ஞாயிறு, 12 அக்டோபர், 2025

ஆபரேஷன் புளுஸ்டார் இந்திரா காந்தியின் தவறு! ப சிதம்பரம் பாஜகவுக்கு தாவப்போகிறாரோ?

 BBC Tamil : ஜூன் 1984ல் நடந்த 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' ஒரு தவறான நடவடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இதற்கான விலையாக தனது உயிரைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஹிமாசல் பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நான் இங்கிருக்கும் ராணுவ வீரர்களை அவமதிக்கவில்லை. ஆனால் பொற்கோவிலை மீட்பதற்கு ப்ளூ ஸ்டார் நடவடிக்கை சரியானது அல்ல" என்றார்.


"சில ஆண்டுகளுக்கு பிறகு ராணுவத்தை ஈடுபடுத்தாமல் பொற்கோவிலை மீட்க சரியான வழியை நாங்கள் காட்டினோம்" எனவும் கூறினார்.

மேலும் இந்த தவறுக்கு இந்திரா காந்தி மட்டுமே முழு பொறுப்பேற்க முடியாது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ப்ளூ ஸ்டார் ஒரு தவறான அணுகுமுறை. அந்த தவறுக்கான விலையாக இந்திரா காந்தி தனது உயிரைக் கொடுத்தார் என்று நான் நம்புகிறேன். 
ஆனால் அந்தத் தவறு ராணுவம், காவல்துறை, உளவுத்துறை அமைப்புகள் என அனைவரின் கூட்டு முடிவின் விளைவாகும்." எனத் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் தர்பார் சாஹிப் வளாகத்தில் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைதான் 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்று அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: