புதன், 15 அக்டோபர், 2025

இலங்கை வட மாகாணத்திற்கு ஏற்றது காற்றாலையா? சூரிய சக்தியா? ..

May be an image of text that says '30KW JAFFNA e00 Shoto Y12 Vivo VivoAlcamera AlC camera'
May be an image of swan, sea bird and windmill

 வடக்கிற்கு ஏற்றது காற்றாலையா?  சூரிய சக்தியா? .. 
வடக்கில் சோலார் கூரை மின்சாரத்தை ஸ்டோரேஜ் செய்யும் வசதியை பெருகினால் 

காற்றாலைதான் வேண்டும் என்று குத்தி முறிய தேவையில்லையே?
வடக்கில் உற்பத்தியாகும் மிதமிஞ்சிய சோலார் சக்தியை வீணடிப்பது என்னவிதமான பொருளாதார அறிவு?  
Gobi Periyathambi :   தெற்கில் solar panel வியாபாரத்திற்கு பெரும் முதலாளிகளை ஊக்கு விக்கும் அரசுகள் வடக்கில் ஒவ்வொரு வீட்டிலும் Solar Panel பொருத்த அனுமதி மறுக்கிறது !


குறிப்பாக யாழ்மாவட்டம் வெய்யில் கூடிய பிரதேசம் solar மூலம் நல்ல நன்மை அடைய முடியும் அதேநேரம் தமது மின்சார கட்டணத்தையும் குறைக்கலாம் !
சொல்லப்படும் காரணம் Transformer capacitor பத்தாதாம் !
முன்னய அரசுகளும் இதைதான் வடக்கில் செய்தது !

Vinoth Balachandran :   வீடுகளுக்கு பொருத்தும் இலக்குகள் வடக்கில் எட்டப்பட்டுள்ளன... இலங்கையிலையே வடக்கில் தான் முழுமையாக சோலர் சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது... வடக்கிற்கு தேவையான பகல்நேர மின்சார அளவை அடைந்துவிட்டேம்..
கூரை சோலர்களை தேசிய கிரிட்டில் சேர்க்கும் தொழில்நுட்பம் & ஸ்டோரேஜ் செய்யும் தொழில்நுட்பத்தை நாம் இன்னும் எட்டவில்லை..
இந்த எதார்த்தம் தெரியாதவர்களும், தெரிந்தும் வங்குரோத்து அரசியல் செய்யும் பலரும் இதனை வடக்கு தெற்கு என்றும் தமிழ் சிங்கள என்றும் அரசியல் இலாபத்திற்காக மக்களை மடையர்களாக்குகிறார்கள் அண்ணா

    9h

    Reply


கருத்துகள் இல்லை: