சனி, 23 மார்ச், 2024

'நிருத்ய' என்ற சொல்லிலிருந்த்துதான் ' நாட்டியம்' வந்ததாம் பத்மா சுப்பிரமணியம் தெனாவெட்டு

May be an image of 1 person, smiling and eyeglasses
முனைவர் ச.சு.இளங்கோ

Muthu Selvan  :  பத்மா சுப்பிரமணியனுக்கு ஒரு நினைவூட்டல்!
1980 இல் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு!  மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேரம்பல நிகழ்ச்சியில், பத்மா சுப்பிரமணியம் தமிழில் நாட்டியத்திற்குச் சொல் இல்லை. 'நிருத்ய' என்ற சொல்லிலிருந்த்துதான் ' நாட்டியம்' வந்ததென்று  தன் ஆதாய்ச்சி முடிவாகக் கூறிக்கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர்.
அவையிலிருந்த தமிழறிஞர் ஏனோ அமைதியாகக் கேட்டுக் கொண்டிரும்தனர். எம்சியார் கூட்டிய கூட்டமாயிற்றே என்னும்.அச்சமோ  என்னவோ?!


ஆனால், அவையிலிருந்து ஒரு குள்ள உருவம் துள்ளிக் குதித்து ஆத்திரத்துடன் மேடை ஏறி, " நிறுத்து! பத்மா நாட்டியம் ஆடுவதோடு நிறுத்திக் கொள்ளட்டும். சொல்லாராய்ச்சியில் இறங்க வேண்டாம். அது மொழியியல் அறிஞர்க்குரியது' என்று உரத்த குரலில் கூறிவிட்டு நாட்டியம் என்பது தமிழ்ச் சொல்லே என்று பாவாணரைச் சான்று காட்டி உறுமியது
 அவையோர் அப்போதுதான் விழித்துக்  கொண்டது போலக் கை தட்டி ஆதரவு  தெரிவித்தனர். பத்மா தன் உரையை அரைகுறையாய் முடித்துவிட்டு அமர்ந்துவிட்டார்.
அந்தக் குள்ள உருவத்திற்குச் சொந்தக்காரர் முனைவர் ச.சு.இளங்கோ (இராமர் இளங்கோ) ஆவார். பாவேந்தரை ஆய்வி செய்து முனைவர் பட்டம்.பெற்றவர்..
மிகப் பெரிய நிகழ்ச்சியில் பாவேந்தர் ஊட்டிய துணிவுடம் மேடையேறி பத்மாவின் மூல்கை உடைத்த நிகழ்ச்சி என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சியாக இன்றும் உள்ளது. நேரில் கணட காட்சி!
முனைவர் ச.சு.இளங்கோ

கருத்துகள் இல்லை: