திங்கள், 25 மே, 2026

திமுக தலைவர்கள் மீது கடும் கோபத்தில் எகிறி பாயும் உடன்பிறப்புக்கள்


 Kandasamy Mariyappan
  : அன்பின் திமுக மூத்த தலைவர்களே..வணக்கம்.!  நீங்கள் நலமாக வாழ வாழ்த்துகள்.
உங்களில் பலரும் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வைத்துள்ளீர்கள்.!
நீங்கள் அனைவரும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) உள்ளீர்கள்.!
உங்கள் பலரின் பிள்ளைகளும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) அல்லது கட்சி பொறுப்புகளில் உள்ளார்கள்.!
உங்களில் பலர் அமைச்சர்களாக உள்ளீர்கள்.!
நீங்கள் அனைவரும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளீர்கள்.!
இந்த வசதிகள் எல்லாமே, கட்சியால் உங்களுக்கு கிடைத்தது.!
திரு. ஸ்டாலின் திமுகவை விட்டு விலகி புதிய கட்சி ஆரம்பித்து அதில் நீங்களெல்லாம் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும், 15-20% வாக்குகளை மட்டுமே பெற முடியும்.!
செல்வி. ஜெயலலிதா அதிமுகவை விட்டு விலகி புதிய கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டாலும், 15-20% வாக்குகளை மட்டுமே பெற்றிருக்க முடியும்.!
இதுதான் அரசியல் கள நிலவரம்.!
ஆனால் நீங்களோ, உங்களால்தான் கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளீர்கள்.!
கட்சி பதவி வேண்டும், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) வேண்டும், தொழில் செய்ய வேண்டும் என்று உள்ளீர்களே..,
என்றாவது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று எண்ணி உழைத்திருப்பீர்களா.!
கால சூழலுக்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டிருப்பீர்களா.! 
எப்படிப்பட்ட பொதுக்கருத்தை (Perceptional image) உருவாக்குகிறோம் என்பதை வைத்தேஇன்றைய அரசியல் உள்ளது.!
இதனை உணர்ந்து செயல்பட்டுள்ளீர்களா.!
திமுகவில் இளைஞர்களை ஈர்க்க என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என்று கடந்த 10 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு வருகிறோம்.
அதற்கான திட்டங்களை நீங்கள் தலைமைக்கு வழங்கி உள்ளீர்களா.!
மூத்த உறுப்பினர்கள் விலகி, இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன் என்று உங்கள் பிள்ளைகளையே கட்சி பொறுப்பில் கொண்டு வந்திருக்கலாமே.!
இப்போதும் கூட, உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
துணை எதிர்க்கட்சித் தலைவராக திரு. நேருவும், கொரடாவாக திரு. வேலுவும் இருக்கிறீர்கள்.!
துணை எதிர்க்கட்சித் தலைவராக திரு. மெய்யநாதன் போன்றவர்களும், கொரடாவாக தங்கம் தென்னரசு போன்றவர்களை நியமிப்பதில் என்ன தவறு. எதை இழக்க போகிறீர்கள்.
அப்படி என்னங்க பதவி வெறி.!
உங்கள் கட்சி வட்டத்தை தாண்டினால் உங்களை யார் என்று கூட தெரியாதுங்க. ஒரு நேரத்தில் ஒரு வீட்டில்தான் உறங்க முடியும். ஒரு வாகனத்தில்தான் பயணிக்க முடியும். அளவாகத்தான் சாப்பிட முடியும். 
இதுதான் உண்மை. 
எல்லாமே எனக்கு மட்டுமே என்று இருந்தால், கடைசியில் யாருக்குமே எதுவும் இருக்காது.!
கட்சி ஆட்சியில் இருந்தால்தான் உங்களை எல்லாம் மதிப்பார்கள். இல்லையென்றால் தூ என்று சொல்லி விட்டு சென்று விடுவார்கள்.!
கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், உங்களை மதித்து பல ஆயிரம் தொண்டர்கள் வர வேண்டும் என்ற எண்ணத்தோடு கட்சியை வழிநடத்துங்கள்.!
தயவுசெய்து சுயபரிசோதனை (Self analysis) செய்து பாருங்கள்.!
1. மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் உள்ள உங்களுக்கு, 
எத்தனை ஒன்றிய செயலாளர்களின் (சட்டமன்ற உறுப்பினராக இல்லாத) பெயர்களை (இதனை படித்த உடனே) தெரியும்.!
2. மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் உள்ள உங்களுக்கு, 
எத்தனை கிளைச் செயலாளர்களின் பெயர்களை தெரியும்.!
3. மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் உள்ள உங்களுக்கு, 
திமுக அணிகளின் செயலாளர்கள் பெயர்களை தெரியுமா.!
4. எத்தனை ஒன்றிய செயலாளர்களை அவர்களது இடங்களுக்கு சென்று சந்தித்து உரையாடி உள்ளீர்கள்.!
5. எத்தனை கிளைச் செயலாளர்களை, அவர்களது இடங்களுக்கு சென்று சந்தித்து உரையாடி உள்ளீர்கள்.!
6. எத்தனை எதிர்கட்சி ஒன்றிய, கிளைச் செயலாளர்களை சந்தித்து, casualஆக உரையாடி உள்ளீர்கள்.!
7. எத்தனை ஒன்றிய, கிளைச் செயலாளர்களுக்கு நல்ல பொருளாதார சூழலை உருவாக்கி கொடுத்திருப்பீர்கள்.!
8. கிளைச் செயலாளர்கள் கொண்டு வந்த, Recommendation உட்பட எத்தனை கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்திருப்பீர்கள்.!
9. நீங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் காமராஜர் ஃபோட்டோவை வைத்திருக்கும் நீங்கள், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் ஃபோட்டோவை வைத்துள்ளீர்களா.!
10. நீங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில், எத்தனை திராவிட இயக்க பேச்சாளர்களை அனுமதித்து நீதிநெறி வகுப்பு (Moral class) எடுக்க அனுமதித்துள்ளீர்கள்.!
11. நீங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறதா என்பதை உறுதி செய்துள்ளீர்களா.!
தமிழை, கட்டாய மொழிப்பாடமாக உறுதி செய்துள்ளீர்களா.!
12. சமூகவலைதள வசதிகளை எந்த அளவிற்கு பயன்படுத்தி கட்சிக்கு உதவினீர்கள்.!
எத்தனையோ லட்சம் திமுக அபிமானிகளுக்கு கட்சியால் எந்த பலனும் கிடையாது.
ஆனாலும் கட்சித் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக திமுக தோல்வி என்பது... 
தமிழ்நாட்டின் இழப்பு.
தமிழர்களின் இழப்பு.
தமிழ் மொழிக்கான ஆபத்து.!

கருத்துகள் இல்லை: