Sharmila Seyyid : யமுனா ராஜேந்திரன் உங்களுக்கு இருப்பதை விடவும் அதிக தெளிவும் உரிமையும் ஹிஜாப் விவகாரம் குறித்து பேச எனக்கு இருக்கிறது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணி அனுபவம் பெற்றவள்.
இன்னமும் என் சமூகப் பணியை பெண்களுக்காக பல வழிகளில் தொடர்கிறேன்.
நான் வேலை செய்தது தமிழ் முஸ்லிம் பெண்களுடன். முஸ்லிம் பெண்களின் நாடி தெரிந்தவள் நான்.
என் 6 ஆம் வகுப்பில் இருந்து 23 வயதுவரையும் ஹிஜாப் அணிந்துள்ளேன்.
ஹிஜாப் அணிந்தால் எப்படி இருக்கும், இல்லாமல் எப்படி இருக்கும் என்று எனக்கு உணர்வுபூர்வமாகத் தெரியும்.
அதை அணிந்தால் சமுகம் எப்படிப் பார்க்கும் களைந்தால் என்ன சொல்லும் என்றும் தெரியும்.
முழுவதையும் அனுபவித்து அறிந்து தெளிந்து பேசுகிறேன்.
என் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் உளறுவதை விடவும் தெளிவாக முன்வைத்துள்ளேன்.
தமுஎகச நிகழ்வில் நான் சொன்ன தகவல்கள் எது 'பொருத்தமற்றது' சொல்லுங்கள். பேசியதில் என்ன முரண் என்று நிரூபியுங்கள். என்னை அழைத்திருக்கவே கூடாது என்று சொல்ல நீங்கள் யார்?
இன்னும் 'தெளிவாக' நான் என்ன சொல்லணும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதோடு இதெல்லாம் முடிவு செய்யும் அதிகாரம் உங்களுக்கு எப்படி வருகிறது என்றும்.
நானும் ஹிஜாப் போட்டுக் கொண்டு பேசி இருந்தால் சிலவேளை பொருத்தமாக இருந்திருக்குமோ?
நீங்கள் பலர் இங்கு இந்த ஹிஜாப் அரசியலை பேசுவதை விடவும் நான் நேர்மையாக அணுகினேன் என்ற சுய தெளிவும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
இங்கே யாருக்கும் கொடி பிடிக்கும் அவசியம் எனக்கில்லை. சந்தர்ப்பவாத / பிழைப்புவாத அரசியல் நாடகத்தில் எனக்கு எந்த அந்தஸ்தும் வேண்டியதுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக