tamil.oneindia.com - Vigneshkumar : இடஒதுக்கீடு பணியிடங்கள் பொது பிரிவினர் மூலம் நிரப்பப்படாது! யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய அரசு விளக்கம்
டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் இருந்து போதிய விண்ணப்பங்கள் இல்லாத பட்சத்தில் அதைப் பொதுப்பிரிவில் நிரப்ப யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்ட நிலையில், இதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் புதிய இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தக் கடந்த டிச.27ஆம் தேதி யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது. இதில் பொதுமக்களைக் கருத்துகளைக் கூறலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான கடைசி தேதி இன்று ஜனவரி 28 அன்று முடிவடைகிறது.
Amid UGC new guidelines, central govt clarifies that No reserved posts will de-reservedயுஜியி அறிவித்த புதிய வழிகாட்டுதல்கள் கீழ் உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் உள்ள பதவிகளில் போதிய விண்ணப்பங்கள் வரவில்லை என்றால் அதை நீக்கலாம் என்பது போன்ற விதி இருந்தது.
புதிய விதிமுறை: அதாவது உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பவில்லை என்றால் அதை பொதுப் பிரிவினருக்குத் திறந்து விடுவதே இந்த விதியாகும். தற்போதுள்ள விதியின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரம்பவில்லை என்றாலும் கூட அதை பொதுப் பிரிவினரைச் சேர்க்க முடியாது. ஆனால், புதிய விதிகளின்படி அரிதான மற்றும் விதிவிலக்கான நேரங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் அதைப் பொதுப்பிரிவினர் மூலம் நிரப்ப முடியும்.
இந்த புதிய விதிகளின்படி குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கப் பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தால் போதும். அதேநேரம் குரூப் ஏ மற்றும் பி பதவிகளுக்கு, இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிவைக் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பொதுப் பிரிவினரை வைத்து நிரப்ப முடியும் என்று விதி இருந்தது.
போராட்டங்கள்: இந்த வரைவு வழிகாட்டுதல்கள் கடும் எதிர்ப்பை கிளப்பின. உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரச் செய்யப்படும் சதி தான் இது என்றும் மோடி அரசுக்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகள் மீது அக்கறை இல்லை என்றும் காங்கிரஸ் சாடியிருந்தது. மேலும், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், யுஜிசி தலைவருக்கு எதிராக டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தையும் அறிவித்து இருந்தனர்.
கல்லூரி நிறுவன பதவிகளில் இடஒதுக்கீடு காலியிடங்களை.. இனி ஓசி பிரிவினர் நிரப்பலாம்! யுஜிசி புதிய விதி கல்லூரி நிறுவன பதவிகளில் இடஒதுக்கீடு காலியிடங்களை.. இனி ஓசி பிரிவினர் நிரப்பலாம்! யுஜிசி புதிய விதி
விளக்கம்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு இப்போது விளக்கம் கொடுத்துள்ளது. எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட எந்த காலியிடமும் பொதுப் பிரிவினருக்கு மாற்ற முடியாது என்று கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. கல்வி அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் , எந்த இட ஒதுக்கீடு பதவியும் பாதிக்கப்படாது. 2019 விதிகளின்படியே அனைத்து காலியிடங்களும் நிச்சயம் நிரப்பப்படும்" என்று தெரிவித்துள்ளது.
அதேபோல யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமாரும் இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளார். கடந்த காலங்களிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் பொதுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது இல்லை என்றும் இனிமேலும் அப்படி நடக்காது என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக