செவ்வாய், 14 அக்டோபர், 2025

இன்றைய ஆர் எஸ் எஸ் வளர்ச்சிக்கு அன்றே விதை போட்ட பாரதி!

May be an image of text that says 'பாரதி வழி HNSH GH ม. ப.ஜீவானந்தம்'

 Parimala Rajan  : நண்பர்களே!   கீழ்கண்ட ஆதாரங்களே போதுமானவை என்று கருதுகிறேன்.
பெரியாருக்கும் திராவிடத்திற்கும் எதிரான  இந்துதேசிய வெறியர் பாரதியைப் போற்றுவது, பெரியாரும் திராவிடமும் பகையாகக் கருதிய இராமனையும், இராமாயணத்தையும் போற்றுவது ஆகிய நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்வது மூலம்   இந்தியாவின் அடையாளம் இராமனே என்று முழங்கும் இன்றைய இந்து தேசியத்திற்கு  அடித்தளமிட்டுக் கொடுத்த போலி கம்யூனிஸ்ட்தான் ஜீவா என்று அறுதியிட்டுக் கூறிவிடமுடியும்.
அன்புடன், மருதமுத்து.- நன்றி: தோழர் தியாகு
பேராசிரியர் மருதமுத்து எழுதுகிறார் -12/10/25
நண்பர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்டு இருந்த காலத்திலேயே) காந்தியின் மென்மையான நயவஞ்சக இந்துத்துவாவுக்கு சாரத்தில் அடிபணிந்ததாகவே இருந்து வந்துள்ளது.
 (ஆனால், ஏராளமான அடிமட்டக் கட்சித் தொண்டர்கள் இதுபற்றிய உண்மை தெரியாமல் பல தியாகங்களைச் செய்தனர் என்பது உண்மையே)
தலைவர்களின் இந்த துரோகத்திற்கு திரு ப. ஜீவானந்தம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.


அவர் இரண்டு வகையில் வருங்காலத்தில் காந்தி கனவு கண்ட இந்து தேசம் அமையத் தமிழகத்தில் பெரும் தொண்டாற்றினார்.
அது காலப்போக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர இந்துவெறி இராம இராஜ்ஜியமாக இன்று வளர்ந்து நிற்பதைப் பற்றி இன்று கூட அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கவலைப் படவில்லை என்பதை இந்தப் பதிவின் பிற்பகுதியில் காணலாம்.
முதலாவதாக  பாரதியின் போலி சமத்துவ இந்து தேசிய நிலைப்பாட்டிற்கு அவர் தாம் வாழ்ந்த காலத்தில் தன்னால் இயன்ற அளவுக்கு வலிமை சேர்த்தவர். அதன் பொருட்டு ஓயாமல் அவர் பாரதி புகழ் பாடிக்கொண்டேயிருந்தார்.
பாரதியின் ஆரிய சமாஜ அணுகுமுறை பற்றியும், இஸ்லாமியர் மீதான வெறுப்புணர்வு பற்றியும் ( “சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது” பாடல் ஆதாரம்) பல பதிவுகளுக்கு முன்பே நான் விளக்கியுள்ளேன். 
இந்து தேசியத்தின் மீது வெறிகொண்ட கவிஞனாக அவர் செயல்பட்டார் என்பதே உண்மை.
எனவேதான் பிரதமர்  மோடி அவரை உச்சி மீது வைத்துப் போற்றிக் கொண்டாடியுள்ளார்---
தினமலர்.காம்---
“09-Dec-2024
பாரதியாரின் 143வது பிறந்தநாளான இன்று, டில்லியில் அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். தொகுப்பில் பாரதி எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 
"தமிழ்ப்பெரும் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
தமிழகத்தின் கவுரவம் மகாகவி பாரதியார். தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார். பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் அரிய பொக்கிஷம். நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பாரதியாரின் தொலைநோக்கு பார்வை தொடர்ந்து ஊக்கமளிக்கிறது." 
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நண்பர்களே,
இந்து தேசியர்கள் இன்று திருவள்ளுவரைக் காவிமயமாக்குவதற்கு அடிப்படை ஏதுமில்லை. 
அவர் புத்தரின் சனாதன எதிர்ப்பு மார்க்கத்தை ஏற்றவர். சமத்துவ சகோதரத்துவத்தை போதித்தவர்.
இதனை எனது ஆய்வு நூலாகிய “திருக்குறள்—தமிழ்த்தேசிய அரசியல் நூல்” என்பதன் மூலம் மோடி பிரதமராவதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிட்டுள்ளேன். 
தோழர் கொளத்தூர் மணி அவர்கள் குடந்தையில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் இது பற்றிச் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
ஆனால் பாரதி வள்ளுவர் போன்று வேத மறுப்பாளரும் புத்த மார்க்கத்தினரும் அல்ல.
மாறாக  வேத மரபு சார்ந்த இந்து பாரதம் உருவாக வேண்டும் என்று கனவு கண்டவர் அவர். 
எனவே அவரை இனிமேல்தான் காவிமயமாக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
தமிழைப் பெற்றெடுத்தவன் சிவன் என்றும் அதற்கு இலக்கணம் தந்து உருக்கொடுத்தவன் ஆரிய மைந்தன் அகத்தியன் என்றும் கதை கட்டிய தமிழ்விரோதி அவர்.
அப்படியானால் அந்த ஆரிய மைந்தனின் தாய்மொழி எது  என்ற கேள்வி எழுகிறது.
அது சம்ஸ்கிருதம் என்ற ஆரிய  மொழி என்பதும் அது தமிழுக்கும் மூத்த மொழி என்பதும்  இதன் மூலம் வெளிப்படையாகவே சொல்லப்படுகின்றன ----
இவ்வாறு கூறும் பாரதி பாடலின் தலைப்பு “தமிழ்த் தாய்”----
 ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
 வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.”
இதன் பொருள் ஆரிய மைந்தனான வேதியன் அதாவது பார்ப்பனன் ஒருவன் வளர்த்தெடுத்ததுதான் தமிழ் என்றாகிறது.
இந்த நயவஞ்சகக் கருத்தையும் இதுபோன்ற பலவற்றையும் பாடிப் பரப்பிய பாரதியின் இடதுசாரி” பக்தர்தான் திரு ப.  ஜீவானந்தம்.
இந்த வேடதாரி பாரதியைத் தந்தை பெரியார் அன்றே அம்பலப்படுத்தி அறிவுறுத்தி வந்த காலத்தில் ஜீவா அதற்கு எதிர்நிலை எடுத்தார்.
இவரைப் போலவே இன்றைய தமிழகத்தில் சீமான் என்னும் சிவ நாடாரின் (நாக்பூரின்) ஏஜெண்டும் பாரதியை வானளாவப் போற்றிக்கொண்டும் பெரியாரை இழிவு செய்துகொண்டும் இருக்கிறார் என்பதை நினைவில் இருத்துங்கள்.
“பாரதி ஒரு பார்ப்பான். ஏனென்றால் அவன் எல்லோரையும் சமமாகப் பார்ப்பான்”---- என்று பேசும் சீமான் அதே நேரத்தில் பெரியாரை வெறும் மண் என்று இழிவு செய்வதையும் கவனியுங்கள்.
இதைத் தான் அன்று ப. ஜீவானந்தம் அவர்களும் செய்து வந்தார்.
ஜீவா செய்த இன்னொரு பார்ப்பனிய சேவை  இராமன் குறித்தது.
காந்தி இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும்  இராம பக்தி பெரிய அளவில் நாடு முழுதும் பரப்படலாயிற்று.
இராம இராஜ்ஜியம்தான் காந்தியின் கனவு.
அது இன்று நடைமுறைக்கு வந்து விட்டது.
அதாவது இந்து தேசியமாக இந்தியா சீரழிந்து விட்டது.
இந்தக் கேடுகெட்ட இராம பக்தியை இடதுசாரிப் போர்வையில் கம்ப இராமாயண முன்னெடுப்பு மூலம் தமிழ்நாட்டில் பரப்புவதில் இதே  பாரதி பக்தர் ஜீவா ஈடுபட்டார்.
இது பற்றி கம்யூனிஸ்ட் கட்சியின் இதழ் ஜனசக்தி.இன் அண்மையில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.***(27/1/24)***
தலைப்பு ராமர், கம்பர், ஜீவா
கட்டுரையாளர்  எஸ்.தோத்தாத்திரி (வைணவ பிராமணர்)
இதிலிருந்து ஒரு பகுதி---
“அவர் பாரதியின் சிந்தனைகளையும், கம்பனின் சிந்தனைகளையும் ஒரு புதிய கோணத்தில் விளக்க முற்பட்டார். இந்த விளக்கமானது ஒரு இலக்கியத் தரம் வாய்ந்த விளக்கமாகும். அவை கொள்கை விளக்கமாகவும் அமைந்து விடுகிறது. 
இது கம்பன் பற்றிய ஒரு இடதுசாரி விமர்சனமாகவும் அமைந்து விடுகிறது.
சோசலிசம் என்ற கருத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜீவா கம்பனை அணுகுகிறார். 
இதனை அவர் மூன்று கூறுகளாகப் பிரித்துக் கொள்கிறார்.
• சமத்துவம் பற்றிய கம்பனது கருத்து;
• சகோதரத்துவம் பற்றிய கருத்து;
• மனிதநேயம் பற்றிய கருத்து.
இவை அனைத்தும் கம்பனது காப்பியத்தில் பரவிக் கிடக்கின்றன.”
“ எல்லோரும் வாழ வேண்டும் என்ற சமத்துவ சமுதாயம் கம்பனது இந்த காவியத்தில் லட்சிய சமுதாயமாக அமைகிறது. இதன் உள்ளாக சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை இடம் பெறுகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய பொற்கால கனவைக் கண்டவன் கம்பன்.
கம்பனின் இராமன் ஒரு ஆதிக்க நாயகன் அல்ல. 
மனிதன் தெய்வமாக மாறிய கட்டம் என்று கூறுவார்கள். 
இங்கு தெய்வத்தை விட கம்பன் மானுட பண்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான். (என்கிறது தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி கட்டுரை)

கருத்துகள் இல்லை: