புகச்சோவ் : மதவாதிகளின் சின்டிகாலிசம்.....!? 11)
அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்படுகிறவர்களுக்கும் இடையேவுள்ள கலாச்சார வேறுபாடானது, எவ்வளவு அதிதீவிரமானதாக இருக்கிறதோ, அவ்வளவு பரஸ்பர எதிர்ப்பை தூண்டியெழச்செய்கிறது. ஆதிக்க தரப்பு வெற்றிபெறுவதை தடுக்கிறது. அதுபோலவே,அந்த கலாச்சார வேறுபாடு குறைவாக இருந்தால், கலாச்சார ஒற்றுமை அதிகமாகவிருந்தால்! அடக்குமுறையின் கை ஓங்குகிறது, எதிர்ப்பும் குறைவாகப்போய்விடுகிறது. ஆதிக்க சக்திகளின் வெற்றியும் இலகுவாகிவிடுகிறது!
: - பிரமிள்
அக்சிலிஸும், உலிசெஸும் ஒரு நூற்றாண்டு போரிட்டனரே ப்ரமிள்!?
ட்ராயின் சாம்பலை காண உலக மக்கட்தொகையில் 25% பேர் சண்டையிட்டு அழிந்துபோயினரே ப்ரமிள்...!?
அவர்களுக்குள் நெருங்கிய கலாச்சார தொடர்புண்டே ப்ரமிள்...!?
2500 ஆண்டுகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு, மாபெரும் தமிழகத்தை பிராமண்யத்திடம் விற்றனரே சேரசோழபாண்டியர்கள்! அவர்களிடத்தே நெருங்கிய கலாச்சார தொடர்பிருந்ததே ப்ரமிள்....!?
ஆம்! ப்ரமிள்கள் தூக்கிப்பிடித்த கலாச்சாரங்களை சீரழிந்துவிடாமல் காத்துக்கொள்வதுதான், பிராமண சின்டிகேட்டின் முதல்வேலையாக இருந்தது.
மடாதிபதிகளின் தலையாய வேலையாக இருந்தது. அதுபோல, அஹிம்சையின் வேலையும் அதுவாகத்தானிருந்தது. இதற்கு தோதாக பிராமண சின்டிகேட் உருவாக்கிய கம்யூனிஸ்ட்களுக்கு, ஒரு அஸைன்மென்ட் தரப்பட்டது.
அதாவது, மார்க்ஸியமென்பது பாட்டாளிகளுடையதல்ல! அது கீதையின் சாரமே! வேதத்திலும்,ஸ்மிருதிகளிலும், கடோபநிடதத்திலும் பகவான் ஏற்கெனவே சொல்லியிருப்பதுதான் மார்க்ஸியம். இந்துத்வ ஆன்மஞானத்தின் மெய்யொடுக்கமே மார்க்ஸியம். அத்வைதமும், த்வைதமும் கலந்துகட்டியதுதான் மார்க்ஸியம். அகவய மார்க்ஸியமே இந்தியாவுக்கு தேவையானதாகும். அப்படியிருந்தால் மட்டுமே இந்தியாவின் கலாச்சார நெறிகள் சிதையாமலிருக்கும். ஆன்மீகத்தின்படியான மதசீர்திருத்தங்களை வேண்டுமானால் அனுமதிக்கலாம். ஆனால், எக்காரணங்கொண்டும் இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கிற நிலை வரக்கூடாது. அது தேசத்தின் சுயசார்பு பொருளாதாரத்தை நாசமாக்கிவிடும். ஒருபுறம் அஹிம்சையின் கலாச்சார பாதுகாப்பும், மறுபுறம் மடாதிபதிகளின் கலாச்சார புத்துணர்ச்சியூட்டலும், இன்னொருபுறம் மார்க்ஸியத்தையே இந்துத்துவமாக மாற்றிக்கொள்கிற முயற்சியுமாகவே, அந்த காலகட்டம் முழுக்க போராளிகளின் உழைப்பெல்லாம் வீணடிக்கப்பட்டது.
இதற்கெல்லாம் மாறாக, பிராமண சின்டிகேட்டுகளின் எந்தவித கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்துகொண்டு, திராவிடமென்றொரு மார்க்ஸிய தொடர்புடைய பொருள்முதல்வாத சித்தாந்தம் மேலெழுந்தது. அதைப்போலவே! அதனோடு சேர்ந்தே, மார்க்ஸியர்களில் பிராமண ஆதிக்கத்தை மறுக்கும் அல்லது மார்க்ஸியத்தை ஆன்ம அகவயமாக சுருக்குவதை எதிர்த்த, உண்மையான மார்க்ஸியர்களும் திரண்டெழுந்து, இந்தியாவின் கலாச்சார முகத்தின்மீது காறியுமிழத்தொடங்கினர். பிராமண்யம் முதன்முதலாக அப்போதுதான் மரணபயத்தை அறிந்துகொண்டது. பிராமண்ய சின்டிகேட் அப்போதடைந்த பீதியில், எதைச்செய்யவேண்டுமென்பதே அவர்களுக்கு மறந்துபோனது. மழுங்கியும்போனது.
அப்போதுதான், பிராமண சின்டிகேட் உடையவாரம்பித்தது. ஆனால் கட்டுக்கோப்பை விட்டுவிடாமலேயே, சிதறிச்சிதறி, இந்தியாவின் எல்லா இயக்கங்களிலும் ஊடுருவ ஆரம்பித்தது. ஆனால், ஊடுருவியாகிவிட்டது! எனில் என்ன செய்யவேண்டும் என்பதில் தீர்மானகரமான வழியொன்றும் இல்லாதிருந்தது. அதைப்போக்கத்தான் ஐரோப்பிய புரட்சிகள் தோற்கடிக்கப்பட்ட வரலாறுகள் ஏராளமுள்ளதே! அந்த வழிகளை மேற்கொள்ள எதை ஆக்ரமிப்பது.....!?
தொடரும்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக