சனி, 16 ஏப்ரல், 2022

இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடம் பெயரும் இந்தி பேசும் மக்கள் .. எதற்காக இந்தி இணைப்பு மொழி?

 மகாராஷ்டிராவில் இந்தியை விருப்ப மொழியாக எடுத்தவர்கள் 52.1 சதவீதம பேர்,
ஒடிஸாவில் 18.8 சதவீதம் பேர்,
கர்நாடகாவில் 12.3 சதவீதம் பேர்
கேரளாவில் 9.1 சதவீதம் பேர்,
ஆந்திராவில் 12.6 சதவீதம் பேர்,
தமிழ்நாட்டில் 2.1 சதவீதம் பேர் .

 Vishnupriya R -   Oneindia Tamil :   டெல்லி: இந்தி பேசும் மாநிலத்தினர் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலையில் இந்தி மொழியை ஏன் இணைப்பு மொழியாக கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து ஒரு புள்ளிவிவரமும் விளக்குகிறது.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
தென்னிந்தியாவில் இந்தி திணிப்பு என்பது மீண்டும் துளிர்விட தொடங்கிவிட்டது. ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி மொழி என அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையில் இதற்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவிலேயே இந்தியை தாய் மொழியாக கொண்ட மக்கள் குறைவாக உள்ள நிலையில் எதற்காக இந்தியை இணைப்பு மொழி என்ற கேள்வி எழுகிறது.


இது குறித்து ஒரு நாளேட்டில் வெளியான புள்ளிவிவரங்களில் இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் 26 சதவீதம் மட்டுமே உள்ளன. ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களிலும் இந்தியை சிறப்பாக பேசி வருகிறார்கள். இந்தி அதிகம் பேசும் மாநிலத்தவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.

இதற்கு காரணம் வேலைவாய்ப்பு. இந்தி பேசும் மாநிலங்களில் இருப்பதை விட இந்தி பேசாத மாநிலங்களில் அதிக அளவு வேலைவாய்ப்பு இருக்கிறது. தென் இந்தியாவில் மிகவும் குறைந்த அளவிலான சதவீதத்தினரே இந்தியை பேசுகிறார்கள். அது போல் இந்தியை இரண்டாவது மொழியாகவோ மூன்றாவது மொழியாகவோ எடுத்தவர்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

அதில் மகாராஷ்டிராவில் இந்தியை விருப்ப மொழியாக எடுத்தவர்கள் 52.1 சதவீதம பேர்,
ஒடிஸாவில் 18.8 சதவீதம் பேர்,
கர்நாடகாவில் 12.3 சதவீதம் பேர்
கேரளாவில் 9.1 சதவீதம் பேர்,
ஆந்திராவில் 12.6 சதவீதம் பேர்,
தமிழ்நாட்டில் 2.1 சதவீதம் பேர் ஆவார். எனவே தென்னிந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலானோரே இந்தியை விருப்பப்பாடமாக தேர்வு செய்துள்ளார்கள்.

இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களில் 16.92 லட்சம் பேர் வேறு இந்தி பேசாத மாநிலங்களுக்கு சென்றுள்ளார்கள். அது போல் இந்தி பேசாத மாநிலங்களில் 9.97 சதவீதம் பேர் இந்தி பேசும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். பணிநிமித்தமாக இந்தி பேசாத மாநிலங்களில் 2.78 லட்சம் பேரும் கல்விக்காக 12,092 பேரும் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: