Halley Karthik-tamil.oneindia.com :; சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் புதிய உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பெ.சண்முகம் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
CPM Anna University Tamil Nadu
இன்று (16.10.25) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம் சின்னத்துரை மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம், வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ள இழப்பீடு தொகையை வழங்கிட வேண்டும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை துவக்கி புதிய உபகரணங்கள் கருவிகளை உருவாக்கிட வேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற்றவர்களின் உரிமையை பறிக்கக் கூடிய விதத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பாதிப்புகளை சந்திப்பவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், வடசென்னை கொடுங்கையூரில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆபத்தான எரி உலை திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், கேபிள் டிவி தொழிலில் பழைய ஆப்ரேட்டர் பகுதியில் புதிய LCO போடுவதை உடனே நிறுத்த வேண்டும், தமிழ்நாடு கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் TCOA சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட முதல்வர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்" என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக