மாலை மலர் : பெங்களூரு கர்நாடகா மாநில சட்டசபையில் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோவில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.
இந்நிலையில், இந்தச் சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த பா.ஜ.க, முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக, கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசு தனது கஜானாவை நிரப்ப முயற்சிக்கிறது. மாநில அரசு ஏன் இந்துக் கோவில்களில் இருந்து வருமானம் ஈட்டப் பார்க்கிறது? தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்துக் கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக