புதன், 27 மே, 2026

பேருந்து அரசுடமை - ஏழை மக்களின் வாழ்வை திருப்பி போட்ட கலைஞர்

May be an image of text that says "03 2 B MOTOR VIKATAN"

 Muralidharan Pb  :  கலைஞர் பக்கம்  பதிவு 7!   பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கியவர்
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானபோது திமுக 138 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது.  ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையைக் காட்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டது.
 சைதாப்பேட்டையில் பதினோரு லட்சம் (கலைஞர்) வெற்றிபெற்றிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு அபாரவெற்றி. 25 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது திமுக. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா வெற்றி .


அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்று நீண்ட ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்து. அறிஞர் அண்ணா சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 18 ஆண்டுகாலம் கட்சிக்காக பாடுபட்டவர்களை,வீடு வாசல், சொத்து இழந்து, சிறையில் அடைக்கப்பட்டு, அடிபட்டு எல்லா துன்பங்களையும் அனுபவித்தவர்களுக்கு பதவி கொடுக்கவேண்டுமே? இது அண்ணாவின் கவலை. 
அனைவரும் கலைஞருக்கு என்ன அமைச்சகம் ஒதுக்கப்படுகிறது என்பதே பேச்சு. அண்ணாவிற்கு வலதுகரமாக செயல்பட்டு இந்த மாபெரும் வெற்றிக்கு அவரின் உழைப்பு அளப்பறியாதது. அவர் உள்துறை அமைச்சகம் பெறுவார் என ஊடகங்கள் எழுதின. 
காரணம் எந்த காவல்துறையினர் அவரை படாத பாடு படுத்தினார்களோ அவர்களை அவர் ஆட்டி படைப்பர் என கருதினர். ஆனால் தனக்கு பதவி ஏதும் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றார். அது அதிர்ச்சி அளித்து அனைவரது கவனத்தை ஈர்த்தது. உள்துறை உட்பட முதல் மந்திரியாக அண்ணாவும், நாவலர் நெடுஞ்செழியனுக்கு கல்வி, மதியழகனுக்கு உணவு, தன் தம்பி கருணாநிதிக்கு அண்ணா கொடுத்தது பொதுப்பணித்துறை. 
பொதுப்பணித்துறையின் கீழ் போக்குவரத்து துறையும் வந்தது. அதிரடி அதிரடி இன்று ஊடகங்கள் அனைத்தும் பேசும் இதெல்லாம் என்ன அதிரடி?அன்று அவர் அறிவித்தது தான் இந்தியாவில் இதுவரை யாரும் செய்ய துணியாத செயல்.
 போக்குவரத்துத்துறை ஒன்றை உருவாக்கி அனைத்து பேருந்து வழித்தடங்கல்களையும் தேசியமயமாக்குதல் என்ற அதிரடி முடிவை அறிவித்தார் பொதுப்பணித் துறை அமைச்சர் கலைஞர் கருணாநிதி. 
டிவிஎஸ், ராமன்  அண்ட் ராமன் போன்ற நிறுவனங்களில் போக்குவரத்து என்பது இருந்தது. நிறைய நிறுவனங்கள் வெறும் காசை மட்டும் வாங்கிக்கொண்டு முறையே நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. 
இதைக் கண்ட கலைஞர் கருணாநிதி, ஏற்கனவே தஞ்சாவூரில் 1962ல் எஸ்டிஎம் நிறுவனத்தில் நடந்த பிரச்சனைகளை மனதிற் கொண்டு செய்த முடிவு இது.  இத்திட்டத்தை பற்றி அவரிடம் அறிவுரைகள் பல கூறினார்கள். தனியார் நிறுவனங்களை பகைத்துக் கொண்டு நீங்கள் ஒன்று செய்ய முடியாது என்று எச்சரித்தனர். ஆனாலும் அசரவில்லை கலைஞர். எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். மேற்கொண்டு அனைத்து வழித்தடங்களிலும் குறைந்த கட்டணத்தில் பேருந்தை இயக்க உத்தரவிட்டார். தனியாரும் அரசாங்கத்தின் குறைந்த விலைக்கே வேறு வழியின்றி பயணசீட்டு விலையை குறைத்தன. இன்று அரசு பேருந்துக்குள் போகாத ஊரே கிடையாது என்ற நிலைக்கு அன்றே அடிக்கலிட்டார் பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி.
எப்படிப்பட்ட மாற்றங்கள் கொண்டுவந்தார்?
மதுரையில் இருந்து சென்னை வர இரயிலைவிட குறைவாக கட்டணம் வசூலிக்கப்பட்டதை மக்கள் வரவேற்றனர். 
விடியற்காலை வீட்டில் இருந்து வந்து ஊழியர்கள் பேருந்துகளை எடுக்க தாமதமாகும் என்பதால் பணிமனைகளிலேயே தங்க இடம் தந்து. அலாரம் கடிகாரங்கள் தந்து, காலையில் சீக்கிரமாக பேருந்துகளை பணியாற்ற வைத்தவர் தலைவர் கலைஞர்.
லக்கேஜ் என்ற மூட்டைகள் பேருந்துகளில் ஏற்ற அனுமதித்ததும் அந்த நாட்களில் தான். அரசுக்கு அதிலும் வருமானம் கிடைத்தது. 
இன்று மக்கள் அனைவராலும் பெரிய வரவேற்பு பெற்ற போக்குவரத்து துறை வளர்ச்சி அடைய இந்த மாதிரியான சிறு சிறு மாறுதல்களை கொண்டு வந்தார்

கருத்துகள் இல்லை: