மாலை மலர் : பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தமிழக பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டிய அவர், பாஜக-விற்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுக-வினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் எனக் கூறினார்.
பாஜக உடனான கூட்டணில் இருந்து அதிமுக விலகிய பிறகு, பாஜக-வை சேர்ந்த பலரும் அதிமுக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாஜக-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், இன்று அதிமுக-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக