B.H. Abdul Hameed: எத்தனையோ கலைஞர்கள் ஏற்றம் பெற, ஏனியாய் நின்றுழைத்த ஜோசுவா ராஜன் மறைந்தார் என்ற செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது….
குரல் மூலம் மட்டுமே அறிந்திருந்த தமிழக மக்களுக்கு எனது முகத்தை,
முதன்முதலில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி ‘மதுரா இசை விழா’. இந்திய சுற்றுலா ஆண்டை முன்னிட்டு,அன்புச் சகோதரர் கலைமாமணி VKT.பாலன், ஏற்பாடு செய்த அந்தப் பிரமாண்டமான இசைநிகழ்ச்சியில் அத்தனை இசைக்கலைஞர்களையும் ஒருங்கிணைத்து வழிநடத்தியவர் திரு. ஜோசுவா ராஜன்.
உச்ச நட்சத்திரக் கலைஞர்கள் அனைவருமே நன்றியுடன் நேசிக்கும் அளவு அன்பும் பண்பும் நிறைந்த அற்புதக் கலைஞர்.
அதன் பிறகு அவருடன் எத்தனையோ கலைப் பணிகள், பயணங்கள். ‘வாணி… அருள் தர வாநீ… என அடியேன் எழுதியவரிகளுக்கு நொடிப்பொழுதில் அவர் மெட்டமைக்க, இசையரசர் TMS பாடிய நினைவு இன்றும் பசுமையாக நினைவில் நிழலாடுகிறது. நல்ல இசைக் கலைஞனாக மட்டுமல்ல நல்ல மனிதராகவும் வாழ்ந்த நிறைவோடு தன் 80வது அகவையில் மறைந்த, அன்பர் ஜோசுவா ராஜனின் ஆன்மா நற்பேறு அடைய பிரார்த்தனைகள். அவரை இழந்து துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக