திங்கள், 19 பிப்ரவரி, 2024

என் துயரை கேட்டபின் எழுச்சி கொண்டு துணைக்கு வந்த சிங்கமே! ..திரு ஜி ஜி பொன்னம்பலம் குறித்து கலைஞர்!..

ராதா மனோகர்
: சரிக்காரியா கமிஷன் ..திராவிட வெறுப்பாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் திமுக மீது பிராண்டும் ஆரிய பேய்களின் ஒரு பிராண்டல்தான் அது
அது பற்றிய ஒரு குறிப்பு அண்மையில் என் பார்வைக்கு எட்டியது!
கலைஞர் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி முன்னாள் முதல்வர் திரு பக்தவத்சலம் கம்யூனிஸ்டு தலைவா கல்யாணசுந்தரம் போன்றோர் தயாரித்து திரு எம்ஜியார் அவர்களிடம் கொடுத்தார்கள்
இந்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு திரு ஜி ஜி பொன்னம்பலம் ஆஜாரானது தெரிந்ததே.

அந்த வழக்குதான் திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் இறுதியாக பேசிய வழக்கு.
அதன் பின் சில நாட்களில் அவர் மலேசியாவில் இயற்கை எய்தினார்
அப்போது திரு கலைஞர் அவர்கள் தனது உற்ற நண்பர் ஜி ஜி பொன்னம்பலத்திற்கு அஞ்சலி செலுத்து முகமாக   எழுதிய கவிதையும் அஞ்சலி குறிப்பும் தற்போது என் பார்வைக்கு எட்டியது
ஜி ஜி பொன்னம்பலம் அவர்களின் மறைவுக்கு கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் செய்தியும் கவிதையும்!
பாரெல்லாம் புகழ் பரப்பிய என்னருமை உடன் பிறப்பை இழந்து விட்ட
என் மனதின் துயர் துடைக்க இனி யார் வருவார் இவ்வுலகில்?
உண்மையுள்ள தோழனாய் உயிர் காக்கும் நண்பனாக
நட்புக்கு இலக்கணமாக நான் கண்ட நண்பா நின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு உன்னை இழந்து தவிக்கும் தமிழர் பரம்பரைக்கு குடும்பத்திற்கும் அனுதாபம் தெரிவிக்கும் இக்கட்டான நிலைக்கு என்னை ஏன் ஆளாக்கினாய்? நான் கண்ட நல்லவர்களில்,
நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட சட்டத்துறையின் காவலனே - என்
உடன்பிறப்பே   உன் பிரிவை ஆற்றாமல் ஆடுகின்ற நெஞ்சங்கள்
கண்ணீரில் உனை காணத்துடிப்பதை
அறியாமல் மீளாத்துயிலில் நீ மாய்ந்து விட்ட வேகம் என்ன? துனிவுதான் என்ன?
என் துயரை கேட்டபின் எழுச்சி கொண்டு துணைக்கு வந்த சிங்கமே!
செந்தமிழ் செல்வனே நின் சேவையின்
மகத்துவம் செப்புவோர் கோடியிருக்க
நீ சிரிக்காமல் சிவனே என சோர்ந்துவிட்டதேனப்பா
குலுங்குகிறது மனம் . கொதிக்கிறது நெஞ்சு
நினைக்கிறேன் நீ தந்த நினைவுகளை
நெஞ்சில் ஓர் நெடுஞ்சுமை
நாடு போற்றும் நல்லவனே நாமறிந்த
வல்லவனே, தேடி உன்னை பலர் கூடி
தீராது ஓலமிட, துஞ்சுகின்ற உன் அழகு
துளைக்கிறது என் மனதை    
மீள் பதிவு : கலைஞர் மீது எம்ஜியார் கொடுத்த ஊழல் புகாரை விசாரணை செய்த  சர்க்காரியா கமிஷன்  வழக்கில் இலங்கையின் புகழ் பெற்ற வழக்கறிஞரும்  தனிப்பெரும் தலைவர் என்று தமிழர்களால் போற்றப்பட்ட  அமரர் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் ஆஜாராகியது எல்லோரும் அறிந்ததே.
திரு திரு ஜி ஜி அவர்கள் தமிழகம் வந்த வரலாறு பற்றி சில சுவாரசியமான செய்திகள் உள்ளன.
திரு  ஜி ஜி பொன்னம்பலம் பற்றி ஏற்கனவே  அறிந்திருந்த  கலைஞர் அவர்கள் முன்னாள்  சென்னை மேயர் திரு சா கணேசனை திரு மணவை தம்பி அவர்களிடம் அனுப்பினார்.
திரு மணவை தம்பியின் வீட்டிற்கு வந்த திரு சா.கணேசன் இது பற்றி பேசினார்
கலைஞரின் இந்த செய்தியை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு பறந்தார் திரு மணவை தம்பி அவர்கள்
அங்கு  அவரது நண்பரான திரு ஆனந்த சங்கரியின் (எம் பி) அவர்களின்  துணையோடு திரு ஜி  ஜி பொன்னம்பலத்தை அணுகி சர்க்காரியா கமிஷன் வழக்கு பற்றி கூறி அழைப்பு  விடுத்தார்
ஏற்கனவே  கலைஞர் அவர்கள்   இந்த வழக்கில்  திரு ஜி ஜி ஆஜராக வேண்டும் என்று  விரும்பி ஒரு தமிழரசு கட்சி பிரமுகர் மூலமாக செய்தியை அனுப்பி இருந்தார்
அந்த தமிழரசு கட்சி பிரமுகரோ அந்த செய்தியை ஜி ஜி பொன்னம்பலத்திடம் தெரிவிக்காமல் கமுக்கமாக அமுக்கி விட்டார்
இந்த வழக்கில் திரு ஜி ஜி ஆஜரானால் அவருக்கு புகழ் வந்துவிடுமே என்ற அரசியல் காழ்புணர்ச்சிதான் காரணம்.
மேலும் ஜி ஜி பொன்னம்பலம் தான் ஆஜரான  பல பெரிய வழக்குகளை எல்லாம் பொடிபொடியாக்கிய வரலாற்று பெருமை உடையவர் ..
எம்ஜியார்  கல்யாணசுந்தரம் பக்தவத்சலம் கோஷ்டியினால் ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஜி  ஜி பொன்னம்பலம் வெற்றி பெற்றால்  ஜி ஜி. பொன்னம்பலத்தின் அரசியல்  செல்வாக்கு இலங்கை தமிழர்களிடம் எக்கச்சக்கமாக எகிறிவிடும் என்ற எண்ணம்   அந்த பிரமுகரிடம் குடிகொண்டிருந்தது
சென்னை வந்த ஜி ஜி வடபழனி  கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு திரு மணவை தம்பியின் வீட்டிற்கு  சென்று அவரை சந்தித்து விட்டு  பின்பு கலைஞரின் வீட்டிற்கு சென்றார்
கலைஞரை சந்தித்த  ஜி ஜி அவர்கள் ஏராளமான ஜூனியர் வழக்கறிஞர்களை தருமாறு வேண்டி கொண்டார்
மண்டபம் நிறைந்த அளவில் ஏராளமான திமுக வழக்கறிஞர்கள் ஜி ஜி பொன்னம்பலம் முன்பாக  குவிந்தனர்.
அந்த மண்டபம் நிறைந்த   ஜூனியர் வழக்கறிஞர்களை வைத்து கொண்டு  வகுப்பு எடுத்தார்  ஜி ஜி. பொன்னம்பலம்.
சர்க்காரியா  கமிஷன் அறிக்கையை  அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து  ஒவ்வொரு ஜூனியர் வழக்கறிஞர்களிடமும் ஒவ்வொரு பாயிண்டுகளாக பொறுப்பு  கொடுத்து விளக்கங்களை கொடுத்து கொண்டிருந்தார்
இந்த செய்திகளை அறிந்த எம்ஜியார் வெலவெலத்து போனார்.
கல்யாண சுந்தரமும் பக்தவத்சலமும் தன்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் என்பது எம்ஜியாருக்கு நன்றாகவே விளங்கியது .
ஒரேயடியாக இது பற்றி தனக்கு தெரியாது என்றும் கம்யூனிஸ்டு தலைவர் கல்யாணசுந்தரம்தான் இதை தன்னிடம் தந்தார் என்று கூறி கைகழுவினர்
பின்பு இது பற்றி நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டார்
இந்த வழக்குத்தான் திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் பேசிய இறுதி வழக்கு.
இந்த  வழக்கு பேசியதற்கு உரிய பணத்தை கலைஞரிடம் இருந்து பெற்று கொள்ள  மறுத்துவிட்டார் . ஒரு தமிழனுக்காக பேசுவதற்கு இன்னொரு தமிழன் பணம்  வாங்குவதா என்று மறுத்துவிட்டார்
கலைஞர் மீதான தாக்குதல்கள் அவர் ஒரு தமிழர் தலைவர் என்பதால் என்பதை ஜி ஜி அவர்கள் புரிந்துகொண்டார் என்றே கருதுகிறேன்
விமான பயண செலவு தங்குமிட செலவு போன்றவற்றை கூட பெற மறுத்துவிட்டார்
இதன் பின்பு திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் மலேசிய சென்றார்
அங்கு சில காலத்தின் பின்பு  காலமானார்
திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் திரு ஜி ஜி அவர்களுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது!

கருத்துகள் இல்லை: