Rajkumar Rajkumar · : திமுக இணையதள நண்பர்கள்
பழைய மனைவிக்கு பல்லு போய் விட்டது என புது மனைவியை தேடி வந்த புதுமாப்பிளை போல
இன்று திமுகவில் புது வரவுகளாக *இணைந்து வருகின்றனர்.*
கடந்த மே 7 வரை நம் திமுக வை தோற்கடிக்க வரிந்து கட்டி வேலை பார்த்தவர்கள்.
திமுக வென்று வெற்றி வாகை சூடிய பின் சூழ்ந்து கொண்டனர்
தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளவும் வருமானம் தேடவும்
பத்தாண்டு ஆட்சியில் இல்லாத நேரத்தில் அதிமுக வினரின் மிரட்டுலுக்கும் அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது தன் கொள்கையை நெஞ்சில் நிறுத்தி கொண்டு திமுக கரை வேட்டியை தன் இடுப்பில் கட்டிக் கொண்டு உழைத்த உண்மை கழக தொண்டர்கள் இன்று வரை அடைந்த பலன் என்ன ??
பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பால்வாடி முதல் அங்கன்வாடி வரை அரசு துறை வேலைகளில் சேர்ந்தோர் அதிமுக வினரே அதிகம். !!
அதிமுக வை சேர்ந்தவர்களுக்கே அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது..!!
அந்த விசுவாசத்தின் அடிப்படையில் தான் இன்னும் அதிமுக கரைவேட்டிகளை நம் கண் எதிரே காணவும் முடிகிறது..!!
ஆனால்
நம் திமுகவானது ஆட்சியில் அமர்ந்த பொழுதெல்லாம் கழக தொண்டர்களின் படித்த வாரிசுகளுக்கு அரசு பணிகள் வழங்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
மேலும் கொடுத்து வாங்கும் நிலையில் தொண்டர்களின் வருமானமும் இல்லை.
கட்சிக்கு தன் விலை மதிப்பற்ற தன்னலமில்லாத உழைப்பை காணிக்கை ஆக்கிய தொண்டர்கள் பெரும் பாலானோர் வறுமையின் பிடியில் தான் இன்னமும் இருக்கின்றனர்.
பத்தாண்டுகள் இழந்த ஆட்சியை தங்களின் உழைப்பால் மீட்டு கொடுத்த நம் கட்சி தொண்டர்களுக்கு ஆளும் கட்சியாய் இப்போது இருக்கும் வேளையில்..
கட்சி தலைமை அவர்களுக்கு எவ்வாறு உதவ போகிறது ..!! ??
தொண்டர்களின் குடும்ப வாழ்க்கை மேம்பட என்ன திட்டத்தை தீட்ட போகிறது...!! ??
இந்த பதிவை படிப்பவர்கள்
"நாங்கள் கட்சிக்காக பிரதி பலன் எதிர்பாராது உழைக்கிறோம்" என்று சொன்னால் அது உங்களது பெருந்தன்மை..!!
ஆனால்
உங்களை போல் கட்சி தொண்டர்கள் அனைவரும் நடுத்தரமாக, வசதிகள் உள்ளவர்களாக, அனைவரையும் கருதக்கூடாது..!!
எத்தனையோ உடன்பிறப்புகளின் பிள்ளைகள் படித்தும் வேலையின்றி தவிக்கிறார்கள் ...
அதை வெளி காட்டாது அவர்கள் வேறு கட்சிக்குளுக்கும் தாவாது அவர்களது பெற்றோர் திமுக வே தன்னுயிரென உழைக்கின்றனர்.
வீட்டில் இரவு உணவு சாப்பிடும் வேளையில் கூட உடன்பிப்புகளின் குடும்பத்தில் எழும் பேச்சு இது
"" என்னங்க நம்ம திமுக ஆட்சியில நம்ம பையனுக்கு அரசு வேலை கிடைச்சிடுமா ??""
இப்படி ஒரு ஏக்கமான சொல் எழாத குடும்பமே இல்லை
காரணம்
இது நம் திமுக தொண்டர்களின் உண்மையான குடும்ப நிலை .
கழகத்தின் அடிமட்டத்தில் உள்ள அனைவரது குரலாக இதை பதிவிட்டுள்ளேன் யாரையும், யாரோட மனதையும் புண்படுத்தும் வகையில் இருந்தால்... அதற்காக மன்னிப்பு கோரவும் மாட்டேன் ஏனெனில் நாங்கள்எங்கள் கழகத்தில் எங்கள் தலைவரிடம் எங்களுக்கான உரிமையை கேட்கிறோம்.
உங்களை நம்பியுள்ள, உங்களையே தெய்வமாக வணங்கிக் கொண்டுள்ள ஒவ்வொரு தொண்டனின் குடும்பமும் மகிழ்ச்சியாக சிரிக்க வேண்டும். அதற்கு தாங்கள் தான் உதவவேண்டும். நமது ஆட்சியில் "இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை" 🙏🙏🙏🙏
கழகத்தலைவரே!
நீங்கள் தான் தொண்டனை காக்க வேண்டும்.
-- வாட்சப் பகிர்வு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக