வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

இனி தலைவலி மாத்திரை கூட வாங்க முடியாது! - மெடிக்கல் ஷாப்புகளுக்கு பறந்த உத்தரவு

tamil.samayam.com : அன்னபூரணி : சென்னை: மருத்துவரின் பரிந்துரை மறந்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருந்து விற்பனை நிறுவனங்களில் ஆய்வு:
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கடந்த 2023 ஆண்டிற்கான ஒன்பது மாத காலத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் கீழ் விதிமீறல்கள் ஈடுபட்ட மொத்தம் மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் இது 219 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் 381 மருந்து நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் விதிகளை மீறி விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மொத்த விற்பனை நிறுவனங்களில் 21 மருந்து விற்பனை நிறுவனங்களில் வடிவங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உரிமங்கள் ரத்து:

மேலும் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனையும் விநியோகமும் செய்த ஒன்பது மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களிலும் மருந்து நிறுவனங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதன சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சிகளில் 1,933 காலிப் பணியிடங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!

முன்னதாக சமீபத்தில் மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்களை நியமிப்பது, அதற்கான தகுதி மற்றும் சம்பளம் போன்றவை அந்தந்த மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டதாகும் எனவும், மருத்துவ தொழில் ஒழுங்குபடுத்துதல் விதிமுறைகள் 2015 என்னும் சட்டத்தை ஒன்றிய மருத்துவ கவுன்சில் உருவாக்கியுள்ளது.

அதன்படி டிபார்ம் படித்தவர்கள் மருத்துவமனைகளின் பல பிரிவுகளில் பணிபுரிய விதிகளில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்தாளுநர்கள் மருந்து சீட்டு எழுதி தருவதற்கு அனுமதி அளிக்கும் திட்டத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் இதற்கான காரணமாக அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது சட்டத்தின் படி குற்றமாகவே கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருந்து நிறுவனங்களுக்கு இந்த அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: