஏதும் கிடைக்கவில்லை
சில நேர்மையான விநியோகஸ்தர்கள் இப்படியாக அதிகப்படி இலாபம் கிடைத்தால் தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் கொடுப்பார்கள்
ஆனால் ஜி வி பிலிம்ஸ் ஜி வெங்கடேசன் ஒரு சதமும் முக்தா பிலிம்ஸ்க்கு கொடுக்கவில்லை
அதுமட்டுமல்ல இன்றுவரை பலரும் அது ஜிவி பிலிம்ஸ் படம் என்று கருதும் அளவுக்கு ஜி வெங்கடேசனின் விளம்பரம் இருந்தது
இவர் திரு மணிரத்தினத்தின் உடன்பிறந்த அண்ணனாவர்
இவர் அன்புச்செழியன் என்ற திரைப்பட பைனான்சியரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி கொடுக்கமுடியமல் பின்பு ஒரு நாள் தூக்கு போட்டு இறந்தார்
இந்த விபரங்களை முக்தா சீனிவாசனின் மக்கள் இந்த காணொளி பேட்டியில் விபரமாக கூறியிருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக