நக்கீரன்-காளிதாஸ் : இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எளிய விலையில் நவீனமான முறையில் ஒரு கிலோ விறகில் அதிகபுகை இல்லாமல் ஐந்து நபர்களுக்குள் இருக்கும் குடும்பத்திற்கு மூன்று வேளை உணவையும் சமைக்கும் வகையில் விறகு அடுப்பை உருவாக்கியிருக்கிறது மக்களை ஆச்சர்யமடையச் செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நரத்தில் சிலம்பநாதன் தெருவைச் சேர்ந்த இளைஞர் வேல்முருகன். இவர் 12- ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். இவர் கவரிங் தொழில் மற்றும் விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் அவருக்கு ஊதுகுழல் ஊதியதால் வாய் வலி ஏற்படவே தொடர்ந்து ஊதுவதற்கு என்ன செய்வது என்பது குறித்து யோசித்து உள்ளார். அப்போது அருகில் இருந்த சிறிய மேஜை விசிறியைக் கழற்றி அதிலிருந்து ஒரு குழாய் வழியாகக் காற்று வருவது போல் வடிவமைத்துள்ளார். அப்போது செயின் செய்வதற்கு தொடர்ந்து நெருப்பு கிடைத்ததால், இவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Modernly made wood stove ... Awesome youth!
இதைத் தொடர்ந்து, நவீன முறையில் குறைந்த விலையில் விறகு அடுப்பைத் தயார் செய்ய வேண்டும் என அவர் முடிவு செய்து, பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளார். இதனைதொடர்ந்து நவீன விறகு அடுப்பு செய்யத் தேவையானப் பொருட்களை உருவாக்கியுள்ளார். பின்னர் வெல்டிங் பட்டறை மூலம் இவரின் எண்ணத்திற்கு ஏற்றவாறு ஒரு சிறிய அடுப்பில் ஒரு சிறிய மேஜை மின்விசிறியை வைப்பதற்கும் வடிவமைத்துள்ளார்.
நவீன முறையில் விறகு அடுப்பை உருவாக்கிய இளைஞர் வேல்முருகன் கூறுகையில், "இந்த அடுப்பில் 22 வாட்ஸ் கொண்ட சிறிய மின் விசிறிப் பொறுத்தப்பட்டுள்ளது. இது மூன்று நாளைக்கு தொடர்ந்து இயங்கினால், ஒரு யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். இந்த அடுப்பின் விலை ரூபாய் 1,800 மட்டுமே. இந்த அடுப்பு தற்போது மாடி வீடுகளில் எரிவாயு அடுப்பு உள்ள இடத்திலே வைத்துச் சமைக்கலாம்.
இதில் ஒரு வால்வு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுப்பை வேகமாகவும், சீராகவும் எரிய வைக்க முடியும். எரிவாயு அடுப்பைவிட மிக எளிதாக வேலையை முடித்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்ல வணிக பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும், இதனைத் தயார் செய்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக