புதன், 15 அக்டோபர், 2025

நெப்போலியன் : நடிகன் அரசியலுக்கு வந்தா எப்படி இருக்கனும் தெரியுமா? சிறப்பு நேர்காணல்

மின்னம்பலம் -  Mathi : “ஒரு நடிகன் அரசியலுக்கு வரும் போது சினிமாவைப் போல பஞ்ச் டயலாக் பேசாமல் கொள்கை, கோட்பாடுகள் பேச வேண்டும்.. 
பொதுமக்கள் கூடினால் கட்சியினர்தான் தொண்டர்களை ஒழுங்கு செய்ய வேண்டும்; 
அரசாங்கத்தை குறை சொல்லக் கூடாது;
 கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க வேண்டும்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு ‘பாடம்’ எடுத்துள்ளார் மூத்த நடிகரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன்.



நடிகர் நெப்போலியன், திமுக முதன்மைச் செயலாளரும் மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் உறவினர். 2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; 2006-ம் ஆண்டு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால் 2009-ம் ஆண்டு பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். அப்போது மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தார் நெப்போலியன். பின்னர் திமுகவில் இருந்து விலகி 2014-ல் பாஜகவில் இணைந்தார். தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் நெப்போலியன் நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

Napoleon Interview | SAC -யை ஏன் ஒதுக்கறீங்க? விஜய் பண்ணும் தவறுகள் என்னென்ன? | Vijay | MKStalin 

கருத்துகள் இல்லை: