Gowtham Sham : கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையை கவனித்தால், முதலில் பலருக்கும் தோன்றுவது ௮ ஒரு visible political presence இல்லாத வெற்றிடம்.
சமூக பதற்றங்கள், சட்ட ஒழுங்கு விவாதங்கள், இணையத்தில் தீவிரமாக பேசப்படும் பிரச்சனைகள், அரசியல் சர்ச்சைகள் ௮ எல்லாமே ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நேரத்தில், “அரசியல் தலைமையே இப்போது எங்கே இருக்கிறது?” என்ற கேள்வி பொதுமக்களிடையே இயல்பாக எழ ஆரம்பிக்கிறது.
ஏனெனில் தமிழ்நாடு அரசியல், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், ஒரு தொடர்ச்சியான public presence-க்கு பழகியிருந்தது.
ஸ்டாலின் தலைமையிலான காலகட்டத்தை எடுத்துப் பார்த்தால், அது வெறும் நிர்வாக ஆட்சி மட்டும் இல்லை; “நாள்தோறும் மக்களிடம் கண்ணுக்குத் தெரியும் அரசியல்” என்ற மாடலாக இயங்கியது.
மாநிலத்தில் நடந்த முக்கிய பிரச்சனைகள், பொதுமக்கள் கவனித்த விஷயங்கள், இணையத்தில் தீவிரமாக பேசப்பட்ட சம்பவங்கள் ௮ இவைகளில் குறைந்தபட்சம் 90% விஷயங்களுக்கு, தினசரி ஏதாவது ஒரு வகையில் முதலமைச்சரின் presence தெரிந்துகொண்டே இருக்கும்.
காலை ஏழு மணிக்கு ஒரு அறிக்கை வந்திருக்கும்.
மாநிலத்தில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் குறித்து ௮ உடனடி கண்டனம், விளக்கம் அல்லது உத்தரவு.
மதியம் பார்த்தால், வேறொரு செய்தி.
ஒரு மருத்துவமனை ஆய்வு.
ஒரு புதிய திட்ட தொடக்கம்.
ஒரு பாலம் திறப்பு.
ஒரு பள்ளிக்கூட கட்டிடம்.
ஒரு மெட்ரோ திட்ட ஆய்வு.
இரவு news திறந்தால், இன்னொரு update.
ஒன்றிய அரசின் புதிய கொள்கைக்கு எதிரான அறிக்கை.
மாநில உரிமைகள் குறித்து எச்சரிக்கை.
அல்லது பேரிடர் கண்காணிப்பு கூட்டம்.
இப்படியாக, ஒரு நாளில் பல்வேறு தளங்களில் அவருடைய அரசியல் presence தொடர்ந்து தெரிந்துகொண்டே இருக்கும்.
அதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான விஷயம் ௮ அவரது தொடர்ச்சியான பயண அரசியல்.
ஒரு நாள் காலை கோயம்புத்தூரில் இருப்பார்.
மதியம் சென்னை தலைமைச் செயலகத்தில் review meeting நடத்துவார்.
அடுத்த நாள் மதுரையில் திட்ட ஆய்வு.
மறுநாள் திருநெல்வேலியில் மக்கள் சந்திப்பு.
வேறொரு நாளில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் நேரடி கண்காணிப்பு.
“முதல்வர் எங்கோ அலுவலகத்தில் இருக்கிறார்” என்பதற்குப் பதிலாக, “மாநிலத்தோடு நகர்கிறார்” என்ற perception அந்த காலகட்டத்தில் உருவானது.
அது தமிழ்நாட்டை மட்டும் சார்ந்த அரசியல் இல்லை.
மணிப்பூரில் கலவரம் நடந்தாலும்,
பிஹாரில் சமூக பதற்றம் ஏற்பட்டாலும்,
ஒன்றிய அரசு புதிய சட்டம் கொண்டு வந்தாலும்,
மாநில உரிமைகள் குறித்த விவாதம் எழுந்தாலும் ௮ அதற்கெதிரான முதல் வலுவான அரசியல் குரல் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும்.
NEET, CAA, மொழிக் கொள்கை, நிதி பகிர்வு, ஆளுநர் விவகாரம் ௮ எதுவாக இருந்தாலும் உடனடி எதிர்வினை இருக்கும். சில நேரங்களில் அனைத்து கட்சிக் கூட்டம். சில நேரங்களில் உச்சநீதிமன்ற வழக்கு. சில நேரங்களில் நேரடி கடிதம். சில நேரங்களில் கடுமையான அரசியல் அறிக்கை.
அதே நேரத்தில், உலக அளவில் தமிழர்கள் சாதித்த விஷயங்களையும் அவர் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
யூகேயில் ஒரு தமிழர் உயர்பதவி அடைந்திருந்தாலும்,
அமெரிக்காவில் ஒரு தமிழ் மாணவி ஆராய்ச்சி சாதனை செய்திருந்தாலும்,
விளையாட்டு போட்டியில் தமிழர்கள் தங்கப்பதக்கம் வென்றிருந்தாலும்,
சர்வதேச நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்புகளை பெற்றிருந்தாலும் ௮ அதற்கான வாழ்த்துகளை தெரிவிக்கும் முதல் அரசியல் தலைவராக ஸ்டாலின் இருப்பார்.
“இந்த தகவல் இவருக்கு இவ்வளவு சீக்கிரம் எப்படி தெரியும்?” என்று மக்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் அதற்கென்று இயங்கிய ஒரு முழுமையான monitoring மற்றும் communication அமைப்பு இருந்தது.
இதற்கெல்லாம் நடுவில், Facebook அல்லது Twitter-ல் ஏதாவது ஒரு முக்கிய issue trend ஆனாலும், “முதல்வர் இதைப் பற்றி இன்னும் பேசலையே?” என்ற கேள்வி எழுந்த சில மணி நேரங்களுக்குள் அதற்கான பதிலும் வந்துவிடும்.
அதனால்தான் அந்த காலகட்டத்தில், “அரசு இயங்குகிறது” என்பதைக் காட்டிலும், “அரசு தொடர்ந்து விழித்திருக்கிறது” என்ற உணர்வு மக்களிடம் வலுவாக இருந்தது.
இன்று அந்த தொடர்ச்சியான visible presence-ஐ இந்த ஆட்சியில் மக்கள் மிஸ் செய்கிறார்கள். இங்கு அரசியல் செயல்பாட்டை விட, MLA-க்களின் reels அரசியல் தான் அதிகமாக கண்ணுக்கு படுகிறது.
- Gowtham Sham

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக