மாலைமலர் : ரஷ்ய போர்க்கப்பல் மீது வெற்றிகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இதற்கிடையே, கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. இதனை கவர்னர் மக்சிம் மார்சசென்கோவும் உறுதியளித்தார். ஆனால் ரஷியா இதற்கு மறுப்ப தெரிவித்தது.
இந்நிலையில், கருங்கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் மூழ்கியது என்றும் வெற்றகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால், கப்பலில் வெடிமருந்து வெடித்ததால்தான் தீப்பிடித்தது என்றும், அதன் விளைவாக ஏற்பட்ட சேதத்தால் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது அதன் சமநிலையை இழந்து கப்பல் மூழ்கியது என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக