ராதா மனோகர் : 7 - 5 - 1959 - எஸ் டி சிவநாயகம் - சுதந்திரன்:
கலப்பு திருமணம் செய்வோருக்கு நிதி உதவி
பகுத்தறிவு இயக்கம் மேற்கொண்டுள்ள முடிவு
சாதி ஒழிப்புக்கு கலப்பு திருமணம் எவ்வளவு உபயோகமானது என்பதை பொதுமக்களுக்கு எடுத்து விளக்குவது என்றும் கலப்புத்திருமணம் செய்ய முன்வரும் ஆண் பெண் இருபாலாருக்கும் ஊக்கம் அளிப்பதோடு வேண்டிய உதவி புரிவதென்றும் அகில இலங்கை பகுத்தறிவு இயக்கம் தீர்மானித்துள்ளது.
மேற்படி இயக்கம் வெளியிட்டுள்ள நிர்வாக அறிக்கையில் பிரஸ்தாப தீர்மானம் இடம் பெற்றிருக்கிறது
அறிவுப்பணி புரிவதை இலக்காக கொண்டு மட்டக்களப்பில் அரும்பிய பகுத்தறிவு இயக்கம் 1956 இல் பல ஊர்களிலும் வேரூன்றி தழைத்த வரலாறும்,
அடுத்த வருடத்தில் எல்லாவற்றுகுமாக தலைமை கழகம் ஒன்று உருப்பெற்ற விபரமும்.
அன்று சிலரோடு இருந்த இயக்கம் இன்று மொத்தம் 2190 உறுப்பினர்களை கொண்டு பெரும் சக்தியாக திகழும் தகவலும் நிர்வாக அறிக்கையில் தரப்பட்டிருக்கிறது.
இன்னும் சமூக சீர்திருத்தம் சாதி ஒழிப்பு ஆகிய துறைகளில் இயக்கத்தின் சாதனைகளும் கொள்கை விளக்கமும் நடைபெற்ற நிகழ்ச்சி குறிப்புக்களும் நடக்கவிருக்கும் வேலைத்திட்டங்களை தரப்பட்டிருக்கின்றன .
குறிப்பாக சாதி ஒழிப்பு விடயத்தில் இயக்கம் கட்டுரைப்போட்டி நடத்தியும், சிறுபான்மை சமூகத்தினருக்கு சமபந்தி போசனம் நடத்தியும் தேநீர் கடை பிரவேச போராட்டத்திற்கு ஆதரவு நல்கியும்,
கேரத்தீவில் மீன் பிடி தொழிலாளர் வீடு கட்டி வாழ அரசாங்கத்திடம் வாதாடி நிலம் பெற்று கொடுத்தும் பணி செய்து இருப்பதாக அறிக்கையில் சுட்டி காட்டப் பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்காக தெருவில் உள்ள 71 இலக்கத் இல்லத்தில் இயக்கம் ஒரு பதிப்பகத்தை நடத்தி வருகிறது என்றும் அதே இல்லத்தில் இருந்தே யாழ்ப்பாண கிளை இயங்கி வருகிறது என்றும் அறிக்கையில் மேலும் குறிப்பிட பட்டிருக்கிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக