முகமது ஜமீல் : பௌத்த மயமாக்கலும் பைத்திக்காரதனமும்:-
திருப்பதி பாலாஜி கோவில் சமண தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆலயமா?
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் சமண சமயத்தின் 22 வது தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆலயம் என்றுதான் அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்,
அதில் இந்து மத வரலாற்று ஆராய்ச்சியாளர் 1930ல் பிறந்த திரு.கிருஷ்ண ராவ்,திருப்பதி பாலாஜி கோவில் சமண சமயத்தின் 22 வது தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆலயம் என்று குறிப்பிடுகிறார்
பல முறை அதனை உறுதியும் செய்து இருக்கிறார்.
விஜய நகர பேரரசைத்தோற்றுவித்த ஹரிஹரனும் புக்கனும் திருப்பதிக்கு செல்கின்றார்கள், அங்கு உள்ள சமண துறவிகளை மிரட்டுகிறார்கள் சிலையை பெருமாள் சிலையாக மாற்றுங்கள்,
நீங்களும் வைணவத்திற்க்கு மாறுங்கள் இல்லையேல் சிரவண பெலகோலாவில் உள்ள பாகுபலி சிலையை உடைப்போம் என்று மிரட்டுகிறார்கள்
மிரட்டலுக்கு பயந்து சமண துறவிகள் வைணவர்களாகவும், நேமிநாதர் சிலையை பாலாஜி சிலையாகவும் மாற்றுகிறார்கள். அதை குறிப்பிடும் இரண்டு கல்வெட்டுகள் பெங்களூர் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.1 மைசூரிலும் இருக்கிறது என்கிறார்.
அது மட்டும் இல்லை தென் இந்தியாவில் 1000 சமண கோவில்களுக்கு மேல் சிவன் மற்றும் பெருமாள் கோவில்களாக மாற்றி இருக்கிறார்கள் ஆதி சங்கரரும், ராமா னுஜரும்,
கிபி 10 ம் நூற்றாண்டிலேயே திருப்பதி நேமிநாதர் கோவிலை பாலாஜி கோவிலாக மாற்றினார் ராமானுஜர், ஆனால் அது மறுபடியும் மீட்டுருவாக்கம் பெற்றது.
ஆனால் விஜய நகர பேரரசை தோற்றுவித்த ஹரிஹரனால் 14 ம் நூற்றாண்டு முழுவதுமாக வெங்கடேசன் கோவிலாக மாற்றப்பட்டது.
அதே போல சமீபத்தில் தமிழகத்தில் தோன்றிய புது பௌத்த கதாசிரியர்கள் , திருப்பதி பாலாஜி கோவில் புத்தர் கோவில் என்றும் சமணர் எச்சங்களை எல்லாம் புத்தர் எச்சங்கள் என்று கதை விட்டு கொண்டு கற்பனையில் உளர்கிறார்கள்.
ஒரு விசயம் சொல்லட்டுமா?
தென் இந்தியாவில் ஒரிசா மற்றும் விந்திய மலைக்கு கீழ் சமணம்தான் முதன்மை சமயமாக இருந்தது பௌத்தம் பின்புதான் வருகிறது.
வந்த சில நூற்றாண்டுகள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை, முற்றும் முழுவதுமாக சமணம்தான் கோலோச்சியது.
தென் இந்தியாவிலும் தமிழகத்திலும் பௌத்தம் மிக மிக சொற்பமாகவே இருந்தது. விஜயாலயச்சோழன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறுறான், கூன் பாண்டியனை திருஞான சம்பந்தன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாத்துறான். பல்லவ மன்னன் மகேந்திர வர்மனை சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாத்துறார் திருநாவுக்கரசர்.
தேவாராம் பாடின திருஞான சம்பந்தரைத்தவிர மாணிக்க வாசகர்,சுந்தரர், திருநாவுக்கரசர் ஆரம்பத்துல பின்பற்றினது சமணம்,
அதை பின்னாடி விட்டு சமண சமயத்துல இருக்கும் போது எழுதின இலக்கியத்த எரிச்சுட்டு, தாங்கள் படிச்ச சமண பள்ளிகள அழிச்சுட்டு, சமண கோவில்கள சிவன் கோவில்களா மாத்திட்டு சைவத்துக்கு மாறினவங்கதான். சோழர்கள் சேரரர்கள் பாண்டியர்கள்
பல்லவர்கள் என்று சமணத்தில் இருந்துதான் சைவத்திற்க்கு மாறினார்கள்
சமண கோவில்களைத்தான் சிவன் பெருமாள் கோவில்களாக மாற்றினார்கள்.
கெடைக்குற சமண சிலைகளே எல்லாம் புத்தர் செலைனு அடுச்சு விடுறாங்க, நம்புறாங்க பரப்புறாங்க வரலாற்ற மாத்துறாங்க திரிக்குறாங்க,
நான் சமண மதத்துக்காரோனோ பௌத்த மதத்தோட எதிரியோ இல்ல
உண்மையான வரலாற்று விரும்பி,
சமணம் செலிந்து இருந்த போது பௌத்தம் பின்பு இங்கு வருகிறது
ஆனால் சமணத்துடன் இலக்கிய போரில் ஈடுபடுகிறது. சமண நூலான சிலப்பதிகாரத்திற்க்கு பதிலாக பௌத்ததில் மணிமேகலை எழுதப்பட்டது,
மணிமேகலைக்கு பதிலாக சமணத்தில் சீவக சிந்தாமணி வளையாபதி எழுதப்பட்டது.
இதுக்கு பதிலாக பௌத்ததில் குண்டல கேசி எழுதப்பட்டது.
குண்டலகேசிக்கு பதிலாக சமணத்தில் சூளாமணியும் நீலகேசியும் எழுதப்பட்டது.
ஐந்து பெருங் காப்பியங்களில் 3 பெரும் காப்பியங்கள் சமணம் இரண்டு காப்பியங்கள்தான் பௌத்தம், அப்புறம் 5 சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணம், விருத்த நூல்கள் அனைத்தும் சமணம், நிகண்டு நூல்கள் அனைத்தும் சமணம், பதிணென் கீழ் கணக்கு நூல்கள்.
அனைத்தும் சமணம்தான் அதுல திருக்குறள மட்டும் எந்த மத சாயமும் இல்லாம தமிழர்களும் தமிழ் நாடு அரசும் மாத்தி இருக்கு, இலக்கண நூலில் நன்னூல்தான் சிறந்த இலக்கண நூல் அதைத்தான் தமிழ் கவிதைகளை கையாள பயன்படுத்துவாங்க
அது சமண நூல்தான், பிள்ளைத்தமிழ் மற்றும் புராணங்கள் நாடகங்கள்னு தமிழுக்கு அதிகமா இலக்கியங்கள் தந்ததுல சமணம் முதலிடமும், அடுத்து சைவமும், அடுத்து வைணவமும், அடுத்து கிருஷ்தவமும், அடுத்து இசுலாமும், அடுத்து கடைசியாகதான் பௌத்தமும் வருகிறது ,
மணிமேகலை குண்டல கேசி வீர சோழியம், இதை தவிர பாலியில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட பிங்களகேசி,அஞ்சன கேசி,கால கேசி போன்ற நூல்கள்தான்.
ஆனா சமீபத்துல பௌத்த பொய்கள் , ஆதிக்கத்தின் பேரில் சூழ்ந்து கொண்டு இருக்கிறது. பௌத்தம் இங்கு அழிக்கப்பட வில்லை
ஏன்னா பௌத்தம் பெரும்பாண்மை மதமாவே இல்ல எனவே அது அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்து காணமையே போயிடுச்சு, சமணத்தை தான் சைவமும் வைணவமும் கூட்டி சேர்ந்து அனல்வாதம் புனல் வாதம் நடத்தி அழித்தது.
கீழே இரண்டு படங்கள் திருப்பதி மலையைச்சுற்றிலும் சமண கோவில்களும் பாறையில் உள்ள சிலைகளும் இருக்கிறது.
அதே போல எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்கால கோவில்களின் பட்டியல் 60% மேல் சமண கோவில்கள்தான், மீதி சிவன் கோவில் பெருமாள் கோவில், முருகன் கோவில்கள், ஒன்று கூட புத்தர் கோவிலோ எச்சங்களோ ஒன்னு கூட இல்லை.இப்போ பாக்குறேன் நவயான புத்த மத ஆதரவாளர்கள் அந்த சமண கோவில்களை எல்லாம் புத்தர் சிலைனு பரப்பி கிட்டு இருக்காங்க இது மிக பெரிய வரலாற்று திரிபையே ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அயோத்தா தாசர் எழுதிய எல்லாம் பௌத்த மயமாக்கல் புளுகுவை எல்லாத்துக்கும் அப்லே பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.பொய் பௌத்த கதைய பேச ஆட்கள் வந்துட்டாங்க தூக்கி புடிக்குறாங்க,
ஆனா உண்மையான சமணத்தை பேச இங்கு யாரும் இல்லை , எனவே வரவாற்று ஆய்வாளர்கள் உண்மையின் பக்கம் நின்று போலி பௌத்த மாயைகளை முறியடிக்க வேண்டும்.....
குறிப்பு:- புத்தரும் சரி பௌத்தமும் சமணத்தில் இருந்து அம்புட்டு கொள்கையையும் காப்பி அடுச்சு கிட்டதுதான்.டாட்....
அதே போல பௌத்தம் வடக்கே கால ஓட்டத்தில் அழிந்தது, சமணம் தென் இந்தியாவில் திட்டமிட்டு அழிக்கப்பட்டது!..... நன்றி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக