செவ்வாய், 26 மே, 2026

எங்க மீது அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்கும்.. திமுக பகிரங்க எச்சரிக்கை

 மின்னம்பலம் - மதி : சமூக வலைதளங்களில் திமுக (DMK) மீது திட்டமிட்டு அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி எச்சரித்துள்ளது.
சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று மே 25-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட அந்த சம்பவத்தை திசைதிருப்புகிற வகையில் ஒரு பெண் சோஷியல் மீடியாவிலே பேட்டியளித்து, அது வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.


அதிலே எதிர்க்கட்சித் தலைவர்-திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினையும், திமுகவைப் பற்றியும் அவதூறாக, தவறாக, அவருடைய பெயரில் வெளியிடாமல் இன்னொருத்தருடைய ஐடென்டிட்டி மூலமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இதை இதுவரையிலே தமிழ்நாட்டில் எந்தவொரு நிலையிலும் இப்படிப்பட்ட அசிங்கங்கள் நடந்தது கிடையாது. இப்பொழுது ஒவ்வொன்றாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை.

இதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அந்த பேட்டியளித்த பெண் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகார் அளித்துள்ளோம். இதை சட்டரீதியாக திராவிட முன்னேற்றக் கழகம் இனி இதைத் தொடர்ந்து அணுகும்.

திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ: கோவை சிறுமி படுகொலை சம்பவத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்தான் இதற்கு காரணம் என்று பதிவிடுகின்றனர். வெறுப்பு வருவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். பொய்யான தகவலைப் பதிவிட்டு, அது சமூக வலைதளங்களிலே பரப்பப்பட்டு வருகிறது.

அவதூறு வழக்குகள் தனிப்பட்ட புகாராகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை, அதிகபட்சம் 2 ஆண்டுகள் தண்டனை கொடுக்கக் கூடிய வழக்குகள்.

இப்போது இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட் (Information Technology Act) பிரிவு 66F என்பது குறித்துத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது அது குறித்தான புரிதல் இல்லாமல் இருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் தங்களை அறியாமல் இது போன்று செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒருவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்து, வேறொருவருடைய அடையாளத்தில் ஒரு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் (Computer network) இருந்து இந்த மாதிரி சோஷியல் மீடியாவில் (Social media) அவதூறு பரப்பினால் கூட, அதற்கான தண்டனை ஆயுள் தண்டனை வரை செல்லலாம் என்று சட்டம் சொல்லுகிறது.

எங்களுக்கு அடுத்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால், இது இப்படியே விட்டுச் சென்றால், இதற்கு ஒரு எல்லையில்லாமல் போகும், அவதூறுகளுக்கு ஒரு தடையில்லாமல் போகும் என்பதனால், திமுக தலைவர் ஸ்டாலினுடைய வழிகாட்டுதலின் பேரில் இன்றைக்கு, குறிப்பாக இந்த நிகழ்வு குறித்து டிஜிபி (DGP), சென்னை கமிஷனரிடம் 2 தனித்தனி புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில், அவர்கள் எந்தெந்த சட்ட விதிகளை மீறியிருக்கிறார்கள் என்பதைப் குறித்து விரிவாகத் தெரிவித்திருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலமாக ஒன்றிய அரசின் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆக்டில் உள்ள கிரீவன்ஸ் கமிட்டிக்கு (Grievance Committee) நாங்கள் ஈமெயில் (Email) மூலமாகப் புகார் அளித்துள்ளோம். எக்ஸ் (X) தளத்திற்கும், மெட்டா (Meta) தளத்தில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp), ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகிய நிறுவனங்களுடைய கிரீவன்ஸ் ஆபீஸர்ஸுக்கும் (Grievance Officers) நாங்கள் இது குறித்து புகார்கள் அளித்திருக்கிறோம்.

இன்டர்மீடியரி ரூல்ஸ் (Intermediary Rules), அதன்படி அந்த சமூக வலைதளங்கள்… அதனுடைய கிரீவன்ஸ் ஆபீஸர்ஸ் இதில் தலையிட்டு, அது போன்று வரக்கூடிய செய்திகளை உடனுக்குடன் நீக்கிவிடவும், அந்த சமூக வலைதளக் கணக்குகளை நீக்கிவிடவும் புகார் அளித்திருக்கிறோம்.

சமூக வலைதளத்திலே குழந்தைகளை வைத்து அரசியல் பேசுவது, அதைப் பெற்றோர்களே படம் பிடித்துச் சமூக வலைதளத்தில் பரப்புவது ஜூவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட்டுக்கு (Juvenile Justice Act) எதிரானதாகும்.

இது போன்ற போலியான செய்திகளை, குறிப்பாக இந்த சமூக வலைதளப் பக்கத்தைப் பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரியும், அதில் மார்ஃபிங் (Morphing) பண்ணி வீடியோ போடுகிறார்கள். அது மிகப்பெரிய குற்றமாக இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட்டில் பார்க்கப்படுகிறது.

நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், உரிய நீதிமன்றத்தை நாடுவோம். தேவை என்றால் எங்கெங்கு தேவையோ அத்தனை இடத்திலும் தனிப் புகாராகப் புகார்கள் அளிப்போம். நாங்கள் புகார் அளித்தால் அதனுடைய லாஜிக்கல் எண்ட் (Logical end) போகாமல் அந்தப் புகாரை விடமாட்டோம். எனவே, இனிமேல் தவறாக, பொய்யான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு இது முதலாவதாக நாங்கள் கொடுக்கக்கூடிய வேண்டுகோள்.. எச்சரிக்கை. இவ்வாறு என்.ஆர். இளங்கோ தெ

கருத்துகள் இல்லை: