சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது; வேறுபட்டது ( டி.என்.ரே 1939)
வேதகால மக்கள் "பிபிதகா" என்ற தான்றி கொட்டைகளை ( Terminalia Bellirica ) பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள்.
"சாலகா" என்று நாரத ஸ்மிருதி குறிப்பிடுவது தந்தத்தால் ஆன நாற்கோணப் பகடை.
ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், கீழடி ஆகிய இடங்களில் சுடுமண் அறுகோணப் பகடைகள் ( cubic dice) கிடைத்துள்ளன.
"வல்லு" எனப்படும் பகடை தொடர்பான கலைச்சொற்களுக்கு போகிற போக்கில் புணர்ச்சி விதி சொல்கிறது தொல்காப்பியம்!
வல்லப் பலகை ( அகநானூறு 377); சங்குகளில் துளையிட்டு செய்த பகடைகள் ( அகநானூறு 135); சோழ மன்னன் தம்பியுடன் தாமப்பல் கண்ணணார் என்ற புலவர் ஆடிய பகடை விளையாட்டு ( புறநானூறு 43) போன்ற சங்க இலக்கியங்களுக்கு இணையான நடைமுறை சார்ந்த ஆவணம் வேறு எந்த மொழியிலும் இல்லை.
"வல்லு போர் வல்லாய்....வட்டு உருட்டு வல்லாய்" என்று சூதாட்டத்தில் வல்லவன் என்று செவ்வேளைப் பாடுகிறது பரிபாடல் ( பரி.18). ( இதன் பின்னணி ஆய்விற்குரியது)
பகடை விளையாட்டு சார்ந்த உளவியலின் உச்சகட்ட படப்பிடிப்பை நுட்பமாக அளிக்கிறது கலித்தொகை ( 136). இப்பாடல் குறிப்பிடும் "பத்துருவம்" மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல், கீழடியில் கிடைக்கும் கனசதுர படைகளில் மட்டுமே கிட்டும்.
பகடை விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட மகாபாரதம் தொடர்பான அகழாய்வுத் தலங்கள் எவற்றிலும் பண்டைய காலத்தோடு தொடர்புபடுத்தக்கூடிய பகடைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை!
"பல இடங்களில்" தோண்டித் தோண்டிப் பார்த்தாலும் கிடைக்காத பகடை, தோண்டத் தயங்கி, பின்னர் தோண்டிய கீழடியில் எளிதாகக் கிடைக்கிறது.
இதுவும் கூட ஒரு பகடை விளையாட்டு தான்!
Let us roll the dice....
Archaeology and Ancient Origins : ·
The terracotta dice discovered in Harappa, an ancient city of the Indus Valley Civilization (2600-1800 BC), now located in present-day Pakistan, offer a fascinating glimpse into the past. These cubical dice, adorned with dots representing numbers one through six, were unearthed during excavations conducted between 1995 and 2001.
What makes these dice even more intriguing is the fact that they were not exclusive to Harappa. Similar artifacts were also discovered in the ancient city of Mohenjo-daro. Sir John Marshall, a prominent archaeologist, noted the prevalence of dice games in Mohenjo-daro, as evidenced by the abundance of dice pieces found. These dice were typically crafted from pottery, and their shapes varied in size, ranging from 1.2 by 1.2 by 1.2 inches to 1.5 by 1.5 by 1.5 inches.
The existence of such dice in multiple locations of the Indus Valley Civilization raises questions about the significance of these games in their society and what they reveal about the daily life and recreational activities of that ancient culture. These ancient dice serve as mysterious artifacts that connect us with a civilization long gone, and they continue to spark curiosity about the past.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக