திங்கள், 18 மார்ச், 2024

தென் சென்னையில் அதிமுக ஜெயவர்தன்.. வட சென்னையில் ராயபுரம் மனோ?

 tamil.oneindia.com - Velmurugan P  : சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக பாமக உடன் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில், மறுபக்கம் வேட்பாளர் தேர்விலும் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக சார்பில் சென்னையில் யார் யார் எங்கு போட்டியிட உள்ளார்கள் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது, மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் உள்ளன.
who are going to contest in south Chennai and north chennai on behalf of AIADMK



திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்ட நிலையில் இன்று காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை இறுதி செய்து அறிவிக்க உள்ளது. லோக்சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் 20-ந் தேதி தொடங்க உள்ளதால் கூட்டணி பேச்சுவார்த்தையையும், வேட்பாளர் தேர்வையும் முடிக்க அதிமுக திட்டமிட்டிருக்கிறதாம். அதன்படி அதிமுக பாமக உடன் இன்று கூட்டணியை இறுதி செய்ய உள்ள நிலையில், வேட்பாளர்களையும் ஓரிரு நாளில் அறிவிக்க ஆயத்தமாகி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே வேட்பாளர் தேர்வு அதிமுகவில் நடந்து வந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அதிமுக வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக சார்பில் சென்னையில் யார் யார் போட்டி என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.. தென்சென்னை தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் ஜெ.ஜெயவர்தன் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

தென் சென்னையில் ஜெயவர்தன் கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 முதல் 2019 வரை எம்.பி.யாக பணியாற்றிய அவருக்கு கடந்த லோக்சபா தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் அவர் தோல்வியை தழுவி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ஜெயவர்தனுக்கு தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடசென்னை தொகுதியை பொறுத்தவரை ராயபுரம் மனோ வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். மதுரை தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிகளை பொறுத்தரை இந்த முறை அதிமுக குறைந்ததுத 31 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேமுதிக இடம் பெறாவிட்டால் 32 தொகுதிகளில் கண்டிப்பாக அதிமுக போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வட மாவட்டங்களில் பாமகவிற்கு தொகுதிகளை ஒதுக்கியது போக அத்தனை தொகுதிளிலும் அதிமுக போட்டியிடும் என்றும், பாமகவை தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட அனுமதிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: