மின்னம்பலம் - christopher : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பது குறித்த உடன்படிக்கை இன்று (மார்ச் 18) திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 9 மக்களவை தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுச்சேரி உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அந்த 9 தொகுதிகள் என்னென்ன என்பது கேள்வியாக எழுந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரஸ் சார்பில், அசோக் கெலாட், அஜோய் குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் முடிவில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உடன்படிக்கை இன்று கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாக திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது.
வேட்புமனு தாக்கல் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதால் அதனை முன்னிட்டு இன்று திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக