tamil.oneindia.com -Vishnupriya R :; சென்னை: சிறுநீரக கற்களை சிறுநீர் வழியாக வெளியே அனுப்பும் சக்தி வாய்ந்த ரணகள்ளி செடி குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ரணகள்ளி எனப்படும் மூலிகையை வீட்டில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம். இதன் வேர்தான் என்றில்லை, இலையை நட்டால் கூட வளர்ந்துவிடும். இந்த செடி சிறியதுதான். இது பல வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.
Do you know the health benefits of Ranakalli?
வெப்பம் நிறைந்த பகுதிகளில்தான் இந்த ரணகள்ளி செடி காணப்படும். இது அழகுக்காக பயன்படுத்தப்பட்டாலும் முக்கிய மூலிகைகளில் ஒன்றாகவே காணப்படுகிறது.
இந்த மூலிகையின் சாறு கண்களில் உள்ள வலியை நீக்கும். இது மலச்சிக்கலை தீர்க்கும். இது போல் இந்த இலையின் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு இருந்த இடம் தெரியாமல் போகும். காயங்களின் மீது இந்த ரணகள்ளி இலைகளை போட்டால் காயம் ஆறும். தோல்களுக்கு மிகவும் நல்லது. தோல் நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த ரணகள்ளியில் ஆன்டிபிரைக் பண்பு இருப்பதால் காய்ச்சலை போக்கும். நாள்பட்ட வெள்ளைப்படுத்ல் இருந்தால் தினமும் இந்த இலையை கொதிக்க வைத்து கசாயம் போல் குடித்து வந்தால் குறையும். ரணகள்ளி இலைகளை வீக்கத்தின் மீது தடவினாலும் பலன் கிடைக்கும். இது மூல நோயை கூட குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
உடலில் எங்கு வேணாலும் ரத்தக் கசிவு இருந்தால் இதன் இலைகளை மை போல் அரைத்து உள்ளங்கால்களில் தடவினால் ரத்தக் கசிவு சட்டென நிற்கும். அது போல் மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் இது குணப்படுத்தும். மஞ்சள் காமாலைகூட குணப்படுத்தும். கல்லீரல் திறனை அதிகரித்து செயல்பாட்டையும் அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் இந்த ரணகள்ளியின் சாறை தினமும் இரு வேளை குடித்து வந்தால் போதும் சர்க்கரை அளவு குறைவது தெரியும். இந்த ரணகள்ளி எடையை குறைக்க உதவும். நச்சுக்களை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடலில் உள்ள புழுக்களை அகற்றும். சிறுநீரகத்திலும் பித்தப்பையிலும் கற்கள் இருக்கும்.
இதற்காக அறுவை சிகிச்சை கூட சிலருக்கு செய்ய நேரிடும். ஆனால் இந்த ரணகள்ளியின் 3 இலைகளை தலா 3 நாளைக்கு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதன் பிறகு 10 நிமிடம் கழித்து ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் வரும் போது அதில் கல்லும் வந்து விழுந்து விடும். இந்த ரணகள்ளியை சாப்பிடும் போது பால், பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக