செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

கூட்டணியை லாக் செய்த ஸ்டாலின்? இதுதான் பார்முலா.. எடப்பாடிக்கு செக் வைக்க போகும் அடுத்த 10 நாட்கள்

 tamil.oneindia.com  -Shyamsundar  :   சென்னை: திமுக கூட்டணி தீவிரமாக தயாராகி வருகிறது, இன்னும் 10 நாட்களில் இந்தியா கூட்டணி முடிவு பற்றிய அறிவிப்பு வரும். யார் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியே வரும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை. அது அதிமுகவிற்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
Is CM Stalin finalizing the big DMK INDIA alliance with same new parties?


எங்கே அதிமுக தனியாக நிற்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக தேமுதிக, பாமக இரண்டும் அதிமுக கூட்டணி உடன் ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் இதுவரை அதிமுகவிடம் நேரடியாக ஆலோசனை செய்யவே இல்லை.

கூட்டணி: இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைய உள்ள லோக்சபா கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேட்டி ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 2019 லோக்சபா தேர்தல் போல் இல்லை இது. அப்போது அதிமுக பவரில் இருந்தது. அதேபோல் மேலே பாஜகவும் பவரில் இருந்தது. இதனால் பாமக, தேமுதிக இந்த கூட்டணியை விரும்பியது. ஆனால் இப்போது அப்படி இல்லை. அதிமுக ஆட்சியில் இல்லை. அதிமுக பிளவு பட்டும் கிடக்கின்றது. அதிமுகவில் நல்ல நிலை இல்லை. இதனால் அதிமுக கூட்டணியை மற்ற கட்சிகள் பெரிதாக விரும்புவது இல்லை.

அதோடு இல்லாமல்.. பாஜகவும் அதிமுக கூட்டணியில் இல்லை. இப்படி எல்லாம் இருக்கும் போது அதிமுக கூட்டணி உருவாவதில் சிக்கல் இருக்கிறது. பாஜகவின் கூட்டணி உருவாவதில் சிக்கல் இருக்கிறது. பாஜக தமிழ்நாட்டை கவனிக்கவில்லை. இந்தியா கூட்டணியை உடைக்க தீவிரமாக அவர்கள் பணிகளை செய்கிறார்கள். அப்படி இருக்க தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்க பெரிதாக நினைக்கவில்லை.

கவனம் இல்லை: அவர்கள் இங்கே கவனம் செலுத்தவில்லை. மத்தியில் இருப்பவர்கள் யாரும் அதிமுகவை விமர்சிக்கவில்லை. மாநில பாஜக தலைவர்கள் மட்டுமே அதிமுகவை சீண்டுகிறார்கள். இப்படி இருக்க .. அதிமுக - பாஜக இடையே என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும். பாமக, தேமுதிக இதை எல்லாம் பார்த்துவிட்டுதான் காய் நகர்த்தும். ஒரே வழிதான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்தால்தான் கூட்டணி வரும்.

இல்லையென்றால் இப்படியேதான் இழுபறி இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணியில் பிரச்சனை இல்லை. காங்கிரசுக்கு கூட தொகுதி குறைக்க மாட்டார்கள். அதிகமாக கொடுக்க மாட்டார்கள். கடந்த முறை கொடுத்த அதே அளவில் கொடுப்பார்கள். சில இடங்களில் தொகுதிகளை மட்டும் மாற்றுவார்கள். இன்னும் 10 நாட்களில் இந்தியா கூட்டணி முடிவு பற்றிய அறிவிப்பு வரும்.

யார் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியே வரும். ஆனால் பாஜக இன்னும் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. அப்படி இருக்க அவர்கள் முயற்சி எடுத்தால் வேண்டுமானால் கூட்டணி அமையும். எடப்பாடியை யாரும் பெரிதாக நம்பவில்லை. இதனால் அவருடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை.

அதிமுக உடன் கூட்டணி வைக்க இதனால்தான் யாரும் முன் வராமல் இருக்கின்றனர். கட்சி உடைந்து இருக்கிறது. அப்படி இருக்க எப்படி அவருடன் கூட்டணி வைக்க முடியும் என்று கூட்டணி கட்சிகள் நினைக்கின்றனர், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: