வெள்ளி, 19 ஜனவரி, 2024

கிராமப்புறத்தில் திமுக வாக்கு வங்கி சரிகிறதா? எழுகிறதா? சமூகவலையில் விவகாரமான கருத்து மோதல்!

 Kandasamy Mariyappan : வருத்தமான செய்தி.!
2021ம் ஆண்டை ஒப்பிடும் போது... கிராமப்புறங்களில் திமுக வாக்கு வங்கி பாதியாக சரிகிறது.!
உதய மாறன் : ஏன்?
Sri Nivas : ஏன்?
Meena Palaniappan : Why?
Rajendra Selvaraj : நீங்களே இப்படி சொல்லும்போது அதிர்ச்சியாகத்தானிருக்கிறது...
Kumarchandran Sundararajan : How sir
ராஜூ. செல்வமணி : கடுமையான கோஷ்டி பூசல்..
மேல்மட்டத்திலிருந்த பூசல்கள் கிளை கழகம் வரை கோஷ்டி பூசல்.
Sridharan Chakrapani : எப்படி சொல்கிறீர்கள்! இப்போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வேறு கிடைக்கிறது
Mohandas Marudhamuthu : இதை எழுதினால் எழுதுபவர்களை திட்டுவாங்க..
வேண்டாம் விடுங்க..
Devakar Kaliyaperumal : ஆமாவா
Duraiswami Sundaravadivelu : சார் இந்த கருத்து எந்த அடிப்படையில். யாருக்கு இது பலன் அளிக்கிறது


Rathinam Perumal : சாதிய தூண்டுதல் தான் காரணம்
Palmyrah Palm : Social media is creating a wave against the ruling party

Marutha Mani : சொன்னா கடிக்க வருவாங்க
எடப்பாடி பரவாயில்ல என்பதே
மக்களின் கருத்து

பொறியாளர் வரதராஜன் : உண்மை!ஆனால் பாதியாக இல்லை கால்வாசி குறையலாம்...காரணம் எடப்பாடி அதிமுகவும்,அண்ணாமலை பாஜகவும் உற்சாகமாக இருக்கிறார்கள்...காரணம் தொண்டர்களுக்கு செம கவனிப்பு!திமுக தலைகள் கண்டுகொள்வதில்லை என புலம்பல்!திமுகவின் மகளிர் மேம்பாட்டு திட்டங்களெல்லாம் ஓட்டாக மாறாமல் விழலுக்கு இறைத்த நீராக போகும்போல
...தலைமை உடனே கவனிக்கனும்!

Kandasamy Kandasamy  : பொறியாளர் வரதராஜன்
மக்கள் நலத் திட்டம் கொண்டு வருவது மட்டும் முக்கியமல்ல அதை மீண்டும் மீண்டும் மக்களிடம் நாங்கள் தான் கொண்டு வந்து சேர்த்தோம் என்று திமுக பொறுப்பாளர்கள் செய்ய வேண்டி இருக்கிறது...
அதுவும் எப்படி என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்...
ஆனால் ஒரு கதை முடிந்ததும் அடுத்த வேலைக்கு சென்று விடுகிறார்கள்...
நான் இருக்கும் ரேஷன் கடையிலேயே வாசலில் நின்று கொண்டு இந்த 6 ஆயிரம் ரூபாய் மோடி கொடுத்தது என்று பிஜேபி பரப்பிக் கொண்டிருந்தது..
திமுகவினர் ஒருவரும் இல்லை அவர்களுக்கு கவுண்டர் கொடுக்க

பொறியாளர் வரதராஜன் : Kandasamy Kandasamy தங்கள் கூற்று சரிதான்...
Rajagurupeter Thavamani : பொறியாளர் வரதராஜன் agree

V Venkatesh :எல்லாம் வெளி தோற்றமே
இருந்தாலும் இத்தருணத்தில் கூட்டணியை பலவீனபடுத்தினால்

Ranjith Guna : போக போக பாருங்க dmk னு கட்சியே இருக்காது......

R Balou : எதனால் சார் தலைமைக்கு தெரியுமா தெரியாதா
இப்போது கூட கேபிள் நலவாரிய தலைவராக அதிமுக ஆதரவாளருக்கு பதவி அளித்துள்ளார்களாம்

Sembakkam Jaikumar :R Balou திமுக காரனுக்கு கொடுத்த மட்டும்...
தொண்டர்கள் வாழ்வு விடிந்து விடுமா... என்ன...
மந்திரிகள் MLA எல்லாம் திமுக தானே...

Sudha Duraisamy : திமுகவினரின் ஓட்டு

Ajithsivaraja Muthappa :  Sudha Duraisamy விழாது

Sudha Duraisamy  :  Ajithsivaraja Muthappa நானும் அதான் சொல்றேன்..அதிமுக ஓட்டு விழ வாய்ப்பு இருக்கு...

Ajithsivaraja Muthappa : Sudha Duraisamy அதுவும் விழாது. அதற்காக திமுக தோற்கும் என்பது அர்த்தம் இல்லை.குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரும். IT wing கூட பிரசாந்த் கிஷோர் போன்ற தனியார் நிறுவனங்கள் உடனடியாக தேவை.

Sheik Abdullah  :  உங்களை போன்றவர்கள் பதிவிடுவது தான் வருத்தமளிக்கிறது.விளக்கமாக எழுதலமே

Vimalaadhithan Mani :  Its True. Due to Caste, community equation targeted by ADMK & BJP and lack of awareness of good schemes of DMK at rural areas

Radha Manohar : its very shocking ..

Muthu Kumar : கட்சியின் கீழ்மட்ட தொண்டர்கள் கண்டு கொள்ளப்படவே இல்லை. மேல்மட்ட கட்சிப்பதவி, ஆட்சிப்பதவியில் இருப்பவர்கள் மட்டுமே வளமாக உள்ளனர்.

Thiruma Valavan : உண்மை 100%

Balakrishnan KR : உண்மை.....

Ravilla Seetharam : இந்து ஓட்டு வங்கி உருவாகிவிட்டது தான் உண்மையான காரணம்...கிராம பகுதிகளில் பாஜக தீவிர வளர்ச்சி.

Vimalaadhithan Mani : சித்தாந்தத்திலும் உறுதி இல்லை, பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்ப்பதிலும் மம்தா பேனர்ஜீ போல உறுதி இல்லை. காவிகளின் அழுத்தத்துக்கு அடங்கி தன்னுடைய அரசியல் தோல்வியை ஆரம்பித்து இருக்கிறது திமுக என்றுதான் சொல்லவேண்டும். ஜென்டில்மேன் பாலிடிக்ஸ்தான் பண்ணுவேன் என்று திமுக தலைமை இனியும் காவிகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்தால் அது மக்கள் திமுகவின் வைத்து இருக்கும் நம்பிக்கையை சவக்குழியில் தள்ளுவதற்கு சமம். இதை புரிந்து கொண்டு தடாலடியாக கலைஞர், ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடி அடாவடி அரசியலை ஆரம்பித்து பாஜகவை கதறவிடவில்லை என்றால் திமுவின் 5 வருட ஆட்சி முடியும்போது அடுத்து தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் பாஜக அமருவதை யாராலும் தடுக்க முடியாது. பாஜகவை போல தீவிர அரசியலில் கழக உடன்பிறப்புக்கள் முழு வீச்சில் இறங்க வேண்டிய நேரமிது குறிப்பாக திமுகவின் ஐடி பிரிவு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து உடனடியாக விழித்தெழ வேண்டும். பாஜகவின் ஐடி விங்கை பார்த்து ஐடி விங் தீவிரமாக எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை திமுகவின் ஐடி விங் தோழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

Selvam Ramesh :  Vimalaadhithan Mani கிராமத்தில் கொள்கை எல்லாம் பார்பதில்லை

நிலவினியன் மாணிக்கம் : Vimalaadhithan Mani சித்தாந்தத்தில் உறுதி என்றால் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
அத

Vimalaadhithan Mani : நிலவினியன் மாணிக்கம் சனாதன எதிர்ப்பு, இறை மறுப்பு போன்ற கழகத்தின் அடிப்படையான பெரியாரிய ஸித்தாந்தங்கள்.

நிலவினியன் மாணிக்கம் : Vimalaadhithan Man
திமுகவிலிருப்நமலர்களில் 2% தான் இள
றை மறுப்பொோர்...98% கடவுள் மற்றும் மதத்தை ஏற்றோர்.கடவுள் மறுப்பு கடவுளை ஏற்ற மக்களுக்கு எதிரான எண்ணத்தையே ஊக்குவிக்கிறது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அதீத பணிகள் காரணம்..
மாற்றுக்கட்சியினருக்கு முக்கியத்துவம்போன்றவையேய

Selvam Ramesh : Vimalaadhithan Mani இறை மறுப்பா மொத்த ஓட்டும் காலி செய்யவா

K Periyasamy : Vimalaadhithan Mani சூப்பர். ஸ்டாலின் அரசியல் பேசுவதே இல்லை. பிஜேபி எதிர்ப்பே இல்லை. தொடை நடுங்கியக உள்ளார். திமுக மீது கடுமையாக விமர்சனம் செய்யபடுகிறது. கண்டிக்காமல் இருக்கின்றனர். யாருக்கும் பயமே இல்லை திமுக மீது. இளைஞர் அணி மாநாடு நடத்துவதால் ஒரு பயனும் இல்லை. ஆட்சி பிஜேபி அதிமுக நடப்பது போலதான் இருக்கிறது. திமுக கொடி, விளம்பரம், ஸ்டாலின் பேனர் விளம்பரங்கள் எங்கேயும் இல்லை. தொண்டர்கள் எல்லோரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

Mohan Panneer Selvam : Vimalaadhithan Mani மம்தா பானர்ஜி உறுதியாக எதிர்த்தாரா? ஒரு அமைச்சரை தூக்கி உள்ளே வைத்ததும் அவரும் அடக்கி வாசித்தார்! வெளியே இருந்து என்ன வேண்டுமானாலும் விமர்சனம் பண்ணலாம்! திமுகவின் 2 முக்கிய அமைச்சர்களை தூக்கி உள்ளே வைத்திருக்கும்போது இப்படிதான் செயல்பட முடியும்!

Pon Selvaraj : அரசு ஊழியர்களே தூக்கி தூரப் போட்டுட்டாங்க சார்

Karunanithi : திமுக சார்பில் எந்த ஊராட்சியிலும் ஒருங்கிணைப்பு செய்து ஒரு தெருமுனை பிரச்சாரம் கூட நடந்ததாக தெரிய வில்லை சாலை பணிகள் மற்றும் மக்கள் பணிகள் நடைபெறுகிறது வேலைகள் நடக்கிறது ஆனால் விளம்பரம் இல்லை நன்றி தெரிவிக்கும் கூட்டம் சாதனை விளக்க கூட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Dev JB : இதுதான் பதில்.. அதென்ன பாதி.‌ எப்டி சொல்றீங்கனு யாரும் கேக்காம ஒத்தூதினா சந்தோஷமா இருப்பீங்க போல..
அதெல்லாம் அப்பப்ப‌ திமுக ஒரு சர்வே எடுத்துட்டு தான் இருக்கு. அவங்களுக்கு தெளிவா தெரியும்
நீங்க சொல்றது‌ உங்க அறியாமை... பாவம்‌ கந்தசாமினு விடறேன்

Selvam Ramesh
Dev JB என்னை பொறுத்த வரை ஓட்டு எல்லாம் குறையல ஆனால் கட்சி பிரச்சினை யில் தலைமை தவறு செய்கிறது அது தான் என் வருத்தம்

Dev JB
Selvam Ramesh பதிவு போட‌ தெரிந்த Kandasamy Mariyappan க்கு பதில் சொல்ல‌ மட்டும் து‌ணிச்சல்‌ இல்லயா.. சொல்வார். வெயிட் பண்‌ணுவோம்


Sivakkolunthu Karur
📸 Look at this post on Facebook https://www.facebook.com/share/p/CswLjGNWTJsh7bKA/?mibextid=WC7FNe

Kandasamy Kandasamy
நான் சொன்ன ஒத்துக்க மாட்டீங்க
சென்னையிலும் கூட தான் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது

Chendur Vel
ஆராமிச்சிட்டீங்களா? 😀😀😀

Joe Milton
தெரிஞ்சுக்க கேக்குறேன் . அவங்கள்லாம் யாருக்கு ஓட்டு போடலாம்ண்ணு இருக்காங்களாம் ?

Ajithsivaraja Muthappa
  ·
Joe Milton மக்கள் நல கூட்டணி
5h
ரகுமான் கான்
தி மு க நிர்வாகிகள் தங்களை அந்த கிராமத்தில் மைனார்கள் என்ற நினைப்பில் வாழ்வதே இதற்கு காரணம்

Vm Hanifa
உண்மை...மேலே உள்ள ஒற்றிய செயலாளர்
மாவட்ட செயலாளர்
அவர்கள் அனைவரும் ஒரு கோஷ்டியை ஏற்படுத்தி வைத்து உள்ளனர்.
இது மிகவும் ஆபத்தானது...

Sudarsan PK
DMK will win

Sehana Kss
உண்மைதான்.
இதற்கு பல காரணங்களை சொல்ல முடியும்.

Rajasimmon AB Positive
காரணத்தையும் பதிவிடுங்கள்

தனி ஒருவன்
அப்ப..நாடு நாசமாவது உறுதி..

Ganeshwaran Velayutham
கிராமங்களில் மட்டும் இல்லை அரசு ஊழியர்கள், போக்குவரத்து தோழிலாளர்கள் மத்தியிலும் இதே நிலைதான்

Babu Shanthi
  · அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க... திமுக வாக்காளர்கள் அதிகமாக கிராமத்தில் அலப்பறை செய்வதில்லை அவ்வளவுதான்...

Gnanaprakash Keerthi
தேவையின்றி அதிருப்தியை வளர்த்துக்கொள்கிறோம்.
தேர்தல் வாக்குறுதி என்பது ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவது.
கடுமையான நிதிநெருக்கடியில் உரிமைத்தொகை தற்போது அமல் படுத்தி இருக்க வேண்டியதில்லை.
குறைந்தளவு அளவு கூட நிதி ஒதுக்காமல் போக்குவரத்து தொழிலாளிகளின் போரட்டம்,
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,மருத்துவர்கள் இப்படி பலரிடம் அதிருப்தியை நிலவுகிறது.கடந்த ஆட்சி ஊழல்களை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று வேலுமணி எடப்பாடி போன்றவர்களை வலுவாக்கி உள்ளது.பத்தாண்டு எதிர்கட்சியாக இருந்து ஆளும் கட்சியாக மாறியும் இன்று பல பொறுப்புகளில் இருப்பவர்கள் ,பலனடைபவர்கள் வேறு கட்சியிலிருந்து வந்தவர்கள்.
அண்ணாமலை அவிழ்த்து விடும் பொய்களை சமாளிக்க கூட கட்சி தயாரில்லாததால் பொய் ஊர்வலம் போகிறது.ஆளே இல்லாத கிரௌண்டில் சிக்ஸர் அடிக்கவேண்டிய நாமோ தேவையின்றி கட்டை போடும் கவாஸ்கராக மாறிவிட்டோம் என்பதே
கசப்பான உண்மை.

Elango Ramachandran
  · நிர்வாக சீர்கேடாக இருக்கலாமா அண்ணே... அதிகாரிகள் ஆட்சியாக அவர்கள் சொல்லும் தரமற்ற ஆலோசனைகளாக இருக்குமா அண்ணே... கொஞ்சம் விளக்கமா தான் சொல்லுங்களே அண்ணே...

A. Vergin Kumar
Katchi kaarana mathikanum kodi pudika mattum use pana ipadi than

Selvaraj Pichaipillai
தேவையற்ற பதிவு..உபகாரம் செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நலம்
.

Jayarani
சாதி வெறி அதிகரித்து விட்டது

A. Vergin Kumar
S true

சுப்பிரமணி குமார் இராமசாமி
உங்களின் மதிப்பீட்டை நான் ஏற்கவில்லை ஆனாலும் எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை குறைத்து மதிப்பிட வில்லை பிரச்சார உத்திகளை மாற்றி மாநில அரசின் சாதனைகளையும் ஒன்றிய அரசின் ஊழல்களையும் தோல்விகளையும் கீழ் மட்டம் வரை கொண்டு செல்ல பலமடங்கு தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும்
d
Kunnur Radha
எப்படி சார் கணிக்க முடிகிறது. பாதியாக குறைகிறது என்பது மிகைப்படுத்தல் என்பது எனது தோழமையான கருத்து. சற்று அரசுக்கு எதிர்ப்பான மனநிலை இருப்பது உண்மை.

கணபதி பி.
எதிரிகளை எதிர்ப்பதற்குப் பதில் வளர்க்கிறது திமுக. அதற்குக் காரணம் ‘அளவுக்கு மீறிய நாகரிகம்; பணிவு.’
கழக முன்னோடிகள் எதிரிகளிடம் ‘நல்ல பெயர்’ எடுப்பதையே கொள்கையாக க் கொண்டுள்ளனர்.
கூட்டணி பலம் என்று கருதி
too much complacency யோடு உள்ளனர்.

Swaminathan Sivalingam
பெண்களுக்கு மட்டும் பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைப்பது முதல் தவறு. தி.மு.க அமைச்சர்கள் தான் சிறைக்குச் செல்கிறார்கள், அ.தி.மு.க அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. ஆளுநர் மற்றும் அண்ணாமலை விஷயத்தில் அடக்கி வசிக்கிறார்கள். ஆர்.கே.சுரேஷ் துபாயிலிருந்து வந்து ஒரு மாதமாகிறது. என்ன செய்ய முடிந்தது? மோடியையும், அ.தி.மு.க வையும்,MGR யையும் நக்கல் செய்வதைத் தவிர கட்சிக்காரர்கள் வேறு எதையும் செய்யவில்லை. இதில் ஊர் ஊருக்கு கோஷ்டிப் பூசல் வேறு!

Rajendra Selvaraj
கட்சிக்காரங்க சந்தோஷமாயில்லை....அதற்கு மேல் விளக்க விரும்ப வில்லை...

C. J. Balachandran
தேர்தல் முன்னால் புரளி.

Nakkeeran T
ஏன்

Rasishaik Abdulcader
உங்களுக்கும் வருத்தம் வந்துடுச்சா சார்..?
எங்களுக்கு மட்டுந்தான்னு நெனைச்சேன்.
இது முந்தாநாள்போட்ட போஸ்ட்👇
ஆடும்,ஆட்டுத்தாடியும் இந்த ஆட்டம் ஆடுவதன் முதல் காரணம்?
நிதி,மகேஷ், மற்றும் அவர்களின் நண்பர்களும் முக்கால் சங்கியாக இருப்பதே என மக்கள் கருதுகிறார்கள்.
~ஒன்று முழுதாக மாறி அவர்களோடு ஒன்றுபட்டு போய்விடுங்கள்..இல்லையா.. முழுமனதாக திராவிடத்தை அறிந்து இளைய தலைமுறையிடம் எடுத்துரைத்து கடுமையாக சங்கிகளை அடக்கிவையுங்கள்.அடக்கவும் முடியாமல்,அவர்களை முடக்கவும் முடியாமல் வெறும் வாய்ப்பந்தல் நேற்றுவந்த காலி ஆட்டையும்,கிரிமினல் ஆட்டுத்தாடியையும் விட்டுக் கொண்டிருக்கிறீர்களே..😇
#அங்கேதான்இடிக்கிறதுஇளையதளபதிகளே...

குமரன் குருசாமி
இது மொட்டை கடுதாசி மாதிரியான பதிவு.
இதுவரை எந்த செய்தி நிறுவனமும் வெளியிடாத அடிப்படை ஆதாரமற்ற பதிவு.
1% வேண்டுமானல் ஆன்மீக அரசியல் காரணமாக வாக்கு குறையலாமே தவிர
பாதிக்கு மேல் அதுவும் கிராம புறத்தில் என்பது செம காமெடி.
நாளை காலை 9 மணிக்கு news18 Tamil
பாருங்க.
உண்மை நிலவரம் தெரியும்.
ரொம்ப அவசரம் னா எனது சுவற்றை பாருங்க.
எதிர்கட்சி காரங்களை விட
முந்திகிட்டு சொந்த கட்சியை பொதுவில் விமர்சிப்பதில் ஆர்கசம் அடையும் பலரில்
நீங்களும் ஒருவர்.
எதிர்கட்சயில கட்டம் கட்டி பார்த்து சொன்னாங்க.
நீங்க பதிவு போட்டு சொல்றீங்க
ஆனாலும் உங்களை போன்றவர்களின் முகத்தில் கரியை பூச போவது மட்டும் உறுதி.

Santhanakrishnan Sskrishnan
மாசம் 1000 வாங்கிட்டு நமக்கு போடுவாங்க னு மேலிடம் நினைக்கிது ஆனா அதை விட ஒரு பெரிய முட்டாள் தனம் வேற ஏதும் இல்லை

மனோ மோகன்
உண்மை ....

Nakkeeran T
அந்த மானங்கெட்ட நாகரீக அரசியல் தான் இதற்கு காரணம்..
கொடநாடு வழக்கு
ஆருத்ரா வழக்கு
என கையில் எடுக்கும் நேரம் இது...
காளையை அடக்குவனுக்கு கார் தந்து விளம்பரம் தேடுவது சரியில்லை..
நிறைய இருக்கு..
கட்சி அடிமட்ட தொண்டர்கள் கண்டுக்கப்படவில்லை
.
கட்சியின் பலமே இவர்கள் தான்..
வயதான ஆட்களுக்கு சீட் தரக்கூடாது..கட்சி பணியை மட்டும் ஆற்ற படனும்.
இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கனும்...

Alagu Tamil
  · உண்மை தான்..

மனோ மோகன்
ஆட்சி சிறப்பு  கட்சி   நிர்வாகிகள் சரியில்லை

Kothai Dhanabalan
திமுக பிரச்சாரம் போதாது. எல்லாவற்றையும் மோடி திட்டம் என்றே அலுவலகத்திலும் சொல்லி கொடுக்கின்றனர். திமுக இளைஞர் கட்சி ககொள்கை பரப்பு காணாது...

முத்துக்கிருஷ்ணன்
உண்மை நிலவரம். பிஜேபி கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கிவிட்டது. சாதிதான் முக்கிய காரணம்.

Balu D M K
இது உங்களின் யூகம்.ஆனால் கள நிலவரம் பெண்கள் வாக்கு திமுகவை நோக்கியே.காரணம்
விடியல் பயணம்
உரிமை தொகை
கல்லூரி மாணவிகளுக்கான தொகை

Bala Athi
எதை அடிப்படையாகக் கொண்டு சொல்கிறீர்கள்? இது உங்கள் யூகமாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைப் பதிவாக போடுவது சரியல்ல.

சுந்தர் சுந்தர்
அது ஒரு தோற்றம் மட்டுமே. கிராமங்களில் முன்பைவிட திமுக தற்போது வலிமையாக மாறியிருக்கிறது. கிராமங்களில் 90% சதவிகித வீடுகளில் உரிமைத் தொகை கிடைக்கிறது. நான் தினமும் மக்களை சந்திக்கும் பணியில்தான் இருக்கிறேன். ஆதரவு கூடி இருக்கிறதே தவிர குறையவில்லை. ஒரு சில கிராமங்களில் கோஷ்டிகானம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாக்குகளை கவரும் அளவிற்கு யாரும் இல்லை. ஆறாயிரம் யார் கொடுக்கிறார்கள் என மக்களுக்கு தெரியும். அவர்களை குறைத்து எடை போடக்கூடாது.

Raaja Dmk
சரி என்ன பண்ணலாம் கட்சியை கலைத்து விடலாமா .... பத்தாண்டு உழைப்புக்கு பின் கிடைத்த ஆட்சி வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் தேவையற்ற பதிவு வேண்டாம்

Muthu Maruthanayagam
தவறான தகவல்

இரா பாபு
எங்கிருந்து தரவுகள் பெற்றீர்.

கா வே கருணாகரன்
நம்ம சொன்னா யார் கேட்கிறாங்க

Sivaperumal A
உண்மை

ஹரிபிரகாஷ் அருண்
லோக்கல் அரசியல்வாதிகள் எதோ குறுநில மன்னர்கள் மாதிரி செயல்படுறாங்க. பெண்களுக்கு மட்டும் முன்னுரிமை ஊக்கத்தொகை கொடுக்குறாங்கனு எங்க பாத்தாலும் இதே பேச்சு தான்.
பெண்களுக்கு வாரி இறைச்சா ஓட்டு வாங்கிடலாம்னு நினைக்கிறது ரொம்ப தப்பு. இதுவே நாளைக்கு எமனா வந்து நிக்க போகுது பாருங்க

Dhaya Nithi
இது நூறு சதவீதம் உண்மையான பதிவு

Ulaganathan Kumaraswamy
இந்தக் காலச் சூழலில் இது தேவையற்ற பதிவு.

Alagu Tamil
சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சர் உதவியாளர்கள் அதிமுக பாஜக காரர்களுக்கு மட்டும் தான் உதவி செய்வார்கிறாள்... அதிமுக ஆட்சியில் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி செய்தார்கள் தவிர... திமுக கட்சி காரர்களின் தொழிலை அழிக்கவில்லை... ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக காரர்களை பணத்திற்காக அழித்து வருகின்றனர்...

Ps Abdul Kareem
உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை கண்டு கொள்வது இல்லை ஒவ்வொரு தொண்டனும் முதல்வர் ஆகப்போவது இல்லை முதல்வராய் இருப்பவருக்கு முக்கியத்துவம் புரியவில்லை என்றால் உணர்த்தும் காலம் வரும் உணர்வார்கள் தலைமை

செந்தில்
திமுக அடிமைமற்று தொண்டனுக்கு எந்தப் பயனும் இந்த மூன்று ஆண்டுகள் இல்லை எதிர்க்கட்சித் தொண்டனுக்கு கிடைக்கும் அரசாங்க உதவி கூட திமுக தொண்டனுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் கிராமப்புறங்களில் மேலோங்கி இருக்கிறது சொல்லப்போனால் பிஜேபி கிராமங்களில் நல்ல வேலை செய்து வருகிறார் வருகிறது திமுக நிர்வாகிகள் பணம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டுள்ளார்கள் திமுக தொண்டனுக்கு அரசாங்கத்தில் உதவி என்று நிறுவகையிடும் சென்று கேட்டால் முகத்தில் அடிப்பது போல் பதில் சொல்லி அனுப்புகிறார்

Manoharan Sundharam
இல்லை அய்யா. பாதிக்கு மேல் குறைந்து விட்டது என்பதெல்லாம் இப்போது மதிப்பீடு செய்வது சரியல்ல. மக்களின் வாக்கு அளிக்கும் மனப்பான்மை என்பது தேர்தலின் கடைசி நேர பிரச்சாரங்களுக்கு பின்னால் தான் முடிவு செய்யப்படும். இதைவிட மோசமான நிலையில் இருந்த 2006 தேர்தலில் எல்லாம் வெற்றி பெற்று வந்துள்ளோம். கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடுகள், வேட்பாளர் தேர்வுக்கு பின்னர் தான் மக்கள் ஓட்டளிப்பதை பற்றி முடிவு செய்வார்கள். ஒரு சரியான பிரச்சாரம் எல்லா வற்றையும் மாற்றும். இப்படி பதிவிடுவது நம் தோழர்களுக்கு ஒரு சுணக்த்தை ஏற்படுத்தி விடும். நீங்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் இப்போது பொது வெளியில் பதிவிட வேண்டாம். மும்முனை போட்டி என்றால் நிச்சயம் நம்மை அவர்களால் வெல்ல முடியாது. ஓட்டுக்கள் சிதறும். 40 விழுக்காடு பெற்றால் போதும். நிச்சயம் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.

Arunachalam Gopalakrishnan
. தோ்தல் கருத்துக் கனிப்பு போல் தொிகிறது|

பார்த்திபன் வைதேகி
வருத்தமாக உள்ளது
தற்போதைய நிலவரம் இப்படித்தான்

Zakir Hussain Amir
உண்மை தான் திமுகவை பற்றிய வதந்திகள் வீணாய் போன பாஜகாவின் ஊடக பரப்புரை... ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு இனி போர்கால நடவடிக்கைகள் எடுத்து இவற்றை ஒடுக்க வேண்டும்..நியாயமான மக்கள் அரசு திமுக இதை பற்றி குறை சொல்வது காவி கும்பல்

Nedunchezhian Narasingaperumal
கொளத்தூர் மற்றும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதிகளைக் தவிர மற்ற இடங்களில் கட்சி காரர்களை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைச்சர்கள் கவனிப்பது இல்லை என்ற குறை உள்ளது. பணம் சம்பாதிக்கும் குறிக்கோள் கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகளால் பொது மக்களுக்கு சொல்லொணாத் துயரங்கள்.

Srigokul Nath
உண்மை

ராஜன் சிவ குமார்
அப்படியே அரசு ஊழியர்கள் வாக்கும் இந்தமுறை நமக்கில்லை!!

K Periyasamy
உண்மைதான். எவனும் வேலை செய்வதில்லை. திமுக மீது பரப்பப்படும் அவதூறுகள் மக்களிடையே நல்ல ரீச் ஆகிவிட்டது. மகளிர் தொகை 1000 பணம் வீண் என்று பேசி கொள்கிறார்கள் .

K Periyasamy
ஸ்டாலினுக்கு ஒண்ணும் தெரியவில்லை. கட்சி எப்படி நடத்த வேண்டும் என்று. யாரையும் சந்திக்கவே மாடங்கிரர். கட்சியில் யாரையும் புதிதாக சேர்ப்பதே இல்லை. திமுக வினரையே பாதுகாக்க துப்பு இல்லை.

Shankar Mayilsamy
எடப்பாடியார் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கிய போது அனைத்து விவசாயிகளுக்கும் பூச்சிமருந்து கொடுத்தார் விவசாய துறை மூலமாக இலவசமாக...இந்த முறை மக்காச்சோளத்தில் இந்த முறை படைப்புழு தாக்குதல் அபரிமிதமாக இருந்தது... ஆனால் அரசு எந்த உதவியும் செய்யவில்லை...இதனால் திமுகவுக்கு வாக்களித்த விவசாயிகள் கூட என்ன ***க்கு ஸ்டாலினுக்கு நான் ஓட்டுப்போடணும் என்று வெளிப்படையாக பேசுகின்றனர்... எடப்பாடியார் விவசாயின்னு சொன்னா கைகொட்டி சிரிக்கின்ற இணைய உ.பி.களுக்கு நன்றி... நீங்கள் அப்படியே கைகொட்டி சிரியுங்கள்... அதுதான் விவசாயிகளுக்கு தமிழ்நாட்டுக்கு எடப்பாடியாருக்கு நல்லது...

Veerapandiyan Kaliappan
எங்கள் ஊரில் முக்கால்வாசி மாறிவிட்டார்கள்....

Shakthi Manickam
6 மாதத்திற்கு.முன்பே இதை நான் உங்க போஸ்ட்ல குறிப்பிட்டேன்.

Diwa
கசப்பான உண்மை.... 😢
மேலிடத்திற்கு இதெல்லாம் தெரிகிறதா என்பதே கேள்விக்குறிதான்.. .. இது இன்னொரு கசப்பான உண்மை

Rajagurupeter Thavamani
S சங்கிகளாகிவிட்டனர்

Parthiban
.இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது நீங்க தனிப்பட்ட முறையில் உங்க கை காசை போட்டு செலவு பண்ணி இதெல்லாம் நீங்க கண்டுபிடிக்கிறீர்களா இல்ல வேற எப்படி தெரிஞ்சது உங்களுக்கு? இல்லை லைக் கமெண்ட் வேண்டும் அதனால் இது மாதிரி பதிவு போடுறீங்களா

தமிழ்தாசன் மதுரை
Devakar Kaliyaperumal அரசு ஊழியர்கள் காரித் துப்புறாங்க😌

Thyagarajan Rajendran
என் கணிப்பும் அது போல் தான் உள்ளது.

Pazhanivel Rajan
கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு மகிழ்ச்சி அண்ணா.

Sri Iyer
Arrivalaya Koothadimai sad that Chinna Swamiji Kesave Prasanna Arun V Mathew Nandakumar Venkatraman Rajagopalan Ramachandran Jaykumar Viswanathan Srinivasa Rangan

Mohamed Rafi Rafi
  ·
அபத்தகச்சேரி வாசிப்பதை தவிர்ப்பது நலம்

Dakshinamurthy Kamatchisundaram
கவலை தரும் செய்தி

Mohammed Saleem
அப்படி சொல்ல முடியாதுஎன் வயலுக்கு வேலைக்கு வரும் பெண்கள் தளபதியை புகழ்ந்து பேசுகின்றார்கள்.

ரவி பாடகலிங்கம்
பேஸ் புக் PK வோட சர்வேவா?

Senthamarai Kannan
Unmai

Mohammed Saleem
திமுகவுக்கு எப்போதும் கிராமத்தில் வாக்குகள் குறைவுதான்.

Ravi Narayanan N
இந்த தடவை சென்னை கண்டிப்பா டவுன் தான்

Senthil Murugan
விளக்கப்படுத்துங்கள் ணா..

Vijay Jintha
எங்க ஊரு ஒன்றிய கவுன்சிலர்க்கு எங்கள் தெருவில் கட்சி பாராமல் அனைவரும் திமுகவுக்கு வாக்களித்தனர்.... மொத்தமாக 245 வாக்குகள், அவர் வெற்றி பெற்றது 35 வாக்குகளில்.... இன்று வெற்றி பெற்றபின் பதவி மமதையில் யாரையும் மதிப்பது இல்லை யாரிடமும் பேசுவது இல்லை... மீண்டும் அவர் நின்றாள் என்னை போன்ற திமுகவினர் கூட வாக்களிக்க மாட்டார்கள்..... இத்தனைக்கும் தெருவில் அனைவருமே அவருக்கு உறவினர்கள் தான்.....

Kannan : k  வரும் எம்பி தேர்தலில் 40/40 வெற்றி உறுதி...‌‌
அதற்கடுத்த தேர்தல்களில் சிங்கி தான்.‌.
10% ஓட்டு வாங்கி பாஜக சல்லிக்கட்டு காளை போல் சீன் காட்டும்.....இனி அதிமுக இல்லை...‌‌
அதன் நேரடி பெயர் பாஜக....!!!
!!!
ஸோ வரட்டும் சந்திப்போம்...‌‌!!!😆😆😆😆

Bharathan Kumudhan
மிக சரியான உண்மை சகோ 😥

Bharathan Kumudhan
மிக சரியான உண்மை சகோ 😥

Ponmariappan
உண்மை சார்

Jayachandran
கிராமங்களில் இலவச போக்குவரத்து, மகளீர் உரிமை தொகை மிக சிறப்பாக பேசப்படுகிறது.
திமுகவிற்கு பெண்கள் ஓட்டு கிராமங்களில் கணிசமாக கூடி இருக்கிறது இந்த இரண்டு திட்டங்களால்

Jayachandran
முத்துக்கிருஷ்ணன் அதிமுக ஓட்டு தான் பாஜகவிற்கு போகிறது.
திமுக ஓட்டு அப்படியோ தான் இருக்கிறது

Thangavel Thangavel
எம்ஜியார் கட்சியை பிளந்து தனிக்கட்சி கண்ட போதும் நாவலர் பஉச மாதவன் இராசாராம் பண்ருட்டி உள்ளிட்ட தலைவர்கள் துரோகம் செய்து வெளியேறிய போதும் அவசரநிலை காலத்து கொடுமைகளை அனுபவித்தபோதும் ராஜிவ் மரணத்திற்கு பிறகான தடா பொடா கருப்பு சட்டங்கள் பாய்ந்த போதும் வைகோ கட்சியை செங்குத்தாக பிளந்த போதும் கோவை குண்டு வெடிப்பினையொட்டி கழகத்தவர் மீது வன்முறை நிகழ்த்தபட்ட போதும் பொய்யாக புனையபட்ட 2G வழக்கால் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தபோதும் நாங்கள் நம்பிக்கையை இழந்ததில்லை,நம்பிக்கையை தகர்க்கும் வகையில் பேசியதுமில்லை பேசப் போவதுமில்லை.
வருங்காலத்தில் தோல்வியடைய நேரிட்டாலும் சளைக்காமல் நாங்கள் களமாடுவோம்.
ஆட்சியை பற்றிய கவலையோ பதவியோ என் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டில்லை.
தற்போது வயது அறுபத்தி நாலாகிவிட்டது.
நினைவு தெரிந்த காலத்திலிருந்து பார்த்தது பிடித்தது அனைத்தும் உதயசூரியனும் கருப்பு சிவப்பு கொடியுந்தான்.
மீதமுள்ள நாளிலும் தோற்றாலும் ஜெயித்தாலும் தொடர்ந்து கழகத்தில் பயணிப்போம்,தளர்வடைய மாட்டோம்,
எனவே அன்பான வேண்டுகோள்.
எதிர்மறையான பதிவுகளோ பேச்சுக்களோ தற்போது தேவையில்லை.நம்பிக்கையோடு செயல்படுவோம்.

Nazim Nidur
ச்சீமான் கொஞ்சம் தலித் அண்ட் முஸ்லீம் ஓட்டுக்களை பிரித்திருக்கிறான் என்பது உண்மையே ஆனால் அது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதென்பதே என் கருத்து ஐயா

Selvakumar Ramasamy
தமிழ்நாடு வாக்காளர்கள் எப்பொழுதும் anti incumbency மனநிலை உள்ளவர்கள். பெண்கள் வாக்கு வங்கி திமுகவிற்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களிடம் ஒரு சந்தேகத்தை எதிர்கட்சியினர் இதை தேர்தலுக்கு பிறகு நிறுத்திவிடுவார்கள் என்ற விஷவிதை தூவ படுகிறது. வாட்ஸ் அப் குரூப் அதிக அளவில் துவக்க வேண்டும். அதுதான் கீழ் மட்ட பெண்களிடம் reach ஆகிறது. ட்விட்டர் பேஸ் புக் எடுபடாது. You tube எடுபடுகிறது. You tube க்கு செலவு செய்து அதை vigours propagate செய்ய வேண்டும். அதுதான் mobile reach ஆகிறது. அதை மட்டும் தலைமை முழுவதுமாக நம்பி இருக்காமல் தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் தேர்தல் சமயத்தில் உபயோக படுவார்கள். கூட்டணி பலம் நன்றாக உள்ளது. மக்களவை தேர்தலில் 40 ம் வெல்லலாம். ஆனால் complacency கூடாது. You tube ல் attractive சிறு சிறு படங்களுடன் செய்தியும் பயனடைந்தவர்கள் செய்திகளை வெளியிட வேண்டும். ஒன்றிய பாஜக நிதி ஒதுக்காத்தை high light செய்ய வேண்டும். நாம்தான் வெல்ல போகிறோம் என்ற positive approach டன் களப்பணியாற்ற வேண்டும். நிச்சயம் வெற்றி நமதே. ஒரு MP தொகுதியில் வேறு யாரும் வெற்றி பெற விடாமல் செய்தால் 2026 வெற்றியும் நமதே.you tube watts app ல் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். அதில் IT wing அதிக கவணம் செலுத்த வேண்டும். வார்டு லெவல் watts app group ஏற்படுத்தி அதை மிக active ஆகவைத்து அதற்கு செலவு செயதால் மிகப்பெரிய அளவில் reach ஆகலாம். கீழ்மட்ட பெண்களிடமும் இளைஞர்களிடமும் பேசியதில் எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை எழுதி இருக்கிறேன்.
y
Daniel Francis
முதல்வரின் கட்டுப்பாட்டில் ஆட்சியும் இல்லை கட்சியும் இல்லை
சங்கி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ஆட்சியும் ஜால்ரா அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் கட்சியும் இருக்கிறது

Vallarasu Arasu
உண்மை நிலவரம் கணிப்பதில் சிக்கல் இருக்கிறது
1.பொதுமக்களுக்கு மகிழ்ச்சி(அரசு திட்டங்களை அனுபவிக்கிறார்கள் - லோக்கல் திமுக காரனோட உறுதணையே இல்லாமல்)
2.நிறைய நல்ல திட்டங்கள் ஆனால் அதிகாரிகளின் மெத்தனம்-திமுக தொண்டர்களை முன்னிறுத்தவில்லை
3.திமுக தொண்டர்கள் 70%மகிழ்ச்சியாக இல்லை(எதிர்பார்த்த அரசு வேலை இல்லை,பல இடங்களில் கட்சி்நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளால் நிராகரிக்கப்படுகறார்கள்)
4.2ம்,3ம் கட்ட நிர்வாகிகள்(Councilor,Thalaivar etc)மகிழ்ச்சி ஆனால் தொண்டன் செத்தாகூட நெற்றியில் காசு வைப்பதில்லை..
2h

Nazarathpettai Srinivasan
பசியில் இருந்தவன் எல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்து பிஸியா இருக்கான் இப்போ கட்சி கொள்கை னு 🤧

Shanmugam
சங்கி மங்கி என்று பாப்பான் என்று BJP க்கு எதிர்வினையாற்றுவதற்கே |Twing க்கு நேரம் சரியாக உள்ளது இந்த இடத்தில் கவனிக்கவும் நமது கவனம் முழுவதும் அவன் மீதே இருக்கும்படி நம்மை ஆட்கொண்டுவிட்டான் ஆனால் நாம் அதை புறந்தள்ளிவிட்டு நமது ஆட்சியின் சாதனைகளை மிகைபடுத்தவும் மக்களிடம் கொண்டுசெல்லவும் முயற்ச்சி செய்வோம் நிற்க இவ்விடத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் இதை கண்டுகொண்டார்களா இல்லை சரிவிடுங்க நிர்வாகத்திற்கு வருவோம் பொதுமக்கள் மிக முக்கிய தேவையான பொது போக்குவரத்துக்கு வருவோம் முற்றிலும் நீர் மூலம் ஆக்கிவிட்டார்கள் அமைச்சரும் அதிகாரிகளும் யாருடைய தேவைக்கு பணிசெய்கிறோம் என்றே இல்லாமல் அலச்சியப் போக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அதை சரிசெய்யவேண்டிய அல்லது கண்காணிக்கவேண்டிய அமைச்சர் எங்கே சரி விடுங்க அதிர்ப்தி எங்கே வருகிறது எதிர்பாத்த செயல்பாடுகள் இல்லை என்றால் அதிர்ப்தி வரத்தானே செய்யும் எதிரிக்கு பதில் சொல்வதை விட்டு தன்னை சரிசெய்துகொள்பவனே மிக சரியான புத்திசாலி இங்கே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கணித்து சொல்லுங்கள் ஒற்றைவரி நிர்வாக சீர்கேடு

K S Mani Dgl
.உண்மை

உதயசூரியன்
ஏன்?

Vincent Prabaharan
விஜய்யை உள் நுழைந்து கண்டிப்பாக ஓட்டு பிரிக்க பார்ப்பார்கள்.

Rajarajan Cholan
இப்புடித்தான் சங்கிகள் உருவாகிறார்கள். இவர்களை அறியாமல் அவாள் வலையில் விழுந்து. எப்போதுமே திமுக அரசுக்கு மட்டும்தான் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் சதி வலைகள் பின்னி இது போன்ற மாய பிம்பங்கள் உருவாக்க படுகின்றன. அமைதியா வேடிக்கை மட்டும் பாருங்க. இளைஞர் அணி மாநாட்டுக்கு பின் அதிரவலைகள் ஏற்படும்

கருத்துகள் இல்லை: