செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

ஏர் இந்தியா ஊழியர்கள் சோகம்.. ஏர் ஹோஸ்டஸ்-க்கு புதிய கட்டுப்பாடு விதித்த டாடா..!

பயணிகள் - விருந்தினர்

Prasanna Venkatesh -   GoodReturns Tamil  :  ஏர் இந்தியாவை தூக்கி நிறுத்த டாடா அதிரடி... ஊழியர்களுக்கு புதிய உத்தரவுகள்...
டாடா குழுமம் 69 ஆண்டுகளுக்குப் பின்பு தனது ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ள நிலையிலும்,
சந்திரசேகரனுக்கு மீண்டும் 5 ஆண்டுக் காலப் பணிக் காலம் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் ஏர் இந்தியாவில் ஏற்கனவே திட்டமிடப்படி வாடிக்கையாளர்கள் சேவை,


ஆன் டைம் விமானச் சேவைகளை மேம்படுத்த முடிவு செய்து கடுமையான நடவடிக்கைகளை ஆரம்பம் முதல் எடுத்து வருகிறது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தில் இருக்கும் டாடா குழுமத்தின் நிர்வாகம் சில முக்கியமான கட்டுப்பாடுகளை ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் ஏர் ஹோஸ்டஸ்-க்கு விதித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவைகளை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர வாடிக்கையாளர் சேவையை முக்கியம் எனக் கருதும் டாடா குழுமம் பயணிகளுக்கு ஆன் டைம் சேவையை அளிப்பதற்காக ஊழியர்களுக்கும், ஏர் ஹோஸ்டஸ்-க்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது ஏர் இந்தியா ஊழியர்களுக்குச் சுமையாக மாறியுள்ளது.
ஏர் இந்தியா விமானச் சேவையின் ஏர் ஹோஸ்டஸ் அனைவரும் கட்டாயம் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான நகைகளை மட்டுமே அணிய வேண்டும், தேவையில்லாமல் அதிகப்படியான நகைகளை அணியக் கூடாது என உத்தரவிட்டுள்ளது

நகைகளுக்குக் கட்டுப்பாடு டாடா நிர்வாகம் ஏற்கனவே அனைத்து ஏர் இந்தியா ஊழியர்களையும் நேர்த்தியான மற்றும் எளிமையான உடைகளையும், மேக்அப் செய்துகொள்ள உத்தரவிட்ட நிலையில் தற்போது நகைகளுக்குப் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஏர் ஹோஸ்டஸ் குறைந்த அளவிலான நகைகளை அணிவது மூலம் கஸ்டம்ஸ் மற்றும் செக்யூரிட்டிகளில் செக்கிங் நேரம் குறையும் என டாடா தெரிவித்துள்ளது.

டியூட்டி ப்ரீ கடைகள் - இதோடு ஏர் ஹோஸ்டஸ் மற்றும் கேபின் க்ரூ ஊழியர்கள் அனைவரும் விமானப் பணிகளுக்குச் செல்லும் முன்பு டியூட்டி ப்ரீ கடைகளுக்கு அதாவது வரி இல்லாமல் விற்பனை செய்யப்படும் கடைகளுக்குச் செல்வதைக் குறைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது விமானத்திற்காகக் காத்திருக்கும் பயணிகளுக்குக் காலதாமதம் ஏற்படலாம் என டாடா நிர்வாகம் நினைக்கிறது.

ஆன் டைம் விமானச் சேவை ஏர் ஹோஸ்டஸ்-கள் மற்றும் கேபின் க்ரூ ஊழியர்கள் நேரடியாகக் கஸ்டம்ஸ் மற்றும் செக்யூரிட்டி செக்கிங் முடிப்பதன் மூலம் ஆன் டைம் விமானச் சேவைகள் கட்டாயம் மேம்படும். மேலும் டூட்டி ஃப்ரி ஷாப்க்கு சென்று பொருட்களை வாங்குவதன் வாயிலாகவும் பாதுகாப்புச் சோதனை தாமதமாகும். இதனால் போதுமான அளவில் விமானப் பணிக்குச் செல்லும் போது அதைத் தவிர்த்துக்கொள்ள டாடா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதோடு ஏர் ஹோஸ்டஸ் மற்றும் கேபின் க்ரூ ஊழியர்கள் விமானத்தில் பயணிகளை ஆன்போர்டு செய்யும் முன் அல்லது ஆன்போர்டு செய்யும் போது சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சின்ன சின்ன மாற்றங்கள் கட்டாயம் வாடிக்கையாளர் சேவையிலும் ஆன் டைம் விமானச் சேவையிலும் முன்னேற்றம் தென்படும் என டாடா நம்புகிறது.

 பயணிகள் - விருந்தினர் மேலும் ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவருக்கும் பயணிகளை நடத்துவதிலும், பயணிகளுடன் பேசுவதிலும் அதிகப்படியான அக்கறை செலுத்த வேண்டும். இதற்காக டாடா விமானப் பயணிகளை விருந்தினர் என அழைக்கத் துவங்கியுள்ளது. தற்போது வெளியான அறிவிப்பு அனைத்திலும் விருந்தினர் என்ற டாடா குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: